மன்னார் அமுதன் எழுதியவை | ஜூன்25, 2010

என் செல்லமே


உன்னைப் பிரிந்தே எந்தன்
உள்ளம் வாடுதே – பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே

செல்லம் நிறை சொற்களாலே
கொஞ்சும் ராசாத்தி -என்னைக்
கனவில் கூடச் சுத்தி வரும்
செல்வச் சீமாட்டி

நட்சத்திரக் கண்கள் எந்தன்
பகலை இரவாக்கும் ‍- அகல‌
நெற்றிநடுக் குங்குமச் சூரியன்
இரவின் நிலவாகும்

காதல் நிறை கண்களாலே
கதைகள் உரைப்பாயே – அதனைக்
கற்றுக் கொண்டு சீண்டயில் அழகு
காட்டிப் பழிப்பாயே

நெடுநாள் பிரிவை உடனே போக்க‌
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்

புற்கள் நுனிப் பனித் துளி போல
நானும் வருவேனே – எந்தன்
பாசம் கொண்ட ரோசாவே நீ
வாடிப் போகாதே


Responses

  1. யாரை நினைத்து எழுதினீர்கள் அமுதன்.

    நல்ல கவிதை

    அமுதன் நவின்றது:

    வேற யாரை நினைச்சு… எல்லாம் அவங்கள நினைச்சு தான் யோகா….

  2. so nice anna

  3. //உன்னைப் பிரிந்தே எந்தன்
    உள்ளம் வாடுதே – பிரிவின்
    தூரம் அறிந்தும் உன்னைத்
    துரத்தித் தேடுதே//

    //காதல் நிறை கண்களாலே
    கதைகள் உரைப்பாயே – அதனைக்
    கற்றுக் கொண்டு சீண்டயில் அழகு
    காட்டிப் பழிப்பாயே//

    //நெடுநாள் பிரிவை உடனே போக்க‌
    விடுமுறை நாடுகிறேன்
    விடுப்புகள் முடிந்து
    வேலைக்கு மீள்கையில்
    நோய்நொடி தேடுகிறேன்

    புற்கள் நுனிப் பனித் துளி போல
    நானும் வருவேனே – எந்தன்
    பாசம் கொண்ட ரோசாவே நீ
    வாடிப் போகாதே//

    உறவு பிரிந்த உயிர் வலியின் அறிவிப்பிது அமுதன்.

    ஒரு வருட அல்லது இரு வருட பாரங்களையும் கனவுகளையும் சுமந்து விமானமேறி வெளி நாடு செல்லும் இதயங்களுக்கு உடனே புரிந்து விடும் உணர்வும், ஒரு ஆழ வலியும், அழ இயலாமல் நெஞ்சில் சுமக்கும் கண்கள் சிவந்த நிறமும் படிந்த, வரிகள் நிறைந்த கவிதை அமுதன்.

    இது போன்ற அன்பு இதயங்களை இறைவா சேர்த்தே வைத்திரு என வேண்டிக்கொள்வோம் உறவுகளே..!!

    வித்யாசாகர்

    அமுதன் நவின்றது:
    வித்யாசாகர் ஐயா… பிரிவின் வலியுணர்த்தும் உங்கள் கவிதைகளையும் படித்தேன் … வெறுமை தரும் வலிகளை மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்

  4. “விடுப்புகள் முடிந்து
    வேலைக்கு மீள்கையில்
    நோய்நொடி தேடுகிறேன்”

    என் நிலைகூட அப்படித்தான்..
    கவிதை அருமை…….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: