மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி17, 2010

அவளும்…எச்சிலிலையும்…


என்றோ….
எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும்
பிச்சைக்காரி

“பாவம்,
தின்னட்டும்”

குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டதைத் தின்று
மீந்ததை ஈந்து
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் பின்செலும்

இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில்
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள் செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிழிந்த உடைகளுள்
எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும் …
குரல் கொடுத்தவனும் …


Responses

 1. கற்பனை வளம் மிக்க ஒரு கவிதை அமுதன்…. வாழ்த்துக்கள்…

  =======

  மன்னார் அமுதன் நவின்றது:

  கற்பனை இல்லை தோழா. தெருவில் அனாதைகளாய்த் திரியும் மனநோயாளிகளுக்கும், பிச்சைக்காரிகளுக்கும் எப்படிக் குழந்தைகள் பிறக்கின்றன…

  அந்த ஆதங்கம் தான் இப்படி எழுத வைத்தது. வருகைக்கும் பகிர்விற்கும் நன்றிகள்

 2. Its true fact happening in front of us but cannot abolish from the society.
  Ur writing is really really nice.

  =====================

  அமுதன் நவின்றது:

  நன்றி துளசி

 3. தமிழிற்கு மறுபெயர் கூட அமுது தான் அமுதா

  ===========

  அமுதன் நவின்றது:

  பாரதிதாசன் சொன்னது தானே நிலா.. நன்றி

 4. 😦


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: