மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்5, 2009

சிலவகைத் தம்பதிகளும், அவர் தம் தாம்பத்தியமும்


ஒவ்வொரு நாளும் நம் கண் முன் மகிழ்ச்சியாக வலம் வரும் தம்பதிகள் ஏராளம். எல்லோரும் உண்மையிலேயே சந்தோசமாகத் தான் உள்ளார்களா என்று பார்த்தால்; நிச்சயமாக இல்லை. பள்ளமும், மேடும்; ஊடலும், கூடலும் நிறைந்ததே வாழ்க்கையென்றாலும் பெரும்பாலான தம்பதிகளின் வாழ்வில் ஊடலும், உள்ளத்தில் பள்ளமுமே உள்ளது. இந்தப் பள்ளத்தில் பாசத்தை நிறப்பாமல் ஏன் வேசத்தை நிறப்பித் திரிகிறார்கள்?…

அயலிளுள்ள அக்கா வீட்டிற்கு போக நேர்ந்தது. அதன் விளைவே இப்பதிவு.

பிசைந்து வைக்கப் பட்டிருந்த மாவிற்கு அருகில் அமர்ந்திருந்த அக்காவிடம் கேட்டேன்.

நான்: ஏன் அக்கா மாவைப் பிசைந்து வைத்து விட்டு கவலையாக இருக்குறீங்க. ரொட்டியைப் சுட வேண்டியது தானே

அக்கா: பசிக்குது தம்பி. எங்கடவர் கடைக்குப் போயிட்டேன். அதான் அவர் வர்ற வரைக்கும் பாத்திட்டிருக்கன்

நான்: அதுவும் சரி தானக்கா. வந்தப்பிறகு ரொட்டி சுட்டா, சூடா சாப்பிடுவேர் தான். புருசன் சாப்பிட்ட பிறகு சாப்பிடனும் என்பதெல்லாம் அந்தக்காலம் அக்கா. நீங்க சுட்டு சாப்பிடுங்களேன். ஏன் பசியோட இருக்கிறீங்க

அக்கா: அவர் மாவைப் பிசைந்து கொண்டிருகையில தான் கடைப்பொடியன் வந்து கூப்பிட்டான். அவர் வந்து தான் ரொட்டி சுடோனும்.

அதென்னண்டா தம்பி, நான் வெளிநாட்டுப் பொடியன தானே முடிக்கிறதா இருந்துது. அங்க இப்பிடி எல்லாம் சமைக்க மாட்டாங்க எண்டு சொன்னாங்க. அதான் நான் சமைக்கப் பழகல.

நான் கண்ட சிலவகைத் தம்பதிகளும், அவர் தம் தாம்பத்தியமும். தாம்பத்தியம் மூலமே அன்னியோன்யம் வளர்கிறது. அதுவே அவர்களைப் பிரிக்க முடியா பந்த பாசத்திற்குள் கட்டி வைக்கிறது என்பது என் கருத்து.

வகை 1.

தம்பதிகளில் கணவன் குடிகாரனாகவும், நாள் தவறாமல் நன்கு குடித்து விட்டு மனைவியை வதை செய்பவனாகவும் இருக்கிறான். இல்லையென்றால் சந்தேகம் கொண்டு வார்த்தைக் கணைகளால் காயப் படுத்துகிறான். அவன் மனைவியோ அனைத்தையும் தாங்கிக் கொண்டு தன் கணவனைத் எப்பாடு பட்டாவது திருத்தி விட வேண்டுமென பிரயாசைப்படுகிறாள்.

இவ்வாறு நல்லெண்ணம் கொண்ட மனைவியையும், தீய எண்ணம் கொண்ட கணவனையும் நாம் அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

வகை2:

கணவன் மிகவும் நல்லராக இருப்பார். மனைவியோ அவரின் குணாதிசயங்களுக்கு சிறிதும் பொருத்தமில்லாத குணங்களைக் கொண்டு இருப்பார். தன்னுடையை புத்திக்கு எட்டாத சிறு சிறு விசயங்களுக்காக அவள் அவனோடு எந்நேரமும் சண்டையிடுபவளாக, ஒவ்வொரு விசயத்திலும் தன்னை முன்னிருத்த முயன்று முயன்று, முடியாத நிலையில் கணவனைச் சாடுபவளாக இருக்கிறாள்

வகை3:

கணவன் தன் வேலையைத் தான் பார்ப்பார். மனைவி தன் வேலையை தானே பார்த்துக் கொள்வார். இருவரும் எப்போதும் ஒருவராகாமல், இருவராகவே வாழ்ந்து வருவார்கள். இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்ளாமல், ஒருவருடைய விடயத்தில் மற்றொருவர் பங்கெடுக்காமல், தோள் கொடுக்காமல் நான்கு சுவருக்குள் ஊருக்காய் வாழ்வார்கள். இவர்களுக்குள் ஊடலும் இல்லை. கூடலும் இல்லை. சரியாகச் சொன்னால் இவர்கள் தம்பதிகளே இல்லை.

வகை4:

வெகுசில தம்பதிகள் மட்டுமே ஊடல் மற்றும் கூடலுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இருப்பினும் இவர்களில் ஒருவர் விரைவிலேயே மரணித்து விடுகிறார்கள். அல்லது இவர்களுடைய மரணம், நமக்கு வெகு விரைவிலேயே ஏற்படுவது போல் தோன்றுகிறது.

நல்லவனுக்கு கெட்ட மனைவியும், கெட்டவனுக்கு நல்ல மனைவியும், மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பவனுக்கு விபச்சாரியும், உத்தம பத்தினிக்கு மது, மாதுவுடன் புழங்கும் கணவனும் அமைவது ஏன்?

இதனை இயற்கை, இயற்கையின் சமச்சீர் விதி என்று புறந்தள்ள முடியவில்லை. இல்லறப் புரிந்துணர்வுகள் பற்றி தொண்டை கிளியக் கத்தினாலும் ஏன் காலம் காலமாக இவை மாறாமல் உள்ளன.

மனப் பொருத்தம் பார்க்காமல், பணப் பொருத்தம் பார்ப்பதாலா? அல்லது திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாலா? நீங்களும் சொல்லுங்கள்….

இப்பதிவை இளமை விகடனில் வாசிக்க: சுட்டி


Responses

 1. எனக்கு அனுபவம் இல்லையப்பா… 🙂

  ———
  அமுதன் நவின்றது:

  எனக்கும் தான் இல்லை. இருந்தாலும் ஆராய்ச்சி பண்ணலையா…? எல்லாம் ஒரு முயற்சி தானே சுபானு

 2. வணக்கம் அமுதன்

  ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.
  எனக்கு தெரிந்து இரண்டு விடயம்தான் உங்கள் கேள்விக்கு பதில்.

  1. முதல் பதில் உங்கள் பதிவிலேயே இருக்கு அது

  மனப் பொருத்தம் பார்க்காமல், பணப் பொருத்தம் பார்ப்பதால்

  2. திருமணம் செய்துகொள்பவர்கள் அந்த உறவின் அர்த்தம் பற்றி யோசிக்காமல் ஆணுக்கு தனக்கு சமைக்க, துவைக்க, மற்ற தேவைக்கான ஒரு ஆள் எனவும்,

  பெண்னுக்கு தன்னை கவனிக்க, சம்பாதிக்க, தன் தேவைகளை நிறைவேற்ற ஒரு ஆள் எனவும் இந்த சமூகத்தால் பரப்பப்படும் செய்திகளை மட்டுமே உள்வாங்கியவர்களாய் மற்றபடி யோசிக்காதவர்களாய் இருப்பதால்தான்

  இராஜராஜன்

  ——————–

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி இராஜராஜன். சிறந்த இல்லறத்தை வாழ முயலும் சிலரும், துணை சரியில்லாததால் வழி தவறுவதே மனதிற்கு கஸ்டமாக உள்ளது

 3. நன்றாக அலசி அழுதியுள்ளீர்கள். “மனப் பொருத்தம் பார்க்காமல், பணப் பொருத்தம் பார்ப்பதாலா? அல்லது திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாலா?”

  இவை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதப் பிறவியும் வித்தியாசமானவர்கள். மற்றவர் மனத்தைப் புரிந்து கொள்ள முயல்பவர்களே மகிழவும் மகிழ்வூட்டவும் செய்கிறார்கள.

  ———————————

  அமுதன் நவின்றது:

  உங்களின் சரியான கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் ஐயா. நன்றி

 4. நானும் சுபானுவின் பக்கம்தான். நோ அனுபவம்ஸ்.

  எல்லாவற்றுக்கும் முதல் காரணமாய் நினைப்பது நாங்கள் பொத்தி பொத்தி வைக்கும் எங்களது கலாச்சாரம்.

  ————————

  அமுதன் நவின்றது:

  முதற்கண் நன்றி யோ.

  //எல்லாவற்றுக்கும் முதல் காரணமாய் நினைப்பது நாங்கள் பொத்தி பொத்தி வைக்கும் எங்களது கலாச்சாரம்.//

  கலாச்சாரம் என்ற போர்வைக்குள் நாம் அதை மீறத்தான் செய்கிறோம். காப்பாற்றவில்லையே. கலாச்சாரத்தை கட்டிக்காக்கா விட்டாலும், சீரழிக்காமல் இருப்பதே சிறப்பு.

  மீண்டும் நன்றி யோ

 5. அழகான பதிவு….
  எனக்கும் அனுபவம் இல்லைத் தான்… ஆனால் யதார்த்தத்தை எழுதியிருக்கிறீர்கள்.
  வகை 3 இனர் எங்கள் நாட்டில் சிறிது குறைவு என்றாலும் வெளிநாடுகளில் அதிகம் என நம்புகிறேன்.
  வகை 1, 2 தான் அதிகம்….

  என்ன செய்வது….
  எல்லாம் எங்கள் பிழை தானே….

  ————————————

  அமுதன் நவின்றது:

  நிச்சயமாக நமது பிழைதான். நாம் பெற்றோராகும் போது தவிர்க்கப் பட வேண்டியவை. நன்றி கனக கோபி

 6. அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம், வாழ்வின் விசித்திரம்

  ————

  அமுதன் நவின்றது:

  நன்றி.,

 7. சில விஷயங்கள் என்னதான் ஆராய்ச்சி பண்ணினாலும் எட்டாது. அதில் இதுவும் ஒன்று. இது என் கருத்து…ஆனா நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பாகவும் இருக்கிறார்கள் வகைவகையாய்

  ————————-

  அமுதன் நவின்றது:

  எட்டாத விசயங்களை, சீ… சீ… இந்தப் பழம் புளிக்கும் என்று விட்டு விட முடியவில்லை. அதனால் தான் பதிவிட்டேன். சமுதாய விழிப்புணர்வு தேவையாக உள்ளது. நன்றி ஐயா உங்கள் கருத்திற்கு

 8. நல்ல ஆராய்ச்சி அமுதன்

  //”நல்லவனுக்கு கெட்ட மனைவியும், கெட்டவனுக்கு நல்ல மனைவியும், மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பவனுக்கு விபச்சாரியும், உத்தம பத்தினிக்கு மது, மாதுவுடன் புழங்கும் கணவனும் அமைவது ஏன்?”//

  நீண்ட காலம் வாழும் நல்ல கணவன் மனைவியரும் இருக்கத்தானே செய்கிறார்கள் அமுதன்

  ————————————

  அமுதன் நவின்றது:

  அரிதாக உள்ளார்களே என்பது தான் கவலையாக உள்ளது. நன்றி நண்பா

 9. நண்பன் அமுதனுக்கு!

  1. வாழ்க்கையில் யார் விட்டு கொடுக்கறதுன்னு தான் முதல் பிரச்சனை..(ஆணோ, பெண்ணோ உங்களில் யார் ரொம்ப புத்திசாலியோ.. அவங்க முதலா விட்டு கொடுங்க)

  2. திருமணத்துக்கு முன்னே ரொம்ப கற்பனை பண்ணாதிங்க!
  ஏன்னா சில சமயம் ஏமாற்றமே கோவமா மாறும்!

  3. மனசுதாங்க அழகு….உடையோ..பணமோ இல்லைங்க!

  4.உங்க வீட்டு மனிதர்களை அவர்/அவள் மதிக்கனுமுன்னா
  முதல்ல அவங்க வீட்டு மனிதர்களை நீங்க மதிங்க

  (எனக்கும் இன்னும் திருமணம் ஆகலிங்க ஏதோ எனக்கு
  சொன்னதை நான் எழுதினேன்)

  ****************************

  அமுதன் நவின்றது:

  மிகவும் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றிகள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: