அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109,350 காலாட்களையும் கொண்ட (மொத்தம் 2,18,700) ஒர்படைத்தொகை…
அக்கோணி,அக்கோகிணி,அக்கௌகிணி என்பவை அக்குரோணியின் அரும்பதங்களாகத் தமிழ் அகராதியில் இடம்பெற்றுள்ளன… இத்தகைய பலம் பொருந்திய ஒரு படையைப் போன்று சமுகக் கருத்துக்களைத் தாங்கி வரும் என் நூலும் வலிமை மிக்கதாக இருக்க வேண்டுமென்றே அக்குரோணி என்று பெயரிட்டுள்ளேன்…
மன்னார் எழுத்தாளர் பேரவையின் இரண்டாவது வெளியீடாக வெளிவரும் அக்குரோணிக்கு அணிந்துரையை பேராதெனிய பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலைநிதி துரைமனோகரனும், வாழ்த்துரைகளை கவிஞர் மேமன்கவியும், கவிஞர் வித்யாசாகரும் (குவைத்) நூலாசிரியர் பற்றிய குறிப்பை கவிஞர் நாச்சியாதீவு பர்வீனும் வழங்கியுள்ளார்கள்.
அக்குரோணியை வாசியுங்கள்… ஆக்கபூர்வமானதாக உள்ளதா இல்லையா என்பதை உங்கள் கருத்துக்கள் மூலமாகத் தெரியப்படுத்துங்கள்…. உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்..
நன்றி – மன்னார் அமுதன்
========நூல் வெளியீடு பற்றிய தகவல்=======
எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி (03-04-2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 05.05க்கு எனது (மன்னார் அமுதன்) இரண்டாவது கவிதை நூலான அக்குரோணி வெளியீட்டுவிழா இலக்கம்:57, உருத்திராமாவத்தை, கொழும்பு-06 இல் உள்ள கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மருத்துவக் கலாநிதி.எம்.கே.முருகானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதான பொறுப்பாசிரியர் திரு.வி.தேவராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கின்றார்.
இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு முதற்பிரதியைப் பெற்றுக் கொள்வார்.சிறப்பு அதிதிகளாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளரான திரு.இரகுபதி பாலஸ்ரீதரன் மற்றும் கலை இலக்கியப் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.சோ.தேவராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். மேலும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.மு.கதிர்காமநாதனும் சட்டத்தரணியும், இலக்கிய ஆர்வலருமான திரு.ஜி.இராஜகுலேந்திரா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
அக்குரோணி நூல் பற்றிய அறிமுக உரையை சக்தி பண்பலையின் தயாரிப்பாளரான திரு.ஆ.இராஜ்மோகன் ஆற்றவுள்ள அதேவேளை கவிஞர், நூல்விமர்சகர், பத்தி எழுத்தாளர் எனப் பல்துறையில் கால்பதித்த பன்முகப் படைப்பாளி கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் நூல் நயவுரையை ஆற்றவுள்ளார். நூல் வெளியீடு பற்றி கவிஞர் சடாகோபனும், பேச்சாளர்.என்.கே.அசோக்பரனும் கருத்துரைக்கவுள்ளனர்.
வரவேற்புரையை கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளரான திரு.அம்புறோஸ்பீட்டரும், தமிழ்மொழி வாழ்த்தை திருமதி மைதிலி அமுதனும் இசைப்பார்கள். நிகழ்வுகளை ஊடகவியலாளரும், வலைப்பதிவருமான திரு.நிர்சன் இராமானுஜம் நெறிப்படுத்தவுள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவில் சக்தி இசை இளவரசர்கள் புகழ் திரு.லோகேஷ்வரனின் இன்னிசைப் பாடல்களும் இடம்பெறும்.
இலக்கிய ஆர்வலர்கள், வலைப் பதிவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்
அனைவரும் வருக ….. தமிழ்ச்சுவை பருக…..
நன்றிகள்:
அக்குரோணி நூல் வெளியீடு தொடர்பான செய்திகளையும், எனது நேர்காணல்களையும் வெளியிட்டு வரும் இலங்கை தேசிய பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், பண்பலைகளுக்கும் என் நன்றிகள்.
குறிப்பு:
27-03-2011 ஞாயிறு வீரகேசரியில் இடம்பெற்றுள்ள எனது பேட்டி:
Dan தொலைக்காட்சியில் 03.04.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு எனது நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது..
என் அன்புத் தம்பியின் எழுத்திற்கான சிறப்பு அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவதில் முழு நிறைவும் மகிழ்வும் கொண்டு மேலும் பல நல் ஆக்கங்களை தந்து நீடு வாழ்ந்து பல பேறு கொள்ளவும் மற்றும் விழா மிக சிறப்பாக நடந்தேறவும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களும் இறை ஆசியும் உரித்தாகட்டும் அமுதன்..
மிக்க அன்போடும் வாழ்த்துக்களோடும்..
வித்யாசாகர்
===========
அமுதன் நவின்றது:
மிக்க நன்றி அண்ணா… உங்கள் ஆதரவு தொடர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது… உங்கள் பணிப்பளுவிற்கு மத்தியிலும் சிறப்பான வாழ்த்துரையை வழங்கியமைக்கு நன்றிகள்
என்றும் மறவேன்
அன்புடன்
மன்னார் அமுதன்
By: வித்யாசாகர் on மார்ச்31, 2011
at 11:40 முப