மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி18, 2020

இளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்


இளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டமானது இலங்கையின் பல பிரதேசங்களை மற்றும் ஊடக நிறுவனங்களை பிரதித்துவப்படுத்தும் சுமார் 20 (9–சிங்களம், 4–தமிழ், 7-முஸ்லீம்) இளம் ஊடகவியலாளர்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நீர்கொழும்பில் இடம்பெற்றது. இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடனும் கைபேசியினை பயன்படுத்தி கதைகூறும் “மோஜோ” பயிற்சியினை உள்ளடக்கியதாகவும் இச்செயற்றிட்டமானது இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்றிட்ட அங்குராப்பண நிகழ்வானது SDJF நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பேராசிரியர் பத்மஸ்ரீ வணிகசுந்தர அவர்களின் வருகையினை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. இச் செயற்றிட்டம் தொடர்பான அறிமுகம் மற்றும் மேலதிக விளக்கங்கள் SDJF செயற்றிட்ட ஊழியர்கள் ஊடக தெளிவுபடுத்தப்பட்டதுடன் இந்த பயிற்சியில் பங்கு பற்றிய ஊடகவியலாளர்களுக்கு மோஜோ கிட்ஸ் (MoJo kits) களும் வழங்கப்பட்டன.

இச் செயற்றிட்டமானது அனுபவம் வாய்ந்த வளவாளர்களான Mr. T. M. G சந்திரசேகர, specialist, Strategic Communications, ICTA, Mr. ஷான் விஜேதுங்க, Director Communications, இலங்கை பாராளுமன்றம், Ms. தாரிணி பிரிஸ்சிலா, பத்திரிகை ஆசிரியர், Bakamoono.lk, Mr. ஷிஹார் அனீஸ், ஆய்வாளர், Global Press Journal, Mr. K. C சாரங்க, செய்தி பொது மேலாளர், TV தெரன, Mr. மொஹமட் பைறூஸ், பத்திரிகை ஆசிரியர், விடிவெள்ளி, Mr. கபில ராமநாயக, MoJo பயிற்சியாளர் மற்றும் SDJF நிறுவன வளவாளர்களான மொஹமது அஸ்வர் மற்றும் ருவான் போகமுவ ஆகியோரினால் நடாத்தப்பட்டது.

பயிற்சியின் ஒரு பகுதியாக ஊடகவியலாளர்கள் அனைவரும் அண்மையில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி ஒரு வீடியோ கதை உருவாக்குவதற்கான பிரயோக பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு ஊடகவியலாளரும் இறுதியில் ஒரு வீடியோ கதையினை உருவாக்கினார். அதனடிப்படையில் செயற்றிட்ட முடிவில் குறித்த கிராமத்தில் காணப்படும் சமூக பிரச்சினைகள் சம்பந்தமான 20 வீடியோ கதைகள் உருவாக்கப்பட்டன.

இப் பயிற்சியினைத் தொடர்ந்து பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் வேறுபட்ட கலாசார பின்னணியினை கொண்ட ஏனைய ஊடகவியலாளர்களுடன் சோடிகளாக 7 நாட்கள் கொண்ட கள விஜயத்தினை மேற்கொண்டு குறித்த சமூகத்தின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் செயற்பாடுகளை புரிந்துகொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகளை பல் ஊடக (Multi Media) கதைகளாக உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களினுடாக வெளியிடுவார்கள்.  

IREX நிறுவனத்தின் பிரதிநிதிகளான Ms. Alicia Phillips Mandaville, the Vice President of Global Program மற்றும் Ms. Jean Mackenzie, Chief of Party, IREX Sri Lanka, மற்றும் பலர் செயற்றிட்டத்தின் போது வருகை தந்து கதை உருவாக்கும் செயற்பாடுகளை அவதானித்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மீடியாகோர்ப்ஸ் செயற்றிட்டத்தினுடாக இதுவரை சுமார் 112 இளம் ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளமை விசேட அம்சமாகும். இவ் MediaCorps புலமைப்பரிசில் திட்டமானது ஓர் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தல் (MEND) எனும் செயற்றிட்டத்தின் கீழ் USAID மற்றும் International Research and Exchanges Board (IREX) நிறுவனங்களுடன் ஒண்றிணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தினை பிரவேசியுங்கள் http://www.Ldjf.org


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: