மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்5, 2010

நெடுந்தீவு வி.முகிலனின் “சாடிகள் கேட்கும் விருட்சங்கள்” – கவிதை நூல் வெளியீடு


நெடுந்தீவு முகிலனின் ஆறாவது கவிதை நூலான சாடிகள் கேட்கும் விருட்சங்கள் வெளியீட்டு விழா 03.04.2010 அன்று கொழும்பு தமிழ்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

கொழும்பு தமிழ் சங்க ஆட்சிக் குழு உறுப்பினரும், இலங்கை வங்கி முகாமையாளருமான திரு ஏ. இரகுபதி பாலஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய கலாநிதி எஸ். அனுசியந்தனும் அவரது பாரியாரும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு முதற்பிரதியைப் பெற்றனர்.

மங்கள விளக்கேற்றப்பட்ட பின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் மாலை 5.30க்கு ஆரம்பமாகின. நெடுந்தீவு முகிலனைப் பற்றிய அறிமுக உரையை மன்னார் அமுதனும், எ.ரி.ஸ்ரீபிருந்திரன் தொடக்கவுரையையும், கவிஞர் மட்டுவில் ஞானக்குமரன் வாழ்த்துரையையும், திரு ஏ. இரகுபதி பாலஸ்ரீதரன் தலைமையுரையையும், ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர் மா. கணபதிப்பிள்ளை மற்றும் சிரேஸ்ட அறிவிப்பாளர் டி.எஸ்.முகுந்தன் (சூரியன் FM) ஆகியோர் சிறப்புரையையும், நூல் பற்றிய மதிப்பீட்டுரையை கவிஞர் மேமன் கவியும் ஏற்புரையை நூலாசிரியர் வி.முகிலனும் ஆற்றினர்.

சிரேஸ்ட ஊடகவியலாளர்களும், ஒலி மற்றும் ஒளிபரப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில் இலங்கை இதழியல் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சங்கரப் பிள்ளை மண்டபம் நிறைந்து வழியுமளவிற்கு பெருமளவில் ஆர்வலர்களும் கவிஞர்களும் வருகை தந்திருந்தமை முகிலனின் இடைவிடாத உழைப்பிற்குக் கிடைத்த பலனென்றே கூற வேண்டும்.

விழா நிகழ்வுகளை மிகவும் அருமையாக ரி.தரணிதரனும் (சூரியன் fm) மற்றொரு சகோதரியும் தொகுத்தளித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் http://www.livestream.com/aruvam எனும் தொடுப்பில் நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பப்பட்டதுடன் புலம்பெயர்ந்து வாழும் பல தாயக உறவுகள் நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு கழித்தனர். இதற்கான ஏற்பாட்டை கவிஞர் விக்ரம் (நான் மறைய வேண்டும்) ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இது வரை 6 நூல்களை வெளியிட்டுள்ள இளைஞரான முகிலனுக்கு மேலும் பல நூல்களை வெளியிடும் ஆற்றலை இறைவன் வழங்க வேண்டுமென பிரார்த்தனை செய்கிறோம்.

நூலின் பெயர்: சாடிகள் கேட்கும் விருட்சங்கள்
வெளியீடு: சேமமடு புத்தக சாலை
கிடைக்குமிடம்: அனைத்து புத்தக சாலைகள்

காணொளி:


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: