மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்18, 2009

ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 1


இவ்வாண்டின் மார்ச் மாதத்திலும், நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும் நான் பகுதி நேரமாகக் கல்வி கற்ற ஒரு கல்வி நிறுவனத்தில்( 2008-2009)ஏற்பட்ட மாணவர்களுக்கிடையிலான பகிடிவதைப் பிரச்சினையை காவல்துறை வந்து அடக்குமளவிற்கு விபரீதமானதை பல ஊடகங்களிலும் வெளிச்சமிட்டிருந்தார்கள்.

ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களில் வளர்ந்து வரும் அல்லது கல்வி நிறுவனங்களை களமாகப் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகளால் வளர்க்கப்படும், பகிடிவதை எனும் வன்முறையை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் பகிடிவதையை எதிர்க்கும் (anti ragging) மாணவர்களிடையே விரிவுரையாளர்கள் கோரினர். நான் சமர்ப்பித்த கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன். வரும் புதிய கல்வியாண்டிற்கு (2010) இக்கட்டுரை தேவையென நினைப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையலாம்.

—————————–
—————————–

“ஆர்வத்தோடும், கண்களில் தெறிக்கும் மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும், எதிர்காலம் பற்றிய பல வண்ணக் கனவுகளோடும் ஒரு மாணவன் (மாணவி) பல்கலைக்கழகத்திற்குள் (ஏதோ ஒரு கல்வி நிலையத்துள் மேற்படிப்பிற்காக) காலெடுத்து வைக்கிறான். போட்டி நிறைந்த இவ்வுலகத்தை கல்வியால் வெல்ல வேண்டும் என்ற ஒரு வெறி தெறிக்க, அவனுள் ஒரு பெருமித உணர்வு. ஆசையோடு பலமுறை கடந்து சென்ற பல்கலைக்கழகத்திற்குள் இன்று தானும் ஒரு மாணவனாக நிற்கிறோம் எனும் பெருமிதம் அவன் முகமெங்கும் பிரகாசிக்கிறது.

தன் தாய் மஞ்சல் கயிற்றில் கட்டியிருந்த ஒரு துண்டு தங்கத்தையும் அடைமானம் வைத்து இங்கனுப்பியதற்கு, நல்ல முறையில் கல்வி கற்று ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்று அவள் கழுத்தில் போட்டு விட வேண்டுமென்ற வைராக்கியம். இத்தனையும் தாண்டி எதிர்காலம், வேலை, தங்கச்சி கல்யாணம், புது வீடு என கற்பனைக் குதிரையோடு சேர்ந்து காலும் ஓட, தன் வகுப்பிற்குள்ளே வந்து சேர்கிறான்.

முதல் நாள், முதல் வகுப்பு. அவன் வகுப்பறை முழுவதும் மேலாண்டு மாணவர்கள் (seniors) சூழ்ந்திருந்து பெருங்குரலெடுத்து அவனை வரவேற்கிறார்கள். புது அனுபவம் அவனுக்கு. எங்கோ பறப்பது போல் மகிழ்ச்சியாய் இருந்தது.

ஆனால் இவையெல்லாம் ஒரு சில நிமிடங்களே நிலைத்தன. திடீரென ஒருதொகை மாணவர்கள் இழிவான வார்த்தைகளைக் கூறிக் கொண்டு புயலென அவ்வகுப்பறையினுள் வந்தார்கள். அவர்கள் புது மாணவனை உடைகளைக் கழட்டுமாறு ஓங்காரமிடுகிறார்கள். அனைவரும் ஒன்று கூடி ஒருவனை அதைச் செய், இப்படிச் செய்யென கட்டளையிட, அவனும் பயத்தால் நடுங்கிக் கொண்டே அனைத்தையும் செய்கிறான்.

அவன் மறுக்கும் போது உடல் ரீதியாக அவனைத் துன்புறுத்துகிறாகள்.“நீ ஆம்பளையாடா, என்னையெல்லாம் கழட்டச் சொன்னதும் கழட்டிக் காட்டினன்; இங்க ஆம்பளைகள்(?) தானே நிற்கிறோம். டக்கெண்டு கழட்டுடா ” என எழுதவியலாத சொற்களால் உளவியல் ரீதியாகவும் தாக்குகிறார்கள். இவ்வாறு புதுமுக மாணவர்கள் எதிர்நோக்கும், உளவியல் மற்றும் உடலியல் தாக்குதல்கள் எண்ணிலடங்கா. மேலும் புதுமாணவர்கள் தங்களைத் தாங்களே கீழ்த்தரமாக (Self Torture) உடலியல் தொல்லை செய்து கொள்ள வற்புறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு செய்ய மறுக்கையில் மேலாண்டு மாணவர்கள், புதுமுக மாணவர்களின் உடலுறுப்புகளைத் தொட்டு உடலியல் துஸ்பிரயோகம் செய்கிறார்கள். இத்தகைய அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் அவன் வண்ணக் கனவுகள் நொருங்க, வெட்கத்தாலும் அழுகையாலும் முகம் வீங்கி, துக்கம் இதையத்தை அடைக்க அப்படியே மயங்கி விழுகிறான். அவன் கனவு வீட்டின் கதவுகளோடு சேர்ந்து சாளரங்களும் மூடிக்கொள்ள இன்று வரை தூக்கத்திலும் எதையோ பிதற்றிக் கொண்டு இருண்ட அறைகளில் வாழ்கிறான்”

மேற்கூறிய எதுவும் கற்பனையல்ல. யாவும் உண்மை. உலகளாவிய அளவில் இன்று பெருகிவரும் பகிடிவதையை ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தாற் போல ஆங்கிலத்தில் hazing, fagging, bulling, pledging, hourse-playing… என வெவ்வேறு பெயர் கொண்டு அழைத்தாலும் இதன் நோக்கமென்னவோ எல்லா இடங்களிலும் காட்டுமிராண்டித் தனமான கலாச்சாரமாக உள்ளது.

–ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 2

ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 3Responses

 1. good article amuthan well done

  அமுதன் நவின்றது:

  நன்றி அண்ணா

 2. இந்த காட்டுமிராண்டிதனத்தினை கடுமையான சட்டங்கள் மூலம் தான் அடக்க வேண்டும்..பாதிக்கப்படுவோர் உடனடியாக தெரிவிக்க வேண்டும் யாருக்கும் பயமில்லாமல்…

  ——————
  ——————

  அமுதன் நவின்றது:

  நீங்கள் சொல்வது சரி. பூனைக்கு மணிகட்டுவதில் உள்ள சில பிரச்சினைகளை அடுத்த பாகத்தில் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

  கடுமையான சட்டங்கள் மூலம் தான் இதை அடக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

  நன்றி

 3. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: