மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்14, 2009

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இனிமையான இரண்டாம் சந்திப்பு


தேசிய கலை இலக்கியப் பேரவையில் பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழ்ப் பதிவர்களின் இரண்டாம் சந்திப்பு சிந்தனைச் சிறகினிலே கீர்த்தனாவின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இவ்வுரையில் கடந்த சந்திப்பை ஏற்பாடு செய்த பதிவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, கடந்த நிகழ்வுகளையும் தொட்டுச்சென்றார்.

60க்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 5க்கும் மேற்பட்ட பெண்பதிவர்களும் கலந்து கொண்டமை மனமகிழ்வைத் தந்தது.

வரவேற்புரையைத் தொடர்ந்து பதிவர்களின் சிறு அறிமுகமும் அதனைத் தொடர்ந்து மதுவர்மன் பயனுறப் பதிவு எழுதுவது எப்படி எனும் தலைப்பில் கலந்துரையாடலை தொடங்கியவுடன் முதலாவது கருத்தை மேமன் கவி கூறித் தொடங்கி வைத்தார். பதிவுகளில் எதை எழுதவேண்டும் என்பது பதிவர்களின் தனிப்பட்ட விருப்பம், அதை எவரும் கட்டுப்படுத்த முடியாது என்ற கருத்தோடு பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

பெண்களும் பதிவுலகமும் என்ற தலைப்பில் உறுபசி தர்ஷாயணி பதிவிடுவதில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசினார். அத்தலைப்பிற்கும் பல சிறந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் நிகழ்வுகளை live stream ல் நேரடியாக்கக் கண்டு களிப்புற்ற நிழல் சற்குணா பெண்பதிவர்களை முன்னால் வந்து அமருமாறு தன் கோரிக்கையை விடுத்தார்.

அதன் பின் இலங்கை தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு பயனுறக் கையாழ்வது எனும் தொழில்நுட்பத் தகவல்களை கெளபோய் மது எடுத்துரைத்தார்.

தொழில்நுட்பத் தகவல்களைத் தொடர்ந்து மு.மயூரன் பின்னூட்டங்கள் பற்றிய கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்தார். கலந்துரையாடலில் பெயரிலிப் பின்னூட்டங்களால் ஏற்படும் மனவுளைச்சல் தொடர்பாகவும், பின்னூட்ட சுதந்திரம் தொடர்பாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இறுதி நிகழ்வாக பதிவர்களிடையே குழு விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டது. இனிதே நடைபெற்ற இந்நிகழ்வில் வழங்கப்பட்ட சிற்றுண்டிகளும், சிற்றுண்டி நேர இடைவெளியும் பதிவர்களிடையே இருந்த இடைவெளியைக் குறைக்க உதவியது.

கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 5.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: