மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்23, 2009

நீ… தோழனா !


பாசத்தை முழுவதுமாய்த் தருவதாகக் கூறி

பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு

வாசமென்றால் என்னவென்று அறியா நீமூடா – என்

வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா

*
*

ஊனன் கண்ட கனவு மெய்க்க

உடலை வருத்தி உழைத்தோம்

உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை

உதறுகையில் திகைத்தோம்

*
*

பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா

வாழ்க்கையென்று நினைத்தோம்

பாசத்தோடு அரவணைத்து – உன்

வேசங்களை மறைத்தோம்

*
*

கருத் துரைக்க அழைத்திடுவாய்

மறுத் துரைத்த தில்லை

மறந்து போன நாட்களுண்டு; மனம்

மரத்துப் போன தில்லை

*
*

ஆசுகவி உரைத்த வர்கள்

கொண்ட தில்லை பட்டம்

ஆறுகவி புனையு முன்னே

உரைக்கிறாய் நீ சட்டம்

*
*

தோழமைக்கு நல்ல சான்று

கொடுப்ப தில்லை உயிரை

தோழனுக்கு தோழனாக

வாழ்வதே எம் வலிமை


Responses

 1. //தோழமைக்கு நல்ல சான்று

  கொடுப்ப தில்லை உயிரை

  தோழனுக்கு தோழனாக

  வாழ்வதே எம் வலிமை //

  இரசித்தேன்….
  நல்ல கவிதை……

  ——–
  ——–

  அமுதன் நவின்றது:

  நன்றி கோபி… தினக்குரல்ல பார்த்தேன்…கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்

 2. நல்ல கவிதை.வழமையான உங்கள் கவிதை வடிவில் இருந்து மாறுபட்டிருக்கிறது.

  ——–
  ——–

  அமுதன் நவின்றது:

  நன்றி சேரன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் கருத்தைக் கூறியுள்ளீர்கள். நன்றி.

 3. நல்ல தோழமை கவிதை..நட்பின் அருமையை உணர்த்தியது..நன்றி…

  —–
  —–

  அமுதன் நவின்றது:

  நன்றி புலிகேசி. நம் உணவில் கையிட்டு உண்டவர்கள் நமக்கு துன்பமிழைக்கையில் தான் நட்பு, துரோகமாகி விடுகிறது

 4. நன்றாக இருக்கிறது. ஆனால் துரோகம் செய்பவர்கள் பற்றியும் நம்பிக்கைக்கு மாறாக நடப்பவர்கள் பற்றியும் எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம்

  ——–
  ——–

  அமுதன் நவின்றது:

  நன்றி முத்துசாமி. நீங்கள் சொல்வது சரி தான்.

 5. நன்றாகவுள்ளது நண்பரே..

  ——
  ——

  அமுதன் நவின்றது:

  நன்றி ஐயா

 6. that is good

 7. சிறந்த பகிர்வு

  தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com/) தளத்தில் இணைத்து உதவுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: