மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி2, 2010

இலங்கை சட்ட மாணவர் தமிழ் மன்ற வெளியீடு – “நீதிமுரசு”


இலங்கை சட்டக் கல்லூரியின் 60 ஆண்டுகள் நிறைவையொட்டிய சட்ட மாணவர் தமிழ்மன்றத்தின் வருடாந்த கலைவிழாவும், 44வது நீதிமுரசின் வெளியீடும் கடந்த 30.01.2009 அன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவருமான நீதியரசர் அமீர் இஸ்மாயில் சிறப்பு விருந்தினராகவும், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளும், விவாதங்களும் மிகவும் அருமையான கருத்துக்களை சமூகத்திற்கு எடுத்துக் கூறுபவையாக அமைந்தது சிறப்பு.

கார சாரமாக வாதாடிய ரோயல் கல்லூரி மாணவர்களும், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களும் உணர்வு பூர்வமாக பேசி அசத்தினர்.

விவாதம் என்பது யார் சரி என்பதைத் தீர்மானிப்பது. கலந்துரையாடல் என்பது எது சரியென்பதைத் தீர்மானிப்பது என்பது மூத்தோர் வாக்கு.

நீதிமுரசு இதழின் முதல் பிரதியை இதழாசிரியர் நிர்மலா வாஸிடமிருந்து கெளரவ விருந்தினர் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் பெற்றுக் கொண்டார்.

மேலும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும், பார்வையாளர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்