மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்5, 2010

பல்கலைத் தென்றல் – ஸ்ரீதர் பிச்சையப்பா நினைவுக் குறிப்பு


ஸ்ரீதர் எனும் மாபெரும் கலைஞனை மணக்கும் இலக்கிய மாசிகையின் ஆசிரியர் ஒருவர் மூலமே அறிந்து கொண்டேன். அதன் பிற்பட்ட சில நாட்களில் கனிவுமதி அண்ணாவுடன் கதைக்கும் போது, அவரும் ஸ்ரீதர் அண்ணாவைப் பற்றிக் கதைத்ததுண்டு. என் கவிதைத் தொகுப்பிற்கு சில நவீன ஓவியங்கள் தேவைப்பட்ட காலம் அது. சில ஓவியர்களை தொடர்பு கொண்ட போது அவர்களது ஓவியங்கள் விலைமதிப்பு மிகுந்தவையாயிருந்தன. அவற்றை வாங்குமளவிற்கு என்னிடம் வசதியிருக்கவில்லை. நான் எடுத்த பெருமுயற்சியில் காலம் மட்டுமே கரைந்தது. நூலும் இறுதிக் கட்டத்தைத் தொட்டு விட்டது. இணையத்தின் உதவியுடன் தேவையான படங்களை நூலிற்குள் இணைத்துக் கொண்டேன்.

இறுதி நேரத்தில் ஸ்ரீதர் அண்ணாவுடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு… ஆமர் வீதி சந்தியில்… என்னை அறிமுகப் படுத்தி கொண்டு ஓவியங்கள் தேவைப்பட்டதைக் கூறினேன்..

மிக எளிதாகக் கூறினார்… முதலிலேயே தொடர்பு கொண்டிருக்கலாமே… சரி பரவாயில்லை.. அடுத்த நூல் போடும் போது தொடர்பு கொள்ளுங்கள்… அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறேன்… பிறகு பார்க்கலாம்

அதன் பின் சில முயற்சிகள் மேற்கொண்டும் சந்திக்க காலம் ஒத்துழைக்கவில்லை… அச்சுவலை சந்திப்பில் மீண்டும் கதைத்தேன்… ஒரு சிறிது நேரம்… ஆறுதலாய் கதைக்கலாம் என்று விடைபெற்றார்

கடந்த மாதம் (14.2.2010)தென்றலின் வேகம் புத்தக வெளியீட்டு விழா முடிந்த பின் நானும், நாச்சியா தீவு பர்வீன் அண்ணாவும், ஊடக மயக்கம் ஜனூசும், படிகள் ஆசிரியர் வசீமும், மருதமுனை அன்சாரும் வெள்ளவத்தையில் தேநீர் குடிக்க ஒரு கடைக்குள் சென்றோம். வெலிகம றிம்ஷாவின் கவிதை நூலை ஸ்ரீதர் அண்ணாவின் படங்கள் அலங்கரித்துள்ள அழகைக் கண்டு அதைப் பற்றிப் பேசினோம். பர்வீன் அண்ணாவிடம் ஸ்ரீதர் அண்ணாவின் அலைபேசி எண்ணைக் கேட்க, அவர் கூறினார், “உங்களை ஒரு நாள் வீட்டிற்கே கூட்டிட்டு போறன் அமுதன், கவலையை விடுங்கள். நேரம் போறதே தெரியாம பேசக் கூடிய நல்ல மனுஷன்” என்று.

ஸ்ரீதர் அண்ணாவிற்கு ஒரு பதிவிட வேண்டுமென நினைக்கும் போதெல்லாம் மனம் கனத்துப் போகும். இறுதி வரை அவரோடு அருகில் அமர்ந்திருந்து பேச எனக்குக் கிடைக்கவில்லையேயென்று.

கீழே இணைக்கப் பட்டிருக்கும் காணொளியை மேமன் கவி ஐயா மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதற்கு மேலும் பதிவிடாமல் இருக்க முடியவில்லை. ஸ்ரீதர் அண்ணா பணத்திற்கு மதிப்பளிக்காதவர். கலைஞர்களின், படைப்பாளிகளின் பொருளாதார நிலையை நன்குணர்ந்தவர். கலையை விலை பேசாத உண்மைக் கலைஞன் என்பதை நானுமறிவேன்..

கலாபவனத்திற்கு சென்ற போது கிண்ணியா அமீர் அலி அண்ணா இரங்கல் கவி படித்துக் கொண்டிருந்தார்.

“அன்புத் தோழா ஸ்ரீதர் பிச்சையப்பா
இங்கு பல சொந்தங்கள் சொத்தையப்பா” என்று…

எத்தனை உண்மையான வரிகள்… மனம் வலிக்க வெளியேறினேன்…


Responses

 1. இலங்கையின் பல்கலை வேந்தனான ஸ்ரீதரது திறமை வெளி கொணரப்படவில்லை என்பது கவலையான விடயம்.

  ============

  அமுதன் நவின்றது:

  காலங்காலமாக நடைபெற்று வருகிறது சில வரலாற்றுத் தவறுகள்.. யாரை நோவதென்று தெரியவில்லை…

 2. நல்ல நினைவூட்டல். அருமை.

  அமுதன் நவின்றது:

  நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: