மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி18, 2010

உன் நினைவோடு… நானிங்கு…


நீயங்கு…
நானிங்கு…
நாம் வாழும் வாழ்க்கையின்
இருப்பிடம் வெவ்வேறு

உணர்வுகள் உளறலாய்
வெளிப்படும் இரவுகள்
கழிவது எவ்வாறு

பறக்கும் இறகினுள்
முகம் மறைத் தழுதிடும்
பறவையைப் பார்த்தாயா…

நானும் அதுபோல்
அழுதுடும் காட்சியைப்
பார்த்தால் ஏற்பாயா…

கானல் நீராகா
வாழ்க்கையில் சேர்வோம்
ஒன்றாகும் நேரம்
கனவிலும் வாழ்வோம்

கரம் பற்றி
நான் அணைப்பேன்
காத லினால்
நீ நனைப்பாய்

உன்னில் வாழும்
நாட்களிலேதான்
உவகை கொள்கின்றேன்

உயிரே உன்னைச்
சேர்வதற்காக
உலகையே வெல்கின்றேன்


Responses

 1. அமுதன் உங்களது தளத்தில் வைரஸ் இருப்பதாக கூகுல் குரோம் தெரிவிக்கிறது கொஞ்சம் கவனியுங்கள்

  ================

  அமுதன் நவின்றது:

  தகவலுக்கு நன்றி யோ.. உங்களைப் போன்ற பலர் எனது தளத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  திண்ணை தளத்தை Google Crome ஏற்க மறுக்கிறது. அதனால் தான் Malware Virus காட்டுகிறது. மற்ற உலவிகளில் இப்பிரச்சினை இல்லை.

  நான் திண்ணை தொடுப்பை இப்போது நீக்கி விட்டேன். இனி சரியாக இயங்கும்.

  நன்றி தோழா

 2. அருமையான கவிதைகள்…நெஞ்சை நெகிழ வைத்து விட்டீர்கள்…..

 3. அமுதன் நவின்றது:

  நன்றி

 4. இலங்கையில் இன்னும் இத்தனை உயர்வான தமிழ் இருப்பது என்னை பெருமகிழ்ச்சியில் அமிழ்துகிறது. நான் வெளியூர் சென்று நாற்பத்து நான்கு ஆண்டுகளாகின்றன. இன்று இத்தரமான கவிதைகளை வாசித்து பெருமிதம் அடைகிறேன். அமுதன், உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 5. அமுதன் நவின்றது:

  நன்றி ஐயா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: