“இலக்கியப் பாசறை”யின் முழுமதி தின இலக்கியக் கருத்தாடல் நிகழ்வு 29-03-2010 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இல.57, 5வது ஒழுங்கை, சென் பெனடிக் மாவத்தை, கொழும்பு – 13ல் உள்ள கவின் கலாசுரபி மண்டபத்தில் கலாபூஷணம் பருத்தியூர்.பாலவைரவநாதன் தலைமையில் நடைபெற்றது.
திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் திரு அம்புறோஸ் பீட்டர் தமிழ் மொழி வாழ்த்திசைக்க இலக்கிய நிகழ்வுகள் 10.30 மணியளவில் ஆரம்பித்தது. இதுவரை (2000) இரண்டாயிரம் வாழ்வியல் கட்டுரைகளுக்கும் (வாழ்வியல் புதையல்கள்) மேல் எழுதியுள்ள கலாபூஷணம் பால வைரவநாதன் நிகழ்விற்கு தலைமையேற்று தலைமையுரையாற்றினார். .
இந்நிகழ்வில் வேலிகளைத் தாண்டும் வேர்கள் கவிதைகள் தொகுதியினை மன்னார் அமுதனும், நானாட்டான் ஜெகனின் சுனாமியின் சுவடுகள் மற்றும் அவஸ்தைகள் கவிதைகள் தொகுதியினை கவிஞர் மட்டுவில் ஞானக் குமரனும், பேசாலை அமல்ராஜின் விழி தீண்டும் விரல்கள் கவிதை நூலை கவிஞர் நெடுந்தீவு முகிலனும் கருத்துரைத்தனர்
கவிஞர் வதிரி சி ரவீந்திரன், சட்டத்தரணி பதுளை சேனாதிராஜா உட்பட பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு கருத்துரைத்தனர். செல்வன் சதீஸின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு 12.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
காணொளி:
மறுமொழியொன்றை இடுங்கள்