மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்1, 2011

அக்குரோணி – நேரடி ஒளிபரப்பு


03.04.2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மனிக்கு இடம்பெறவுள்ள மன்னார் அமுதனின் அக்குரோணி கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளை சர்வதேசத் தோழர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இவ்வலைபூவின் இத்தொடுப்பின் ஊடாகவும் முகப்புத்தகத்தின் ஊடாகவும் காண முடியும்.

 

Watch live streaming video from amujo at livestream.com

குறிப்பு:
அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109,350 காலாட்களையும் கொண்ட (மொத்தம் 2,18,700) ஒர்படைத்தொகை…

அக்கோணி,அக்கோகிணி,அக்கௌகிணி என்பவை அக்குரோணியின் அரும்பதங்களாகத் தமிழ் அகராதியில் இடம்பெற்றுள்ளன… இத்தகைய பலம் பொருந்திய ஒரு படையைப் போன்று சமுகக் கருத்துக்களைத் தாங்கி வரும் என் நூலும் வலிமை மிக்கதாக இருக்க வேண்டுமென்றே அக்குரோணி என்று பெயரிட்டுள்ளேன்…

மன்னார் எழுத்தாளர் பேரவையின் இரண்டாவது வெளியீடாக வெளிவரும் அக்குரோணிக்கு அணிந்துரையை பேராதெனிய பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலைநிதி துரைமனோகரனும், வாழ்த்துரைகளை கவிஞர் மேமன்கவியும், கவிஞர் வித்யாசாகரும் (குவைத்) நூலாசிரியர் பற்றிய குறிப்பை கவிஞர் நாச்சியாதீவு பர்வீனும் வழங்கியுள்ளார்கள்.

அக்குரோணியை வாசியுங்கள்… ஆக்கபூர்வமானதாக உள்ளதா இல்லையா என்பதை உங்கள் கருத்துக்கள் மூலமாகத் தெரியப்படுத்துங்கள்…. உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்..

நன்றி – மன்னார் அமுதன்


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்