மன்னார் அமுதன் எழுதியவை | ஜனவரி24, 2011

மறுபக்கம் – பாலியல்


மதுவோடும் மாதோடும்
சூதாடும் மன்மதனின்
கதையெங்கும் காமம் தெறிக்கும்

பகலென்ன இரவென்ன
படுக்கைக்கு போய் விட்டால்
விரல் பத்தும் தேகம் கிழிக்கும்

நாடோடி போலாகி
தேடோடிப் பெண் சுகத்தை
எழுத்திலே கருக விடுவான்

கோடிட்டுக் கோடிட்டுக்
கோமானே அவனென்று
போற்றியவன் படித்துக் கெடுவான்

பாலியலின் பலபக்கம்
அறிந்தவனாய்ப் பகட்டுபவன்
நாளொன்றில் மணமுடிப்பான்

ஊசியிலே நுழையாத
நூலொன்றைக் காவியவன்
இல்லறத்தில் விரதமென்பான்

போருக்கு ஆகாத
வாளொன்றை அழகிடையில்
அணிதற்கு அவள் மறுப்பாள்

உலகினிலே பரத்தைகளை
உறவினிலே வென்றவனை
உற்றதுணை தோற்கடிப்பாள்


Responses

  1. […] This post was mentioned on Twitter by மன்னார் அமுதன், மன்னார் அமுதன். மன்னார் அமுதன் said: மறுபக்கம் – பாலியல்: http://wp.me/p3s2b-h7 […]

  2. அருமை..

    அன்புச் சகோதரன்…
    மதி.சுதா.
    காதல் கற்பித்த தமிழ் பாடம்

  3. nice


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: