மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்7, 2010

அத்தனைக்கு மத்தியிலும் “I am fine”நட்சத்திரம் மின்னாத
என் இல்லற இரவுகள்
எப்போதும் விடிந்தே கிடக்கிறது

விலைக்குப் பெற்ற
சுதந்திரம் போலவே
கடமையாய்க் கழிகிறது
காதல்

ஆர்வமாய் எதையோ
நாற்பத்திரண்டிலும் தேடுமவர்
இருட்டில் என்னைத் தொலைத்துக்
கொண்டிருக்கிறார்

எத்தனை கதறியும்
எதிரொலிக்காத வயிறு
ஆண்டுகள் இரண்டு
காத்திரு என்கிறது

ஏலவே கடந்துவிட்ட
முப்பத்தியெட்டில்
திக்கித் திக்கி
தள்ளிப்போகிறது மாதம்

அத்தனைக்கு மத்தியிலும்
அவல் கேட்கும்
வெறும் வாய்களுக்கெல்லாம்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
“I am fine”


Responses

 1. வலிக்கும் இதயம் வலித்தாலும்
  அதை விடுத்து –
  நலம் உதிர்க்கும் வாய் நலமென்று சொல்வதாகவே
  பக்குவ படுத்தப் பட்டிருக்கிறோம்; காரணம்
  தமிழர் மனதும் பண்பும் அப்படி என்பேன், அதை அழகாக பிரிவின் வலியில் துடிக்கும் கவிதையாக்கிப் பதிந்துள்ளீர்கள் அமுதன்!

  மிக்க அருமை; வாழ்த்துக்கள்!

  வித்யாசாகர்

  =================

  அமுதன் நவின்றது:

  சில நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு விடயத்தை எழுதியதில் ஒரு நிம்மதி…

  உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி ஐயா

 2. hi amuthan annah
  ungalin padaippugal anaiththum nalla irukku.

  அமுதன் நவின்றது:

  நன்றிகள் நண்பரே

 3. அருமை… வாழ்த்துக்கள்..

 4. வலிக்கும் இதயம் வலித்தாலும்
  அதை விடுத்து –
  நலம் உதிர்க்கும் வாய் நலமென்று சொல்வதாகவே
  பக்குவ படுத்தப் பட்டிருக்கிறோம்; காரணம்
  தமிழர் மனதும் பண்பும் அப்படி என்பேன், அதை அழகாக பிரிவின் வலியில் துடிக்கும் கவிதையாக்கிப் பதிந்துள்ளீர்கள் அமுதன்!

  மிக்க அருமை; வாழ்த்துக்கள்!

 5. hai friend,

  100% Ur words True ya


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: