மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்30, 2010

காதல் கதை – கொஞ்சம் பழசு


நாம்பிரிந்து ஆயாச்சு
நாட்கள் நாற்பது – அது
ஏனென்ற காரணத்தை
யாரு கேட்பது

நல்லுலகு கேட்டாலும்
எதை மறைப்பது
நாயொருவன் செயலினாலே
என்றா உரைப்பது

பகலிலவன் பேசுகையில்
இரவு உனக்கு
இருட்டினிலே கொண்டது நீ
காதல் கிறுக்கு

வந்த காசு தீர்ந்ததுமே
வயிறு வத்திடும்
வயிற்றை நிரப்ப வங்கி போனால்
வைப்பும் வத்திடும்

மாயையிலே வாழ்வது தான்
உந்தன் விருப்பு – அதை
மாறி மாறி எடுத்துரைத்தால்
என்னில் வெறுப்பு

பந்த பாசம் அறுப்பதுவோ
உனக்குப் புதுசு
பாழாப் போன கதைகள் நான்கு
இருக்குப் பழசு

அவன் சிரித்த நாட்களிலே
நீயும் சிரித்தாய் – இருந்தும்
நீயழுத நாட்களிலே
நானே துடைத்தேன்

காதறுந்த ஊசியவன்
கானம் படித்தான்
கானமின்று கானலாக
நீயும் தனித்தாய்

பாடல் ஒன்று
இராகம் இரண்டு பாட்டிற்கிருக்கலாம்
பாவை கணவன் மாண்ட பின்பே
மீண்டும் மணக்கலாம்

மீண்டும் நீயோ மணப்பதற்கு
என்னை வெறுக்கிறாய்
பிரிவு என்ற நோயை ஏற்றி
உயிரைச் சிதைக்கிறாய்

பார்த்ததிரு மேனியெந்தன்
கண்கள் குத்துதே
பாதகமே புரிந்தது போல்
நெஞ்சம் பத்துதே

காத்திருந்து காக்கவைத்துக்
கொண்ட காதலே – இன்று
கானகத்தில் கண்ணைக் கட்டி
தவிக்க விட்டதே

காதலென்ன சாதலென்ன
இரண்டும் ஒன்று தான்
கனிந்தவுடன் வெட்டப்படும்
வாழைக் கன்று தான்

பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே
பிரிந்து கூடிப் பழகிப் பிரிய
மனசு வலிக்குமே

கோர்வையாக வழிந்த
கண்ணீர் கோர்த்திருக்கின்றேன்
கோலமயில் இரத்தினமே
மாலை ஆக்கிக்கோ


Responses

 1. அமுதா பசித்திருப்பவனுக்குத் தான் பசியின் அருமை தெரியும். காதல் வயப்பட்டவர்களிற்குத் தான் காதலின் வலி புரியும். உங்கள் ஒவ்வொரு கவிதைகளும் பல வகையில் சிந்திக்க வைக்கிறது. சில சமயம் அழுகை கூட வந்து விடுகிறது. இராப்பிச்சைக்காரி, மற்றும் கொஞ்சம் பழசு போன்ற கவிதைகளில் உண்மையான நிலைப்பாட்டை உரைத்துள்ளீர்கள். நீங்கள் இயம்பிய கவிதை போல இங்கு இருபாலாரும் நயமாகவே பழகி கனியை ருசித்ததும் கைவிட்டுச் செல்வாரும், இனி நாம் காதலரல்ல.. நண்பர்கள் என்று கூறி சாப்பிட்ட கையைக் கூட கழுவ மறந்த பலருண்டு அமுதா….வெளி நாடு என்பது வேதனைகளின் சவக்காடு மட்டுமல்ல சாபக்கேடும் தான்….

 2. பழகிப் பிரியும் துயரமெல்லாம்
  காதல் வழக்கமே.மட்டுமல்ல காதலின் பொழுது போக்கும் கூட….

 3. அமுதன் நவின்றது:

  நன்றி நிலா… என்ன பன்றது…. கஸ்ட காலம்….

 4. அமுதன் நவின்றது:

  எல்லா நேரத்திலும் உண்மைகளையே கவிதையாக எடுத்துரைக்க நினைக்கிறேன். சிலவற்றில் யதார்த்தமும், சிலவற்றில் கற்பனையும் விகிதாச்சாரத்தில் மாறிவிடுகின்றன.

  வெளிநாட்டில் மட்டுமல்ல… உள் நாட்டிலும் கூட இது பெருகி விட்டது… கிராமங்களில் கூட பரவலாக இடம் பெறுகிறது. நமது மக்கள் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வாழ்ந்து பழகியவர்கள்.. இன்று கட்டுப்படுத்தும் ஆள் இல்லாததால் மந்தைகள் ஆகிவிட்டனர். குடும்ப உறவை அறுத்துக் கொண்டு தகாத முறையில் வாழ்பவர்கள் எண்ணிக்கை கூடி விட்டது. ஏன் இப்படி.. மனச்சாட்சியைத் தொலைத்து மாயைக்குள் வாழ்கின்றனர் என்பது தான் எனது கவலை

 5. மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  அமுதன் நவின்றது:

  நன்றிகள் விஜிதன்

 6. NICE KAVITHAI I NEVER MISS TO READ A BITE

  அமுதன் நவின்றது:

  நன்றிகள்

 7. very nice,பழகிப் பிரியும் துயரமெல்லாம்
  காதல் வழக்கமே
  பிரிந்து கூடிப் பழகிப் பிரிய
  மனசு வலிக்குமே-intha varigal miga nandru.

  =====================

  அமுதன் நவின்றது:

  நன்றி தோழியே……


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: