மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்20, 2010

வரம் தா தேவி



ஆழி தமிழ்மொழி – அதன்
அடி நுதல் அறியேன்
பாடிப் பரவசம் கண்டதால் நானும்
பாவினைத் தொழிலாய் ஆக்கினேன் தேவி

பாடுதல், ஆடுதல், கூத்தினைப் பயின்றே
பாக்களை ஆக்கினேன் பயனென் மாதா
மாடுகள் கூட மந்தையாய் வாழ – என்
மக்கள் மட்டுமேன் மறந்தனர் கூடல்

வாழிய நின் புகழ் தமிழ்த் தாயேயுன்
கூரிய மொழியின் கொற்றம் வாழ்க
பாவலன் எழுத்தினால் பார் மாறாது
பாடற் கரசி நீ வரமருள்வாயோ

வரங்கள்:

சாதனைகள் ஆயிரம் நாம் படைக்க வேண்டும் – மக்கள்
வேதனைகள் பொடிப்பொடியாய் உடைக்க வேண்டும்
பாதகர்கள் செயல்களையே படிக்க வேண்டும் – பாட்டால்
பயத்தினிலே அவர் இதயம் துடிக்க வேண்டும்

இல்லற இன்பங்கள் நிறைய வேண்டும் – நாட்டில்
இனிய தமிழ்க் குழந்தைகள் பெருக வேண்டும்
நல்லறத்தை நம்மவர்கள் அறிய வேண்டும் – எவர்க்கும்
நலம்தரும் செயல்களையே புரிய வேண்டும்

சோதனைகள் எம்மைச் சீர்தூக்க வேண்டும் – வாழ்வில்
சோர்வென்ற சொல்லை நாம் நீக்க வேண்டும்
பார் போற்றும் பண்புடனே வாழ வேண்டும் – அயலில்
பசித்தோரைக் கண்டு உளம் நோக வேண்டும்

புசிக்கையிலே பசித்தவர்க்கும் ஈய வேண்டும் – ஊர்வாய்ப்
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தாங்க வேண்டும்
சில நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் – கவிதையால்
பல கோடி நல்லிதயம் ஆள வேண்டும்


Responses

  1. அருமையான தமிழாளுமை. மிக நல்ல கவிதை. தமிழாள் தங்களுக்குத் தந்த வரத்திற்குச் சான்றிந்த கவிதை அமுதன்.

    பாராட்டுக்கள்!

    வித்யாசாகர்

    ==========

    அமுதன் நவின்றது:

    நன்றிகள் ஐயா … உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்குவிற்பிற்கும்

  2. அருமை பாராட்டுகள் தொடர்ந்து எழுதுங்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: