மன்னார் அமுதன் எழுதியவை | ஒக்ரோபர்29, 2009

உன்னால் உணர்ந்தவை…


துக்கத்தை
உணர்ந்திருக்கிறாயா?
கறுப்பா ? சிவப்பா ?
என்கிறாய்

முதன் முதலாய்
வெற்றிலையிடுகையில்
கொட்டைப்பாக்கின் துவர்ப்பு
தொண்டைக்குள் அடைக்குமே
சுவைத்திருக்கிறாயா..?

மேல் நெஞ்சிலோர்
முழுமீன் ஓடி
சதைகள் செரித்து விட
நடுமுள் மூச்சடைப்பதாய்
உணர்ந்திருக்கிறாயா..?

முட்டிக் கால்கள்
மூர்ச்சையாகி
உடல் வலு தாங்காமல்
சாய்வதற்கு சுவர் தேடுமே
சாய்ந்துள்ளாயா..?

மேலும் கீழும்
இரத்தம் ஓடினாலும்
கைகள் மட்டும்
காற்றுப் போன பலூனாய்
தொய்ந்து போகுமே
அதுதான் துக்கம்

அதைத் தராமல்
நீ கொண்டதில்லை தூக்கம்

உனக்கான காத்திருப்பில்
மனம் லயித்தே
காலம் கழிக்கிறேன்

தாமதித்தே வருவாயென
தெரிந்திருந்தும்
ஒவ்வொரு சந்திப்பிலும்
நேரத்திற்கே பிரசன்னமாகிறேன்

உன் வருகை
பிழைக்கையில் தான்
ஏதோ பிசைகிறது

அதைத்தான் துக்கமென்கிறேன்..
நீயோ
கறுப்பா ? சிவப்பா ?
என்கிறாய்


Responses

 1. கவிதை நன்றாகவுள்ளது நண்பரே……

  ——————-

  அமுதன் நவின்றது:

  நன்றி ஐயா

 2. //தாமதித்தே வருவாயென
  தெரிந்திருந்தும்
  ஒவ்வொரு சந்திப்பிலும்
  நேரத்திற்கே பிரசன்னமாகிறேன்//

  அழகான கவிதை, வாழ்த்துக்கள்

  ——————————-

  அமுதன் நவின்றது:

  நமக்காக ஒருவரைக் காக்க வைப்பதே மிக தரமற்ற செயலாக நினைக்கிறேன்.

  ஆனால் இது விட்டுக் கொடுப்பு. இதெல்லாம் இதுல சகஜம் தானே விஜய். நன்றி

 3. no pain.no gain.

  in love you have to bear more pain..isnt?

  ——————————–

  அமுதன் நவின்றது:

  வலியோ சுகமோ எல்லாத்தையும் ரசிப்பதே வாழ்க்கையாகிவிட்டது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

 4. துக்கம் நிறமற்றது, மனம் சார்ந்தது அருமை தோழரே.

  ————

  அமுதன் நவின்றது.

  உண்மை தோழா. நன்றிகள்

 5. இத்தனை அனுபவங்களை உணரவைத்ததா???அருமை நண்பரே….

  ————–

  அமுதன் நவின்றது:

  சொல்லியவை பாதி; சொல்லாதவையோ கோடி… நன்றி நண்பா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: