ஆண்டாண்டாய்
ஒலித்து ஓயும்
இசையில் தொடர்கிறது…
ஆணவக் கூட்டணிகளின்
அதிகாரத்தைப்
புதுப்பித்துக் கொள்ளும்
ஆசன விளையாட்டு
அடிக்கடி ஆடப்படுவதால்
ஆண்டியாகிப் போனது
ஆண்டுப் பொருளாதாரம்
அமர்ந்தவர் வெல்ல
தோற்றவர் கொல்ல
சமநிலை மாறிக்
கதிரைகள் சாய
பூனை பங்கிட்ட
அப்ப மாகிறது
அதிகாரப் பரவலாக்கம்
நாற்காலிச் சண்டையில்
விடுவிக்கப்பட்ட
வறுமையின் குரல் மட்டும்
தெருவெங்கும்
ஒலித்து ஓயும்
இசையாய்த் தொடர்கிறது
அதிகார மோகத்தை கேள்விக்கு உள்ளாக்கும் நல்ல கவிதை.
எமது முதுகில்
அவர்கள் சவாரிவிட
நாங்கள்
வோட்டுப் போடுகிறோம்.
பொருத்தமான படம்
===========================
அமுதன் நவின்றது:
நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்…
By: Dr.M.K.Muruganandan on ஏப்ரல்6, 2010
at 8:28 பிப
நல்ல உபயோகமான பதிவு நண்பா.. பின்பற்றுகிறோம்.. பிறருக்கும் எடுத்து சொல்றோம்..
அமுதன் நவின்றது:
நன்றிகள் நண்பா
By: jkr on ஏப்ரல்7, 2010
at 7:11 முப
சிந்தனைக்கு விருந்து .நல்ல படைப்பு . நன்றி.
By: Murugesan .D on மே21, 2010
at 7:45 பிப