ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 1
இந்தப் பகிடிவதை எனும் விசமரத்தின் விதையானது கிபி 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் விதைக்கப் படப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அக்காலத்தில் கிரேக்கக் கலாச்சாரத்தில், நடாத்தப்படும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுபவர்களிடம் ஒற்றுமையுணர்வை, குழு உணர்வை (game spirit) ஏற்படுத்துவற்காக வீரர்களைத் தாழ்வுபடுத்தி, அவமத்தித்து, ஒறுத்தடக்கி, கடுமையான தொந்தரவிற்கும், பிரச்சினைக்கும் உள்ளாக்கினார்கள்.
கால ஓட்டத்தில் இக்காட்டுமிராண்டிக் கலாச்சாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து இராணுவத் துறையிலும் பின் கல்வித்துறையிலுமாக தன் வேர்களைப் பரப்பி விழுது விட்டு வளர்ந்துள்ளது.
பகிடி வதையின் விளைவாக நடைபெற்ற முதல் குற்றச்செயல் 1873ல் கொர்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் ஒரு புதுமுக மாணவனின் இறப்பாகப் பதிவாகியது. அன்று முதல் இன்று வரை ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள மூத்த மாணவர்களின் பகிடி வதையால் சில மாணவ, மாணவிகளாவது இறப்பது, உடல் ஊனம் அடைவது, மனம் பேதலித்துப் போதல், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாதல் என பல எண்ணிலடங்கா வன்முறைகளுக்கு புதுமுக மாணவர்கள் இலக்காவது யாவரும் அறிந்த பகிரங்க ரகசியமாகும்.
ஒரு நாட்டின் எதிகாலத் தூண்கள் மாணவர்கள் தான் என ஒவ்வொரு அரசாங்கமும் மார்தட்டிச் சொல்வதோடு நின்று விடாமல், மாணவர்களுக்கெனப் பல வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஏன் இந்த மேலாண்டு மாணவர்கள், புதுமுக மாணவர்களைப் பகிடி வதைக்கு உட்படுத்துகிறார்கள்? மேலும் வைரக்கல்லிற்கு ஒப்பிடப்படும் தமது மதிப்புற்குரிய நேரத்தை, படிப்பதில் செலவிடாமல் பகிடிவதையில் வீணாக்குகிறார்கள் என்ற கேள்வியை சில மேலாண்டு மற்றும் புதுமுக மாணவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய காரணங்கள் கீழ்வருமாறு:
1. பகிடி வதை மேலாண்டு மாணவர்களுக்கும், புதுமுக மாணவர்களுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியா பிணைப்பையும், ஒரு உறவுப் பாலத்தையும் ஏற்படுத்துகிறது
2. புதுமுக மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்யவும் (personality Development), அவர்களை திறந்த மனதுடையவர்களாகவும், (வகுப்புப் புறக்கணிப்பு… etc போன்ற) பொது விடயங்களில் ஈடுபாடுடையவர்களாக மாற்றுவதற்கும் பகிடி வதை பயன்படுகிறது.
3. புதுமுக மாணவர்கள், மேலாண்டு மாணவர்களையும், தமது துறை உறுப்பினர்களையும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை பகிடி வதையின் மூலம் கற்றுக் கொடுக்கிறோம்.
4. ஒழுங்குமுறையோடும், கடுமையான சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு ஒழுக்கமாகக் கல்வி கற்று பள்ளியிலிருந்து, பல்கலைக்கழகத்திற்கும் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு திடீரென ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. அச்சுதந்திரத்தை புதுமுக மாணவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி ஒழுக்கம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சில பயிற்சிகளை பகிடி வதையின் மூலம் பயிற்றுவிக்கிறோம்.
5. மேலாண்டு மாணவர்களின் துணையின்றி, புதுமுக மாணவர்கள் கல்வி கற்று வெளியேறுவது கடினம்.
6. சில மேலாண்டு மாணவர்கள் மனநோய்க்கு உட்பட்டவர்களாகவும், உள்ளத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளவர்களாகவும், இருக்கிறார்கள். மேலும் இவர்கள் தமது பெற்றோரால் சரிவரக் கவனிக்கப் படுவது இல்லை. அவர்கள் தான் இவ்வாறான கீழான செயல்களில் ஈடுபடுவது.
7. மேலாண்டு மாணவர்கள் பகிடிவதையை வலிந்து செய்வதில்லை. ஆனால் மாணவர்கள் மத்தியில் மாணவர் போல் நடமாடும் சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் புதுமுக மாணவர்களை மிகவும் கொடுமைப் படுத்துவதுடன் தமது கட்சிகளில் வலிக்கட்டாயமாக உறுப்பினர்களாக இணைத்துக் கொள்கிறார்கள்.
8. பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் பகிடிவதை விடயத்தில் தலையிட விரும்புவதில்லை. ஒரு விரிவுரையாளரின் முன் ஒரு மாணவன் பாதிக்கப் பட்டால் கூட அவர்கள் ஏன் என்று கேட்பதில்லை. மேலும் இவர்கள் புதுமுக மாணவர்களின் துன்பியல் கதைகளைக் கேட்டு தமக்குள் பொழுது போக்காக கதைத்து மகிழ்பவர்களாகவே இருக்கிறார்கள்.
9. முதுகெலும்பில்லாத முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவ தலைமைகளிடம் சிறந்த தலைமைத்துவப் பண்புகளோ அல்லது பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஆளுமையோ இல்லாமல் இருப்பது.
மேற்கூறப்படும் பல காரணங்களும் ஒன்றாகி இன்று மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.
ஜனநாயக(!) நாடான இலங்கையில் அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வுக்கு அமைவாக, ஒரு வருட தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு (1/5), இலவசக் கல்விக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப் படுகிறது.
அதிஸ்டம் தானாகக் கதவைத் தட்டுவது போல் சில நேரங்களில் “சிறப்பான விடயங்கள் அல்லது பொருட்கள் எமக்குக் இலவசமாகக் கிடைக்கிறது”, எனினும் “இலவசமாகக் கிடைக்கும் பொருட்களின் பெறுமதி எவ்வளவு உயர்வாக இருந்தாலும் (குருடன் கையில் கிடைத்த வைரம் போல்) மக்கள் அதன் பெறுமதியைக் குறைத்தே எடை போடுகிறார்கள்”.
மூத்தோர் கூறிய இவ்விரண்டு மேற்கோள்களையும் ஒப்புநோக்கினால், இலங்கையில், இன்று, நம் மனக்கண்களில் உடனே பளிச்சிடுவது, நம் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள “இலவசக் கல்வி”.
—ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 3
சொல்வது எல்லாம் சரிதான். காட்டுமிராண்டித்தனமான ராகிங் பிழைதான் ஆனாப்பாருங்க அதே காட்டுமிராண்டி ராகிங்க அடுத்த வருடம் சீனியர்ஸ் என்ட பெயர்ல இப்ப உள்ள ஜூனியர்ஸ் செய்வாங்களே.அதை நிறுத்தினால் இந்தக்கலாச்சரம் நின்றுவிடும்.
அதே நேரம் கொஞ்ச காலத்தின் பின் இந்த ரேகிங்க பற்றி யோசித்து பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வரும்..
சின்ன விடயம் ஒன்டு.இலங்கையின் 14 பல்கலைக்கழகமான உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ராகிங் இல்லவே இல்லை..
————
————
அமுதன் நவின்றது:
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அஸ்பர்.
//அதே காட்டுமிராண்டி ராகிங்க அடுத்த வருடம் சீனியர்ஸ் என்ட பெயர்ல இப்ப உள்ள ஜூனியர்ஸ் செய்வாங்களே.அதை நிறுத்தினால் இந்தக்கலாச்சரம் நின்றுவிடும்.//
நீங்கள் கூறிய கருத்தை மூன்றாவது பாகத்தில் தெரிவித்துள்ளேன். பகிடிவதையை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தடை செய்யப் பட வேண்டும்.
//அதே நேரம் கொஞ்ச காலத்தின் பின் இந்த ரேகிங்க பற்றி யோசித்து பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வரும்//
நீங்க சிரித்த நிமிடங்களையும், பகிடிவதையால் உங்கள் நண்பர்கள் யாராவது கொடுமையாக பாதிக்கப் பட்டிருந்தால் அவர்களின் நிலையையும் ஒரு பதிவாகவோ அல்லது கருத்தாகவோ கூறுவீர்களா?
உங்கள் கருத்து இக்கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் என நம்புகிறேன். நன்றி
By: asfer on திசெம்பர்21, 2009
at 3:23 பிப
அருமையான ஆக்கம்… இன்று பல்கலைகழகங்களில் காணப்படும் நிலையை தொட்டு காட்டியிருக்குறீர்கள்….
—-
—-
அமுதன் நவின்றது:
உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி துஷி
By: Thusy on திசெம்பர்22, 2009
at 2:03 முப