மன்னார் அமுதன் எழுதியவை | ஜனவரி20, 2010

கவின் கலாவின் கலைப் பொங்கல் – கவியரங்கம்


தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கொழும்பு திருமறைக் கலாமன்றத்தினால் சிறப்புக் கவியரங்கமும், கலை நிகழ்ச்சிகளும் புதுச்செட்டித்தெரு – கவின் கலாசுரபி மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (14.01.2009) மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.

கவிஞர் கிண்ணியா அமீர் அலி தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் காத்தான்குடி அனு, கலைதீபம்.சுகைதா கரீம், நாச்சியாதீவு பர்வீன், திரைநிலவன், மன்னார் அமுதன், எம்.எச்.ஏ.ஹம்சா, சதீஸ் ஆகியோர் கவிபாடினர். இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் மா.பா.சி, அந்தனி ஜீவா, மேமன் கவி, வதிரி சி இரவீந்திரன், கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் சோ.தேவராஜா உட்பட மேலும் பல கலை இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பங்கு பற்றியவர்கள் பற்றிய குறிப்பும் காணொளியும்:

தலைமை: கிண்ணியா அமீர் அலி

கன்னி யொருத்தியின் – கடைக்
கண்ணின் துரத்தலால்
சன்னியாசம் கண்டு மீண்ட – கவிஞர்
கிண்ணியா அமீர் அலி

பங்கு பற்றியவர்கள்:

1. கலைதீபம் சுகைதா கரீம்

குன்றின் மேலொளி – அது
குன்றும் தண்ணொளி – இம்
மன்றிலும் ஓரொளி – இது
மறையா கதிரொளி… கலையொளி.. – கலைதீபம் சுகைதா கரீம்

2. நாச்சியாதீவு பர்வீன்

ஆச்சியா
இல்லையவள் பேத்தி
பேச்சியா – எனக் கேட்க

இரண்டுமில்லை – நான்
நாச்சியா எனவுரைத்த பர்வீன் – இவர்
பேனாவால் பேசுகின்ற கவிஞன்

3. திரைநிலவன்

கறை நிலவைப் புடம் போட்டு
கவி பாடும் கவிஞர்களுள்
பிறை நிலவைக் தன் பெயராய்க்
கொண்டெழுதும் திரைநிலவன் – ஏ.எஸ்.எம்.நவாஸ்

4. காத்தான்குடி அனு:

ஐந்தாண்டாய் நானறிவேன் இம்மண்ணை
நான்காண்டாய் உணர்ந்திருந்தேன் இவர் புலமை
ஈராண்டு கழிந்ததுவோ புன்னகையில் – கடந்த
ஓராண்டாய் இலக்கண வழூக்களே எம்முறவை ஒட்ட வைத்துள்ளன…

அவர்…
மரபுப் புலவன், மார்க் கண்டேயன்…
அரபும் பேசும் மன்னன்..
தமிழ் வழூ போக்குமென் அண்ணண் – காத்தான்குடி எம்.எல்.எம்.அன்சார்

5.அக்கரைப்பற்று எம்.எச்.எ.ஹம்சா

வயிற்றிற்கு பசியெடுத்தால் சம்சா
செவிக்கு… எம்.எச்.எ.ஹம்சா

6. இளங்கலைஞர். சதீஸ்

கவின் கலையின் சொத்து
ஒளிரும் கரு முத்து
ஆடற்கலைஞன்… அரங்கியல் அறிந்தவன் – கவி
பாடிப் பயின்றவன் – சதீஸ்

7. மன்னார் அமுதன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: