மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி19, 2010

அமுத காவியம்மைதிலி என்னும் பெயர் கொண்டாள்
மன்னவன் இராமனின் மனம் ஆண்டாள்
விண்ண கம்சென்று வாழ்ந்தி டலாம்
விரைவா யாடா எனக் கொன்றாள்

மைவிழி இரண்டும் கயல் என்றால்
மார்கழி மலரே மண மென்றான்
பைங்கிழி மனதைப் பதம் பார்த்து
பாவலன் இராமன் சிறை கொண்டான்

இரு இமயம் உள்ளே சில சமயம்
மற்போர் புரிந்தது இரு இதயம்
விற்போர் புரியும் மன்னவனோ – அப்
பொற்தேர் முன்னே சரணமிட்டான்

இடையிடை இடைவெளி நீங்கிடவே
இலைமறை காய்கள் வெளிப்படவே
தலைமுறை படைத்திடும் நாட்டத்திலே
தவத்தினைத் தொடர்ந்தனர் மாடத்திலே


Responses

 1. சபாஸ் அமுத வரிகள் அமுதன் , இன்னும் கொஞ்சம் எதுகை மோனையில் கவனம் செலுத்துங்கள்.

  நாச்சியாதீவு பர்வீன்.
  இலங்கை.

  ====

  அமுதன் நவின்றது:

  நன்றி அண்ணா.

 2. very nice congrats

  ============

  அமுதன் நவின்றது:

  நன்றி தோழா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: