மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்16, 2009

அ முதல் Z வரை – அமுதன்


இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த யோவொய்ஸ்சிற்கு நன்றிகள்

விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

தமிழ்

அன்புக்குரியவர்கள்: எல்லோருமே

ஆசைக்குரியவர்: ஒரு சிலர்

இலவசமாய் கிடைப்பது: வெறும் வார்த்தைகள்

ஈதலில் சிறந்தது: இருப்பதைப் பகிர்தல்

உலகத்தில் பயப்படுவது: நாவிற்கு

ஊமை கண்ட கனவு: பலிப்பதும், பலிக்காமல் போவதும் அவரவர் முயற்சியின் பலன்

எப்போதும் உடனிருப்பது: புத்தகங்கள்

ஏன் இந்த பதிவு: யோ வொய்ஸின் அழைப்பால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: அறிவு

ஒரு ரகசியம்: பதிவர்கள், பதிவர்கள் மட்டுமல்ல

ஓசையில் பிடித்தது: அவளின் குரல்

ஔவை மொழி ஒன்று: அப்பா எனக்கு சொல்லித் தந்தது, மூதுரையிலிருந்து

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்

எனவே பெயரிலிகளை க்(அனானி) கணக்கிலெடுக்கத் தேவையில்லை

(அ)ஃறிணையில் பிடித்தது: பூனை

English

1. A – Avatar (Blogger) Name / Original Name :அமுதன் @ மன்னார் அமுதன்

2. B – Best friend? : டீஜே

3. C – Cake or Pie? : கேக்

4. D – Drink of choice : ஆற வைத்த கொதிநீர்

5. E – Essential item you use every day? : எழுதுகோல்

6. F – Favorite color ? : இள நீலம்

7. G – Gummy Bears Or Worms : இரண்டுமில்லை

8. H – Hometown? : மன்னார்

9. I – Indulgence? : வாசிப்பு

10. J – January or February? : ஜனவரி – புத்தாண்டு

11. K – Kids & their name : முதல்ல மூணு முடிச்சு, அப்புறம் தான் மத்ததெல்லாம்

12. L – Life is incomplete without : காதல்

13. M – Marriage date? : நாளைக்கேன்னாலும் ஓகே தான். பொண்ணு இருந்தா சொல்லி அனுப்புங்க

14. N – Number of siblings : ஒன்னு…. ரெண்டில்ல… அஞ்சு

15. O – Oranges or Apples : அப்பிள்

16. P – Phobias/Fears? : பயமா, ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி. அதுக்காக ஆள் வச்செல்லாம் அடிக்கக் கூடாது யோ

17. Q – Quote for today? : நான் எடுக்க வேண்டிய ஆயுதத்தை; என் எதிரியே தீர்மானிக்கிறான் –மாவோ

18. R – Reason to smile? : சிறு புன்னகையிலிருந்து தான், அமைதியெனும் பெருந்தோட்டம் பூக்கிறது.
(உங்களை எதிர்கொள்பவரின் முகங்களே, உங்கள் முகத்தின் உண்மையான தோற்றத்தைக் காட்டும் கண்ணாடி)

19. S – Season? : சீசன் டு சீசன், சீசன் மாறலாம், நாங்கல்லாம் எப்பவுமே ஒரே மாதிரித் தான்

20. T – Tag 4 People? : சிந்தனா, வேல்ஜி, சுபானு, தெருவிளக்கு

21. U – Unknown fact about me? : இப்பல்லாம் குட்டீஸ்னா ரொம்ப பிடிக்குது.. ஏன்னு தெரியல (Child abuse இல்லய்யா…)

22. V – Vegetable you don’t like? : வாழைக்காய்

24. X – X-rays you’ve had? : ம்ம்ம் அரச சேவைக்காக மருத்துவ சோதனையின் போது (Medical Test)

25. Y – Your favorite food? : கோழிக்கறியும் சோறும்

26. Z – Zodiac sign? : தெரியலயே


Responses

 1. இந்தத் தொடர் இன்னும் சுத்துதா? நான் முன்னரே எழுதி விட்டேன். உங்கள் பதில்கள் நன்று.

  ———–

  அமுதன் நவின்றது:

  நன்றி புலிகேசி

 2. பதிவை தொடர்ந்தற்கு நன்றி அமுதன்

  உங்களது பதிவு நன்றாயிருக்கு

  ———-

  அமுதன் நவின்றது:

  நன்றி யோ

 3. ஔவை மொழி ஒன்று: அப்பா எனக்கு சொல்லித் தந்தது, மூதுரையிலிருந்து

  நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
  நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்
  தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
  குலத்து அளவே ஆகுமாம் குணம்

  எனவே பெயரிலிகளைக் (அனானி) கணக்கிலெடுக்கத் தேவையில்லை…

  அருமை…

  ——————

  அமுதன் நவின்றது:

  நன்றி ஐயா

 4. என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு நன்றி அமுதன்…
  என் எல்லை மீறி நாளையே இடுகிறேன்…எனது இடுகையை

  ———————-

  அமுதன் நவின்றது:

  இணையத்திற்கேது எல்லை.. தெருவெங்கும் ஒளிபரவ எரியவிடுங்கள் உங்கள் விளக்கை

 5. ஆசைக்குரியவர்: ஒரு சிலர்
  ஒருவராக அல்லவா இருக்க வேண்டும்

  *******************

  அமுதன் நவின்றது:

  நீங்க சொல்ற அந்த ஒருவர் இன்னும் இல்லைங்க. இப்ப நான் சொல்லிருக்குற ஆசைக்குரிய ஒரு சிலர், என்னோட அக்காட மகன், மகள்..& எல்லா குட்டீசும்., etc


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: