மன்னார் அமுதன் எழுதியவை | ஜனவரி1, 2010

12வது இலக்கிய அமர்வு – கொழும்பு திருமறைக் கலாமன்றம்


கொழும்பு திருமறைக்கலா மன்றத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு முழுமதி தினத்திலும் காலை 10 மணிக்கு இலக்கிய அமர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். அந்த வகையில் 12வது இலக்கிய அமர்வு நேற்று புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள கவின் கலாசுரபி மண்டபத்தில் திரு. பொன்.சக்திவேல் தலைமையில், இளங்கலைஞர் சதீசின் வரவேற்புரையுடன் ஆரம்பித்தது.

தொடர்ந்து எம்.ஐ லோசன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, டிசம்பர் மாத “ஞானம்” இலக்கிய மாசிகை- படைப்பாளி எஸ்.பொ.சிறப்பு மலர் பற்றிய சிறப்புப் பார்வைகளும், கருத்துக்களும் களம் காணத் தொடங்கின. இம்மாசிகையில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனத்தைக் கட்டுரையாளரும், விமர்சகருமான திரு. சக்திதரனும், கவிதைகள் தொடர்பான விமர்சனத்தை மன்னார் அமுதனும் மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பேராதெனிய பல்கலைக் கழகச் சட்டபீட மாணவர் என்.கே.அசோக்பரன் இன்றைய மாணவர்கள் மத்தியில் தமிழ் எனும் தலைப்பில் ஒரு சிறப்பான உரையையாற்றினார்.

இலங்கையின் பிரபல சர்ச்சை எழுத்தாளரென வர்ணிக்கப்படும் படைப்பாளி எஸ்.பொ வுடன் பழகி மகிழ்ந்தவர்களான ஞானம் இலக்கிய மாசிகையின் ஆசிரியர் திரு.ஞானசேகரனும், கொழுந்து இலக்கிய மாசிகையின் ஆசிரியர் திரு.அந்தனி ஜீவாவும் தமது உரைகளில் படைப்பாளி எஸ்பொ பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமை இளைய தலைமுறையினர் மூத்த படைப்பாளிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இலக்கிய நிகழ்வுகளை உலகறியச் செய்யும் எழுத்தாளர்கள் மா.பா.சி மற்றும் பிறைநிலவன், கவிஞர் வதிரி.இ.ரவீந்திரன் போன்றோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றினர்.

இளம் தலைமுறை நடன, நாடகக் கலைஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும், படைப்பாளிகளும் தொடர்ந்து இவ்விலக்கிய அமர்வில் பங்கு பற்றி வருவது இந்நிகழ்ச்சி தக்கு தடையின்றி சீராக செல்வதற்கு வழிசமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுகளின் நிழல்கள்:


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: