மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி3, 2011

கற்பிழந்த கதை – வினையும் எதிர்வினையும்


என் அன்புத் தோழர்களுக்கு,வணக்கம்… “கற்பிழந்த கதை” க்கு நீங்கள் வழங்கிய கருத்துக்களுக்கு நன்றிகள்… சிலர் மேம்போக்காக ஆடைச் சுதந்திரம் பற்றி பேசிவிட்டுப் போனார்கள்…. அவர்களுக்கும் நன்றிகள்.. என் வாதத்தையும் முன்வைக்கும் முகமாக (சற்றுப் பெரிதாக இருப்பதால்) என் கருத்துக்களை இங்கு பதிகிறேன். இதற்கு முன் உள்ளவற்றை வாசிக்க விரும்புபவர்கள் முகப்புத்தகத்தில் இங்கு சென்று வாசிக்கலாம்.  link

குறிப்பு:
(கவிதையை வாசிக்கும் போது கவிதையாக வாசியுங்கள். உங்கள் மனதில் இருக்கும் அரசியல் சித்தாந்தங்களை கவிதையோடு தொடுப்புக் கொடுப்பது படைப்பாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கவிதையில் வரும் பாத்திரத்தை ஏற்று வாசிக்க வேண்டும். அப்போது தான், அக்கவிதை தான் பிறந்த சூழலை வெளிப்படுத்தும்.)

வித்யாசாகர் அண்ணாவும், தோழி மயூவும் கவிதையின் முழு உள்ளீட்டையும் வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது… தோழர்களான மயூரனுக்கும், உமாவுக்கும் எனது நன்றிகள்

இக்கவிதையில் தூக்கில் தொங்கிய பெண்ணை உங்கள் வாழ்வில் ஒரு முறை கூட சந்தித்ததில்லையா? தங்கை இறந்த சோகத்தைத் தாங்காத அண்ணணை அல்லது தங்கையின் வீழ்ச்சியைத் தாங்கிக் கொள்ளாமல் அவளைக் கண்டிக்கும் அண்ணணை, குடும்ப உறுப்பினரை நீங்கள் கண்டதோ, கேட்டதோ இல்லையா… இல்லையென்றால் நவீன சமூகத்தோடு நீங்கள் எவ்வளவு ஒன்றித்திருக்கிறீர்கள் என்பது விளங்குகிறது.

சமகாலத்தில் மணமுடிக்காமல் சேர்ந்து வாழ்தல், திருமணத்திற்கு முன்பே உறவு கொள்ளுதல் என்று பேசத்தொடங்குபவர்களிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் பக்குவம் உடையவர்களை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு எனது எழுத்து தேவைப்படாது… (நான் படிச்ச பள்ளிக்கூடத்தில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து சிறப்புப் பயிற்சி கொடுப்பார்கள்; நான் அவர்களைப் போல் ஒரு ஆசிரியனில்லை… )

24 வயதிலும் வெகுளியாக சிரித்து வெள்ளந்தியாகப் பேசித் திரியும் எத்தனை பேர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்… அவர்களுக்காகவே எனது எழுத்து…

மேலும் தோழர்களே,
இந்தக் கவிதையை ஒரு அண்ணணாகவோ, அக்காவாகவோ நின்று வாசியுங்கள். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்…

//“நீ கற்பிழந்ததையும் – உன்
கடவுள் கைவிட்டதையும்”// இது குத்திக் காட்டுவதற்காக எழுதப் படவில்லை… ஏனென்ற காரணம் அறியப்பட வேண்டும் என்பதற்காகவே…

எனது படைப்பும், பாத்திரமும் நன்கு தேர்ச்சியடைந்த, அறிவு மிக்க ஒரு super hero or a super heroine அல்ல. அவர்களை அவ்வாறு ஆக்கி நடைமுறையை மறைப்பதுவோ அல்லது பாத்திரத்திற்கு அறிவூட்டுவதோ எனது நோக்கம் அல்ல.

எந்த ஒரு படைப்பாளியும் தன் படைப்பை நேர்க்காட்சி அமைப்புடனோ அல்லது எதிர்க்காட்சி அமைப்புடனோ, முரண்களோடோ அமைக்கின்றான். இப்படைப்பு எதிர்க்காட்சி (negative view) அமைப்பைக் கொண்டே அமைக்கப் பட்டுள்ளது.

எதிர்க்காட்சி அமைப்பு படைப்புகளில் “இவ்வாறெல்லாம் வழுக்கி விழுவீர்கள்” என்ற எச்சரிக்கையை படைப்பாளி கூறுகிறான்.. வழுக்கி விழுங்கள் என்று கூறுவதில்லை…

தோழி மயூ,

// தன் அறியாமையால், ஒருவனைப் புணர்ந்த பெண்ணை அவள் தாயார் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதைக் கரு// — உண்மை… ஏற்றுக் கொள்கிறேன். (நம் நாட்டிலும் இராணுவத்தினால் கற்பழிக்கப்பட்ட எத்தனையோ பெண்களை தாய்மார்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்களின் நிலை அறிந்து மணமுடித்த நல்ல தோழர்களும் இருக்கிறார்கள்… )

ஒரு தாய் ஏற்றுக் கொண்டாள் என்பது முற்போக்காக இருந்தாலும் இந்த யுகத்தின் மகள்கள் அத்தவறை தொடர்வது சரி என்று ஆகிவிடுமா?

பண்பாடு என்பது எதை மையப் படுத்தி வருகிறது? விவாகத்தின் பின்னரான உறவையா? அல்லது பாதுகாப்புச் சாதனங்களோடு கூடிய திருமணத்தின் முன்னரான உறவையா?

(தயவுசெய்து உங்கள் மீதான தாக்குதலாக இக்கேள்விகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். )

தோழர்களே,
எனது நட்பு வட்டத்தில் நான் தான் பிற்போக்கான கொள்கைகளோடு இருக்கிறேனா என எனக்குள் ஒரு சந்தேகம்… சிலரின் முற்போக்கு என்பது மாயைகளை மட்டுமே தோற்றுவிக்கிறதே.. ஏன்?

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஒரு நாவல் (எனக்குப் பெயர் நினைவில் இல்லை – பிரம்மோபதேசம் நாவலோடு சேர்த்து அக்குறுநாவலும் கட்டப்பட்டிருந்தது. பெயர் தெரிந்தவர்கள் கூறவும்)
அதில் வரும் கதாநாயகன் மாதம் 150 ரூபாய் சம்பளத்தில் திருமணம் முடித்து வாழ்ந்தால் தன்னிறைவான வாழ்க்கையை வாழ முடியாது என்பதால், தேவைப்படும் போது பாலியல் வியாபாரிகளிடம் சென்று தன் தாகத்தைத் தணித்துக் கொள்கிறான். ஒரு நாள் ஒரு பாலியல் வியாபாரி பணம் வாங்காமலே அவனுடைய தேவைகளை நிறைவேற்றுகிறாள்.. அவளுடைய அன்பிலும், அறிவிலும், கருணையிலும் தன்னை இழக்கும் அவன் காதல் வயப்படுகிறான். அவளோடே குடும்பமாக வாழ்ந்து விட்டால் என்ன என்றும் நினைக்கிறான்.

அந்த மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டிற்குச் செல்கிறான். அவளை பொலிஸ் பிடித்துச் சென்றுவிட்டதாக எதிர்வீட்டுக்காரி கூறுகிறாள்.. தன் அறைக்குத் திரும்பும் கதாநாயகன் எந்த சலனமுமின்றி அரசியல், அது இது என பக்கத்து அறை நண்பரோடு தனது அறிவு விருத்தியை பரப்புரை செய்வதாகக் கதை முடிகிறது…

இக்கதையும் ஒரு எதிர்க்காட்சியமைப்புக் கொண்ட கதை தான்… இக்கதையில் வரும் கதாநாயகனைப் போல் வாழுங்கள் என படைப்பாளி கூறவில்லை… வாழாதீர்கள் என்றே படைப்பு கூறுகிறது.

ஆனால் இதே கதையை வாசித்து விட்டு அது போல் தம்மை மாற்றிக் கொண்டவர்களும் உண்டு. இவர்கள் அறிந்தே வழுக்கி விழுந்தவர்கள்… மீண்டும் எழும்ப விருப்பம் இல்லாதவர்கள். ஜெயகாந்தன் அக்கதையில் கூறி இருக்கிறார், அது சரி தான் எனக் கூறும் சுயசிந்தனை அற்றவர்கள்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் விவரணப்படம் ஒன்று அண்மையில் பார்த்தேன். அதில் அவர் கூறுகிறார் “உங்கள் வாழ்க்கையிலிருந்தே எனது கதைகளை உருவாக்குகிறேன்” என்று.

நான் காதலிற்கோ, பெண்ணியத்திற்கோ, பெண்ணுரிமைக்கோ எதிரானவனல்ல. தவறு நடக்காத வரை எல்லாம் சிவமே.. சிறு தவறு நடந்துவிட்டாலும் “எல்லாம் சவமே”. கொள்கைவாதிகள் முன்னெச்சரிக்கையோடு தம்மைத் தற்காத்துக்கொள்கிறார்கள்.. ஆனால் அறைகுறையாக அதை அறிந்து கொண்டு தம்மையும் ஒரு சுதந்திரப் பறவையாக மாயையாக சித்தரித்துக் கொள்கிறவர்களே சிதைந்துவிடுகிறார்கள்.

நடிகை ஜெனிலியா ”சச்சின்” படத்தில் தொடர்ந்து பல முறை “Sorry” சொல்லுவா.. கண்டிப்பா பாத்திருப்பீங்க… ஒரு நாள் பேருந்தில் செல்லும் போது (176) தவறுதலாக ஒரு பெண்ணின் நகம் என் கையில் கிளித்துவிட்டது. இலேசாக இரத்தமும் வந்தது.. அதைப் பார்த்துவிட்டு அந்த நங்கை என்னிடம் ஜெனிலியா மாதிரியே “sorry” சொன்னாங்க… உண்மையில் நகத்தால் ஏற்பட்ட வேதனையை விட அந்த நங்கையின் sorry ஆல் ஏற்பட்ட வேதனை தான் அதிகம்… தம்மை தாமாக வெளிப்படுத்தத் தெரியாத இவர்கள் ஏதோ ஒரு மாயைக்குள் சிக்கி தம்மை நிறம் மாற்றி வெளிப்படுத்துவதில் தான் அதிக அக்கறை உள்ளவர்களாக உள்ளார்கள். இவர்களை எண்ணியே என் எழுத்தில் வேதனைப்படுகிறேன்.

நாம் வழுக்கி விழுந்துவிட்டு அதை ஒரு வாழ்வியல் பாங்காக உருவாக்க முயல்வது தான் புதுமையான முயற்சிகளா?

தாயாகிப் பாருங்கள் அப்போது தான் உணரலாம் ஏன் உங்கள் தாய் உங்களைக் கண்டித்தாள் என்று?

Living together கோசமிடுபவர்களோடு, பெண்ணியம் பேசும் உங்களில் எத்தனை பேர் சேர்ந்து வாழ விரும்புகிறீர்கள்… இவர்களுக்கும் அக்குறுநாவலில் வரும் கதாநாயகனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

கூச்சமின்றி வெளியில் சொல்லும் ஆற்றலும், பிறக்கும் குழந்தைகளுக்கு தன் பெயரை முன்னெழுத்தாக்கும் தன்னம்பிக்கை அவருக்கும் உள்ளதா?

தனிமனிதனாக வெற்றுக் கோசங்களையும், யதார்த்தத்திற்குப் புறம்பான தர்க்க ரீதியான கொள்கைகளையும் பிடித்துக் கொண்டு வாழ்வதில் பயனில்லை.

உங்கள் பெற்றோரிடம் ஒளிவு மறைவில்லாமல் பேசும் நீங்கள் மறைக்க முயற்சிக்கும் ஒவ்வொரு விடயமும் உங்களைத் தவறான பாதைக்கே இட்டுச்செல்லும்…

சமுதாய மறுமலர்ச்சி என்பது “திருமணத்திற்கு முன் ஆணுறை அணிந்து கொண்டு உறவு கொள்ளுங்கள் என்பதிலில்லை”. நம்பியவர்களைக் கைவிடாமல் பாதுகாருங்கள் என்பதில் உள்ளது.

என்றும் அன்புடன்

“முட்களையும் நேசிக்கிறேன்: உங்கள் சொற்கள் என்னைக் குத்துவதில்லை”
மன்னார் அமுதன்


Responses

 1. அன்பிற்குரிய அமுதனுக்கு வணக்கம். இங்கும், நானென் வாழ்த்தினை உரித்தாக்கவே கடமை பட்டுப்போகிறேன்.

  ஒரு நல்ல கவிதையை இப்படி திசை திருப்பி திரித்து இப்படி எல்லாம் பேசுகிறார்களே, வேறு எங்கோ சென்று விட்டார்களே’ என்றெல்லாம் தோன்றினாலும், அது ஒரு மேற்கோள் காட்டிய வார்த்தை தானே என்றாலும், விமர்சிப்பதென்பது அவர்களின் சுதந்திரம் தானே? இது வழியாக சமதர்ம கருத்துக்களை படிப்பவர்களிடத்தில் சொல்லலாம் தானே?

  உண்மையில் அவரவரின் சிந்தனைக்குட்பட்டதை பேச, கருத்துக் கூறத் தானே பதிவே இடுகிறோம். எனவே கருத்து பகிர்ந்தவர் நன்றிக்கும் உரியவர் என்றெண்ணி அதில் உங்களுக்குண்டான பாடத்தை எடுத்துக் கொண்டு உங்களின் அடுத்த கட்ட நகர்விற்கு சென்று விடுங்கள்.

  தவிர, இன்னொரு மகிழ்வான செய்தி, உங்களின் “பிச்சை காரி கவிதையோடு நாம் எழுதிய அக்குரோணிக்கான அணிந்துரையினை மகாகவி இதழில் பிரசுரிக்க கேட்டுள்ளார்கள். மகிழ்வோடு சம்மதம் என்றேன். தவிர பொங்குதமிழ் ஆதவன் தங்களை பற்றிய விவரம் கேட்டார், மின்னஞ்சல் விலாசம் கொடுத்துள்ளேன். இன்னும் சில இணையதளங்களும் அதை வெளியிட்டுள்ளன..

  மேலும் வளர்க; வாழ்க!!

  பேரன்புடன்..

  வித்யாசாகர்

  ===============================

  அமுதன் நவின்றது:

  வித்யா அண்ணா… வணக்கம்… தோழர்களின் கருத்துக்கள் என்னைப் புடம் போட்டுக் கொண்டே இருக்கின்றன… கருத்துக்கள் கூறுவது அவர்கள் சுதந்திரம் … எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்கிறேன்… நீங்கள் கூறியது போல் இங்கு நகர்வு தான் முக்கியம்…..

  மகாகவி இதழ் பற்றிய செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது… மகாகவி ஜனவரி இதழ் “சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின்” போது கிடைத்தது…. படித்தேன்… மகிழ்ந்தேன்…

  பொங்கு தமிழ் ஆதவன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டி பாராட்டி இருந்தார்… அவரது மனந்திறந்த பாராட்டுக்கள் புத்துணர்ச்சியைத் தந்தன…. இவையனைத்திற்கும் உரிய நன்றிகளை உங்களுக்குத் தான் கூற வேண்டும்…

  மேலான நன்றிகள்..

  அன்புடன்
  மன்னார் அமுதன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: