மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்25, 2009

இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு – 2



இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு – 2 எதிர்வரும் 13 ம் திகதி தேசிய கலை இலக்கியப் பேரவையில், (வெள்ளவத்தை) இடம்பெற இருக்கின்றது. இச் சந்திப்பிலே பல விடயங்கள் இடம்பெற இருக்கின்றன. இலங்கையின் அனைத்துத் தமிழ் வலைப் பதிவர்களும் அன்றைய தினம் ஒன்றாகச் சந்திப்போம்.

சந்திப்பு தொடர்பான விபரங்களைத் தருகின்றேன்….

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கிற்கு முன் ஒழுங்கை)

காலம் : டிசம்பர் 13 (தமிழ் கார்த்திகை 27) , மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்

பதிவர்கள் தங்கள் வருகையை அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers

இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


Responses

  1. வருகிறோம்… கலக்குறோம்…

    எங்கள் நிகழ்வை நாங்கள் வெற்றிகரமாக மாற்றுவோம்…..

    —-
    —-

    அமுதன் நவின்றது:

    வாங்க தோழர்களே., எல்லாரையும் மீண்டும் பார்ப்பதில் எல்லோருமே ஆர்வமாக உள்ளோம்.

  2. வர முயல்கிறேன் நண்பரே
    தூரமும் நேரமும்தான் பிரச்சினை இருப்பினும் கலந்துக் கொள்வதால் பல அனுகூலங்கள் கிட்டும் என நம்புகிறேன்

  3. முன்னைய காலங்களில் தவறியதை… கட்டாயம் பிடித்துக்கொள்ள வேண்டும் இம்முறை…

  4. நல்லது சந்திப்போம்

  5. வந்து உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாயிருக்கிறேன்..

    —–
    —–

    அமுதன் நவின்றது:

    வாங்க யோ., உங்களையும், சக பதிவர்களையும் சந்திப்பதில் நானும் ஆர்வமாக உள்ளேன்

  6. அன்பின் பதிவர்,

    இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

    அன்புடன்,

    இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அமைப்புக் குழு


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: