மன்னார் அமுதன் எழுதியவை | ஒக்ரோபர்27, 2010

“தமிழ் செம்மொழி விழா -2010” – கவியரங்கக் கவிதை


தமிழ் செம்மொழி விழா – 2010 மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டு 22,23,24,25 /10/2010 ஆகிய தினங்களில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இயல், இசை, நாடக விழாக்களும் மற்றும் பல ஆய்வரங்குககளும் சிறப்பாக நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இத்தமிழ் நிகழ்விற்கு இலங்கை தேசிய ஊடகங்கள் அனைத்தும் தமது பங்களிப்பை நல்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது வரை வட மாகாண இலக்கிய விழாக்களை மன்னார் மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இரண்டு முறை முன்னெடுக்கப் பட்ட போதும், சில அரசியல் தலையீடுகளால் இந்நிகழ்வுகள் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டன.

முற்று முழுதான மன்னார் மக்களின் பங்களிப்புகளோடு நடைபெற்ற இத்தமிழ் நிகழ்வினால் மன்னார் மக்கள் மிகுந்த மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகின்றனர்.

உலகத் தமிழ் மாநாட்டை ஆரம்பித்து வைத்த அருட்பணியாளர்தனிநாயகம் அடிகளாரின் வழியினைப் பின்பற்றி தமிழ் வளர்ச்சியில் தன்னை அர்பணித்துள்ளதாக மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்பனியாளர் தமிழ்நேசன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வு ஒரு கூட்டு முயற்சி என்றும், தமது மேலான பங்களிப்பை நல்கிய மன்னார் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

கவிஞரும், நாவலாசிரியருமான அகளங்கன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் எனக்கும் பங்கு பற்றும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “ஆதலினால் தமிழ் மேல் காதல் கொள்வீர்” எனும் கவியரங்கத் தலைப்பில், நான் முன்மொழிந்த எனது கவிதையை இங்கு காணலாம்.

கவிதையின் காணொளி:


Responses

 1. சொல்லவருவதன் தீரம் தெளிவாக உச்சரிக்கும் தமிழாடலில் தெரிகிறது அமுதன்..

  நிறைய இடம் தொட்டுவிட்டது உங்களின் பேச்சு. மிக நேர்த்தியாக தன் எண்ணத்தை பகிர்கிறது உங்களின் தோரணை.

  சகோதரத்துவம் சேர்க்கிறது கனிவான உங்களின் குரல். உடன் முழு துணையாக உணர்வு ப……ூண்டு பேசுகிறது முகமும் கையிரண்டும் கூட.

  தமிழ் தமிழ் என்று நீளும் வரிகள்; எங்கெங்கோ தவறு தவறாய் எழுதி வைத்திருந்த தமிழ் தமிழர் மீதான குற்றச்சாட்டுக்களை கேட்போரின் மனதில் இருந்து அகற்றிவிட எத்தனிக்கிறது.

  ஒரு கவி வீரனை தமிழாள் தனக்காய் பேசவைத்துக் கொண்ட பூரிப்பெனக்கு..

  மிக்க வாழ்த்துக்களும் அன்பும்.. நன்றிபலவும் உரித்தாகட்டும் அமுதன் உங்களுக்கும், இத்தகு சிறப்பிற்குரிய கவியரங்கம் நடத்திய அவ்வமைப்பிற்கும்.

  தமிழ்மீது கொண்ட உங்களின் தீராகாதல் உங்களை சோராமல் சோடை போகாமல், வாஞ்சையோடு, வெற்றிகள் பல தந்து, தரணி போற்ற வாழ்விக்கும்…, வாழ்விக்கட்டும்!!

  பேருவுவகையோடு..

  வித்யாசாகர்

  =============

  மன்னார் அமுதன் நவின்றது:

  நன்றி ஐயா, உங்கள் தொடர்ச்சியான கருத்துக்கள் மூலம் என் வளர்ச்சிக்கு நீங்கள் தொடர்ந்து உரமிட்டு வருகிறீர்கள்.

  என்றும் நன்றியோடு
  மன்னார் அமுதன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: