மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்3, 2009

கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் 10வது முழுமதி தின இலக்கியக் கலந்துரையாடல்


கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் 10வது முழுமதி தின இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (02-11-2009) புதுச்செட்டித்தெரு கவின் கலாசுரபி மண்டபத்தில் திரு. லோசன் தலைமையில் நடைபெற்றது.

10மணிக்கு ஆரம்பமாக இருந்த நிகழ்வு இம்முறை 10.10 கு தோழன் வின்சல்லோ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஆரம்பமானது. கொழும்பு மாவட்டத்தின் திருமறைக் கலாமன்ற இணைப்பாளார் திரு.அம்புறோஸ் பீட்டரினால் ஒவ்வொரு முழுமதி தினத்திலும் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வு குறித்த நேரத்திலே ஆரம்பிக்கப்டுவது இதன் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.

திரு. லோசன் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து, இணைப்பாளர் அம்புறோஸ் பீட்டர், தனது உரையில், தணிநாயகம் அடிகளாரால் ”தமிழறிஞர்” மாநாடாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று தமிழகத்தின் முதல்வரால் செம்மொழி மாநாட மாற்றப்பட்டுள்ள, அரசியல் மாநாட்டைப் பற்றிய பல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நம் நாட்டின் முக்கியமான பல கவிஞ்ர்களும், எழுத்தாளர்களும் பங்கு பற்றி தங்கள் கருத்துக்களை இலக்கிய அம்சத்தோடு இணைத்துத் பார்வையாளர்களின் எண்ணங்களைக் கவர்வது இவ்விலக்கிய ஒன்று கூடலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

அந்த வகையில் இந்நிகழ்வில், திரைவிமர்சகரும், ஊடகவியலாளரும், வலைப்பதிவருமான புருசோத்மன் தங்கமயில் இம்முறை கலந்து கொண்டு “ இலங்கை ஊடகங்களும்- இலக்கியமும்”- ஒரு சாமான்யனியின் பார்வையில் எனும் தலைப்பில் தனது உரையை ஆற்றினார்.

இவர் வழங்கிய பல தகவல்கள் கேட்போரைக் கவர்ந்தன. மேலும் வேறூண்றி நிற்கும் பல இலக்கிய மாசிகைகள் கூட இன்று வரை பல மக்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் அறிமுகமாகாத நிலையில் இருப்பதை எண்ணி தன் வருத்தங்களையும் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து மீன்பாடும் தேன் நாட்டின் இளைய கவி. விஜயரூபன் ”மனிதத்தைத் தேடி” எனும் தலைப்பில் சிறப்புக் கவிதையொன்றை வாசித்து பலரின் கரகோசத்தை வெகுமானமாக பெற்றுக்கொண்ண்டார்.

கவிதை வரிகள் இதோ:

அகதிமுகாம் சென்றேன்
அல்லலுறும் என் உடன்பிறப்புக்களை
அரவணைக்கலாம் என்று

தயங்கி நிற்கின்றேன் இன்று
தடுப்புக்களை தாண்ட முடியாமல்
தவிக்கிறது என் நெஞ்சம்

நெஞ்சில் ஏறி விளையாட வேண்டிய
பிஞ்சு உள்ளங்கள் கூட இங்கு
அஞ்சி நிற்கின்றன அறியாத வயதிலே

மஞ்சத்தில் மகிழ்ந்திருக்க வேண்டிய
மாந்தர்கள் மரத்துப்போன மனதுடன்
மறியல் போன்ற இம்முகாமில்

பஞ்சு மெத்தையில் படுத்துறங்க வேண்டிய
பாட்டி, பாட்டன் கூட
பனித்தரையில் படுத்துறங்கக் கண்டேன்

மனிதத்தைத் தேடுகின்றேன் இங்கு
மரணித்துவிட்டதோ என்று
மதிகலங்குகின்றது

பொங்கியெழ நினைக்கின்றேன் புயலாக
புதைத்துவிடக் கூடுமோ
புலியென்று எனையும்

வஞ்சகர் செய்யும் வதைகளால்
வாடி வதங்குகின்றனர் வன்னி மக்கள்
வாழ்வா சாவா என்பதறியாமல்………. இவரின் தளத்திற்கான சுட்டி: பாடும் மீன் விஜய்

அடுத்த நிகழ்வான கருத்தாடலில் “மெல்லத் தமிழினி சாகும்” என்று பாரதியார் கூறினாரா? எனும் தலைப்பில் மன்னார் அமுதன் கருத்துரைத்தார். “மெல்லத் தமிழினி சாகும்” என்பதை மறுத்துரைத்தார்.

அதன் பின்பு மூத்த எழுத்தாளரும், தவறாது இலக்கிய ஒன்று கூடலுக்கு வருகை தருபவருமான பாலசிங்கம் ஐயாவும் மற்றும் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இறுதியாக இளங்கலைஞர் சதீஸின் நன்றியுரையுடன் பெருவாரியான இளைஞர்கள் கலந்துகொண்ட இலக்கிய கலந்துரையாடல், இனிமையான கலந்துறவாடலாகி 12.00 மணிக்கு நிறைவுற்றது.

நீங்களும் பங்கு பற்ற விரும்புகிறீர்களா:

என்று: ஒவ்வொரு முழுமதி தினங்களிலும்

எப்பொழுது: 10மணிக்கு

எங்கு: கலாசுரபி மண்டபம், புதுச்செட்டித்தெரு, கொழும்பு – 13 (வியாகுல மாதா ஆலயத்தின் எதிரில்)

கவிதை, கட்டுரை வாசிக்கலாம், இலக்கியத் தலைப்பில் உரையாற்றலாம், நடனம், நாடகம்… எதுவென்றாலும் சரி தான்..உங்களுக்கு களம் அமைக்க காத்திருக்கிறது ., கொழும்பு திருமறைக் கலாமன்றம், அணிதிரண்டு வாருங்கள், நாளைய சமுதாயம் இளைஞர்களுடையதே…

இது தொடர்பான மேலதிக படங்களுக்கான சுட்டி: http://picasaweb.google.com/amujo1984/02112009#


Responses

 1. உண்மையில் நடந்து முடிந்து கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் 10வது முழுமதி தின இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வு மிகவும் பயனுள்ளாதாக அமைந்தது மிகவும் மகிழ்வைத்தருகின்றது… இது போன்ற பயனுள்ள நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது அவா…

  நன்றி அமுதன்

  ——————————————–

  அமுதன் நவின்றது:

  நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் விஜய். நீங்களும் உங்கள் நண்பர்களும் தொடர்ந்து இந்த இலக்கியக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. நிராசை ஆகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

 2. உங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்.

  ************************

  அமுதன் நவின்றது:

  நீங்களும் கலந்து கொள்ளலாம் யோகா. உங்களைச் சந்தித்ததில், உரையாடியதில் மகிழ்ச்சி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: