மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி1, 2010

கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் இலக்கியக் கருத்தாடல் – 13


ஒவ்வொரு முழுமதி தினத்திலும் கொழும்பு திருமறைக் கலாமன்றத்தினால் புதுச் செட்டித்தெரு, கவின் கலா சுரபி மண்டபத்தில் இலக்கியக் கருத்தாடல் நிகழ்வு நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இன, மத வேற்றுமைகளைக் கடந்து அரவணைத்துச் செல்லும் திருமறைக் கலாமன்றம் “நாம் அனைவரும் ஒரே குடும்பம்” எனும் தொணிப்பொருளில் இயங்கும் கலை, இலக்கிய அமைப்பாகும்.

பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திருமறைக்கலாமன்றத்தின் ஆக்க பூர்வமான இலக்கிய கருத்தாடல் நிகழ்வு 12 மாதங்களைக் கடந்து 1 வருடத்தை இனிதே பூர்த்தி செய்துள்ளது. இந்த ஆக்கப் பணிக்காக நாம் கொழும்பு திருமறைக்கலா மன்ற இணைப்பாளர் அம்புறோஸ் பீட்டர் அவர்களுக்கே நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

29.01.2010 அன்று காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தாடல் ஆரம்பமாகியது. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து 05.12.2009 (68 வயது) அன்று இயற்கை எய்திய யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த முதன்மை சங்கீத வித்வானும், உலகப்புகழ் பெற்றவருமான சங்கீத பூசஷணம் லயனல் திலகநாயகம் போல் அவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப் பட்டது.

இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து வெளிவரும் தாயகம் – கலை இலக்கிய இதழ் பற்றிய விமர்சனம் பிரதான நிகழ்வாக நடைபெற்றது. சிறுகதை விமர்சனத்தை மேமன் கவியும், கவிதைகள் பற்றிய ஆய்வை இரா.சடகோபனும் முன்வைத்தனர். சிறப்புரை வழங்குவதற்காக வருகை தந்திருந்த கவிஞர்.மட்டுவில் ஞானக்குமரன் “படைப்பெனப்படுவது” எனும் தலையங்கத்தில் பல சிறந்த கருத்துக்களை நகைச்சுவைப்படப் பேசினார்.

சங்கீத பூசஷணம் லயனல் திலகநாயகம் போல் அவர்களின் தோழரான சங்கீத வித்துவான் ஏ.கே. கருணாகரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு லயனல் திலகநாயகம் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும், அவர் சங்கீதத் துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகள் பற்றியும் சுவைபடப் பேசினார். தனது உரையின் முடிவில் பார்வையாளர்களின் வேண்டுதலுக்கமைய இன்னிசையையும் வழங்கி மகிழ்வித்தார்.

கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர் பங்கு பற்றிய இந்நிகழ்வில், கலை இலக்கியப் பேரவைச் செயலாளரும் சட்டத்தரணியுமான சோ.தேவராஜா, மூத்த ஊடகவியலாளர் மா.பா.சி, எழுத்தாளர் பதுளை சேனாதிராஜா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துக் களத்தில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்ற உறுப்பினர் கே.கிருஸ்ணசாமி, கலை இலக்கியப் பேரவை உறுப்பினர் செந்தில் குமரன், மற்றும் யூட்சன் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் திரு.அம்புறோஸ் பீட்டர் திருமறைக் கலாமன்றம் பற்றிய சுருக்கமான அறிமுக உரையையும், பொறுப்பாளர் சதீஸ் கடந்த கால நிகழ்வுகளின் அறிக்கையும் வாசித்தார். எம்.ஐ.லோசன் அவர்கள் கடந்த ஒரு வருடத்தில் எம்மோடு இணைந்து செயல்பட்ட ஒவ்வொரு ஆர்வலர்களையும் நினைவு கூர்ந்து ஆற்றிய நன்றியுரையுடன் இலக்கிய அமர்வு 12.30க்கு நிறைவு இனிதே நிறைவுபெற்றது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: