மன்னார் அமுதன் எழுதியவை | ஒக்ரோபர்7, 2010

மூத்தோர் என்றால் …?


மூத்தோர் என்பவர் மூப்பல்ல; அவர்
முதிர்ச்சியைக் குறிப்பது வயதல்ல; வாக்கால்
காத்தோர் எவரோ சமூகத்தை; எல்லாம்
மூத்தோரென நான் முன்மொழிவேன்

பழமை பேசுதல் நோக்கமல்ல – பழம்
பெருமையைச் சாற்றுதல் ஆக்கமல்ல
ஊக்கம் தருமுரை எவ ருரைத்தாலும்
மூத்தோர் வாக்காய் நானேற்பேன்

உவமைக் கதைகள் பல சொல்லி
உயர்ச்சியில் பணிவை வலியுறுத்தி
கயமைக் குணத்தை நீக்கிவிட – பல
கதைகள் உரைத்தோர் மூத்தோரே

மரத்தின் நிழலில் நின்று கொண்டே
வேரில் உமிழ்தல் நலமோ சொல்
மரத்தின் உவமை மனிதருக்கே -இதை
உணரா மனிதர்கள் மரத்திற்கே

ஏற்றுக் கொள்ளும் மனமிருந்தால்
எதையும் கற்கும் ஆர்வம் வரும்
மூத்தோர் உரைகள் மருந்தாகும் – அதை
மதித்தால் வாழ்க்கை விருந்தாகும்


Responses

  1. nalla karuthkkavithai.
    Have you visited my valai.?

    http://kovaikkavi.wordpress.com/category/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/

  2. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: