மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்1, 2010

திருமறைக் கலாமன்ற இலக்கியப் பாசறையின் “மல்லிகை ஆய்வு” நிகழ்வு


உலகளாவிய அளவில் இயங்கி வரும் திருமறைக் கலாமன்றம் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு ஆற்றி வரும் பணிகள் அளப்பரியதாகும். அரங்கியலில் பெரிதளவும் பேசப்பட்டவை திருமறைக் கலாமன்றத்தின் நாடகங்கள்.

இலங்கையில் மட்டும் 20 கிளைகளைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வரும் திருமறைக் கலாமன்றம் அருட்பணியாளர் சவெரி அவர்களைத் தலைவராகக் கொண்டு இலங்கையில் செயல்பட்டு வருகிறது.

கொழும்பு திருமறைக் கலாமன்ற “இலக்கியப் பாசறை” ஒவ்வொரு மாதமும் முழுமதி தின இலக்கிய நிகழ்வுகளைக் கொழும்பில் நடத்தி வருகிறது. இலக்கிய பாசறையின் நிகழ்வுகளில் பல திறமையான படைப்பாளிகள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டு இலக்கிய விருந்தளிப்பது வழக்கம். இம்மாத முழுமதி தின நிகழ்வாக இலங்கையின் இலக்கிய மாசிகையான மல்லிகை ஆண்டுமலர் பாரபட்சமற்ற ஆய்வுக்குட்படுத்தப் பட்டது.

ஒரேமாதத்தில் கலை இலக்கியத் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்புகளான பல்துறைக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா, இளவாலை அமுது (அமுதுப் புலவர்) மற்றும் மணிமேகலை அம்மையார் ஆகியோரை நினைவு கூறி ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப் பட்ட பின்னர் இலக்கிய நிகழ்வுகளை திருமறை கலாமன்ற இணைபாளர் அம்புறோஸ் பீட்டர் ஆரம்பித்து வைத்தார். அஞ்சலி உரையை கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா ஆற்றினார்.

இந்நிகழ்விற்கு கவிஞர் மேமன் கவி தலைமை தாங்கினார். மல்லிகை ஆண்டு மலரில் இடம் பெற்றுள்ள கவிதைகள் பற்றிய கண்ணோட்டத்தைக் கவிஞர் மட்டுவில் ஞானக்குமரனும், கட்டுரைகள் தொடர்பாக கட்டுரையாளரும், விமர்சகருமான எஸ்.சக்திதரனும், சிறுகதைகள் பற்றிய பகிர்வை எழுத்தாளர் பதுளை சேனாதிராஜாவும் ஆற்றினர். இத்துடன் இளங்கலைஞர் ஜெ.சதீஸின் தமிழில் பேசலாமே எனும் சிறப்புரையும் இடம்பெற்றது. மலையகக் கல்வி வளர்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் அ.கிருஸ்ணசாமி “மலையகமே விழித்தெழு எனும் தலைப்பில் கவிதை பாடினார்.

பாரபட்சமுறையில் நடைபெற்ற விமர்சன உரைகளை மல்லிகை ஆசிரியர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்ததும், அனைத்து கேள்விகளுக்குமான பதிலை அவரது உரையில் தூசியைத் தட்டுவது போல் லாவகமாகத் தட்டி விட்டதும் அவரது நாற்பது வருட மல்லிகை ஆளுமையை பிரதிபலித்தது.

இருப்பினும் விமர்சனங்களில் கூறப்பட்ட சில விடயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதே மல்லிகையை சிறப்பான மற்றொரு தளத்திற்கு இட்டுச்செல்லும். மல்லிகை உச்சத்தைத் தொட்டு விட்டதென்று நினைத்தால் மாற்றங்கள் தேவையில்லை. இன்னும் மல்லிகை பல வாசகர்களது உள்ளத்தைத் தொட்டு உச்சத்தை அடைய வேண்டுமென்றால் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே வளர வேண்டும். இளய தலைமுறையின் உள்ளத்தில் மல்லிகை மணக்க வேண்டுமென்பதே அனைவரின் அவா?

இந்நிகழ்வில் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் அருணா சுந்தரராஜனும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இலக்கிய ஆர்வலர்களும், மா.பா.சி போன்ற மூத்த ஊடகவியலாளர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வு 6.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

காணொளி:


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: