மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்16, 2009

ஆக்கங்களும் விமர்சனங்களும் அறியாமையும் – பாகம் 2


( குறிப்பு: எந்தவொரு அமைப்பையோ, தனிமனிதனையோ புகழ்வதோ அல்லது புண்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல)

————————————————————————
இக்கட்டுரையின் நோக்கம்:
ஒருவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியுள்ள யாரோ ஒருவர் உன்னதமான மனதுடன் கேட்டுக்கொள்ளும் பிரார்த்தனையே அவரை வாழ்க்கையின் இறுதி வரை வழிகாட்டிச் செல்கிறது என்பதில் தீவிர நம்பிக்கையுடையவன் நான். ஒவ்வொரு சக மனிதனையும் புகழ்வதற்கும், கெளரவப் படுத்துவதற்கும் உரிய உயரிய மனங்களையும் பண்புகளையும், இரசனை மிக்க நம் மக்களிடையே தான் இறைவன் படைத்துள்ளான். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் உயரிய நிலையில் தான் எல்லோருக்கும் பொதுவான வல்லமை மிக்க இறைவனால் வைக்கப்பட்டிருக்கிறோம். இருப்பினும் சமூகப் பிரபலங்கள் எழுதும் கண்ணைக்குத்தும் ஆக்கங்களையும், மட்டமான கருத்துக்களையும் கேட்டும் கேளாதது போல் விட்டுச்செல்லும் சகிப்புத்தன்மையுடைய பண்பட்ட மனிதனாக நான் இன்னும் வளரவில்லை எனும் காரணமே இக்கட்டுரையை எழுத என்னைத் தூண்டுகிறது.
———————————————————————–

ஆக்கங்களும் விமர்சனங்களும் அறியாமையும் – பாகம் -1– ன் தொடர்ச்சி….

ஊடகங்கள் என்கையில் இன்று இலக்கிய மாசிகைகளும், வாராந்திர ஜனரஞ்சக சஞ்சிகைகளும், இரு திங்கள் ஏடுகளும், தேசியப் பத்திரிக்கைகளும், ஒலி ஒளி மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் எங்கும் வியாபித்து புதுமுனைப்போடும், பொலிவோடும் கலை இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கதாகும். தேசியப் பத்திரிக்கைகளைப் போலவே செயல்பட எத்தணிக்கும் இலக்கிய மற்றும் ஜனரஞ்சக பத்திரிக்கைகள் படைப்பாளியின் ஆக்கங்களைக் கத்தரித்து வெளியிடுவது, கத்தரித்து வெளியிட்ட ஆக்கங்களுக்கும் படைப்பாளியே பொறுப்பு என்பது, ஒரு படைப்பாளியை மிகைப்படுத்துவது, மற்றொருவரை இருட்டடிப்புச் செய்வது போன்ற குணங்களும் சேர்ந்தே வளர்ந்து வருவது தான் வருந்தத் தக்கதாகும்.

ஊடகங்களுக்கென பொதுவான சர்வதேச விதிமுறைகளும், கருத்துச் சுதந்திரமும் பெருமளவில் பேசப்பட்டாலும், செயல்பாட்டில் காண்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலும் ஒரு சிறு பத்திரிகை ஆரம்பிக்கப்படும் போது சிறுபத்திரிகைகளுக்கான பொதுவான விதி முறைகளோடு ஆரம்பிக்கப்பட்டாலும், அப்பத்திரிகைக்கான தனியான நோக்கங்களும், விதிமுறைகளும் ஆசிரியர் குழுவினால் வரையறுக்கப்படுகின்றன.

இலத்திரணியல் ஊடகங்களில் ஒன்றான வலைப்பூக்களுக்கும் இது பொருந்தும். வலைப்பூக்களுக்கான சர்வதேச விதிமுறைகளும், பெயரிலிச் சுதந்திரமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், தனக்கான வலைப்பூவை உருவாக்கும் நிர்வாகி தன் வலைப்பூவிற்கான சில விதிமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.

தனிமனிதக் கருத்துக்கள் ஆதாரமற்ற தகவல்களோடு ஒரு ஆக்கமாக முன்வைக்கப்ப்டும் போது பல பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதோடு, படைப்பாளியும் பல எதிர்ப்புகளையும், உயிர் அச்சுறுத்தலைகளையும் சம்பாதித்துக்கொள்ள நேரிடும். எனவே அவ்வாறான ஆக்கங்கள் தகுந்த ஆதாரங்களைக் கொண்டதாக அமைய வேண்டும்.

இவ்வாறான எத்தகைய படைப்பாக இருந்தாலும், அப்படைப்பு சிறந்ததா, சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உகந்ததா, நிலைத்து நிற்கும் ஆற்றலுடையதா, உண்மைத் தன்மையுடையதா என்பதைத் தீர்மானிப்பதில் விமர்சகனின் பங்கு அளப்பரியதாகும். ஏனெனில் குளிரூட்டப்பட்ட உணவு விடுதிகளில் உணவின் பெயரறியாமலேயே, விரும்பிச் சில ஆயிரங்களைச் செலவு செய்யும் நம் மக்கள், சில நூறு ரூபாய்களையாவது மதிப்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்குச் செலவிட ஆர்வம் காட்டுவதில்லை.

எனவே நூல்விமர்சனம், திறனாய்வு மற்றும் பிற துறைசார்ந்த விமர்சனங்கள் போன்றவற்றில் விமர்சகர்களின் பங்கு இன்றியமையாததாகிறது. அவை பெருமளவில் வரவேற்கப்பட வேண்டும். விமர்சனங்களைப் படித்த பின்பே பலர் திரைப்படத்திற்கோ அல்லது புத்தக நிலையத்திற்கோ செல்கிறார்கள் என்பது கண்கூடு. இவ்விமர்சனங்களே ஆக்கங்களின் தரத்தை உள்ளபடி மக்களிடையே கொண்டு சேர்க்கிறது.

1921ல் மகாகவி பாரதியின் மறைவிற்குப் பின்னர் சில கவிஞர்களின் ஆக்கங்கள் சிறப்பாக இருந்திருந்தாலும் அவை பெரிதாக பேசப்படவில்லையெனவும், மக்களைச் சென்றடையவில்லையெனவும் அதற்குக் காரணம் தகுந்த முறையில் அப்படைப்பாளிகளின் கவிதைகள் விமர்சிக்கப் படாமையே என கவிதைகளுடன் ஒரு சம்வாதம் எனும் நூலில் ஞானக்கூத்தன் தெரிவிக்கிறார்.

இத்தகைய மதிப்புமிக்க விமர்சனத்தை செய்யும் விமர்சகளுக்கென்று சில தகைமைகளும் உண்டு. அவற்றுள்….

….ஆக்கங்களும் விமர்சனங்களும் அறியாமையும் – பாகம் -3


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: