மன்னார் அமுதன் எழுதியவை | ஒக்ரோபர்15, 2009

யார் முதலில் அழைப்பது? – தாழ்வுச்சிக்கல்


நாம்
ஒருவர் ஒருவருக்காய்
திரும்பிய பக்கமெல்லாம்
மலர்ந்தோம் முழுநிலவாய்
அந்நாட்களில்

செல்லுமிடமெங்கும்
பின் தொடர்ந்தோம்

*
தயிர்ச் சோறுண்கையில்
பருக்கைகள் எல்லாம்
பற்களாய்ச் சிரித்தன

*
உதடுகள் என்றெண்ணியே
ஊறுகாயை உண்ணாமல் விட்டோம்

*
இன்றோ
பழகிய பால் புளிப்பதாய்
முகம் சுழிக்கிறோம்

*
உரிமைகள்
அத்துமீறல்களாய்த் தலைகாட்டுகிறது

*
தொடுகைகள் அனல்களாகworry1
நலம் விசாரிப்புகள் கூட
துக்கத்தோடே துவங்குகிறது

*
நமக்கான
கட்டிலும்
தலையணையும் ஒன்றான
காலம் வியர்த்து

உறவுகளுக்காகப் பிரிக்கப்படாத
தொட்டில் மட்டுமே
நம்மை நியாயப்படுத்துகிறது

*
ஒவ்வொரு விடியலிலும்
முகம் புதைத்தழும்
ஈரமான தலையணைகள்
பகலிலும்
தனித் தனியாய்க் காய்கிறது

*
பொத்தியழ போர்வைகள்
போதுமானதாக இல்லை

*
நீ சொல்லும் “ம்”மெனும்worries-a
ஒற்றைவார்த்தைக்கும்
இமையொடுக்கிக் கேட்கும்
கேள்விக் குறிகளுக்கும் தானே

மனதின்
கூறமுடியா ஆழத்திலிருந்து
மணிக்கணக்கில் பேசுகிறேன்
விறைப்பாக

*
கேட்க வேண்டுமென்பதற்காக நீயும்
பதில் சொல்ல வேண்டிய
கட்டாயத்தில் நானும்
பேசிக்கொள்கிறோம்

*
உமியையும், அவலையும்
ஊதித் தின்பதில்
உண்டான போராட்டத்தில்

நாளோடும் பொழுதோடும்
நம்முறவும் கரைகிறது
தூரத்துப் புள்ளியாய்

*
உனக்கும், எனக்குமான
இடைவெளியை
சிலந்தி வலைகள்
நிரப்புகின்றன

*
இவையேதுமறியாமல்
வழமை போல் இன்றும்
சிரிக்கிறது காலம்

*
கன்றிய கன்னமும்worry baby
வற்றிய கண்களும்
நம்மிதயமும் பாறையென்பதை
குழந்தைக்கும் பறைசாற்றுகிறது

*
சந்தேக வினாக்களுக்கு
விடை தேடித் தேடியே

வாழ்க்கையேட்டின்
பல பக்கங்களில்
மாறி மாறி
சிவப்புமையினால்
அடிக்கோடிட்டுள்ளோம்

*
வெளியிலிருந்து பார்ப்பவனுக்கு
வெற்றிலைக் கறையாகவே
அது காட்சிப்படும்

*
நாமானபோது
திகட்டாத வார்த்தைகள்
நீயும் நானுமான பின்
திகட்டுகிறது

*
ஆயிரம் நடந்தபின்னும்111
ஒற்றை வார்த்தைக்காகவே
காத்திருக்கிறோம்

யார் முதலில் அழைப்பது?


Responses

 1. அருமையான கவிதை

  //ஆயிரம் நடந்தபின்னும்
  ஒற்றை வார்த்தைக்காகவே
  காத்திருக்கிறோம்
  யார் முதலில் அழைப்பது?//

  விட்டுக்கொடுப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி உண்டு
  நீங்கள் முதலில் அழையுங்கள்…………

  ——————————

  அமுதன் நவின்றது:

  நன்றி விஜய்… வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்

 2. அமுதன்,
  பலமுறை ரசித்து வாசித்தேன். சில வரிகள் என்னை அப்படியே அடக்கிப்போட்டுவிட்டன. யதார்த்தங்கள் பலவற்றை சுமந்துள்ளது உங்கள் கவிதை.

  படைப்புகள் தொடரட்டும்.
  வாழ்த்துக்கள்

  ***************

  அமுதன் நவின்றது:

  நன்றி நிர்ஷன். உங்கள் பின்னூட்டங்கள் என்னை மேலும் சிறப்பாக எழுதத் தூண்டுகிறது. நன்றி

 3. அருமையான வார்த்தை கோர்வைகள்!
  பிரிவின் வலியை வேறெப்படி சொல்ல?

  மேலும் எழுத வாழ்த்துக்கள்!

  —————————

  அமுதன் நவின்றது:

  நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்

 4. மிகவும் அருமை, தாழ்வுச்சிக்கல் பலமுறை வரும் இருந்தாலும் முதலில் அழைப்பது என் வழக்கம்.

  ———————————

  அமுதன் நவின்றது:

  நன்றி செல்வேந்திரன். நீங்கள் தொடர்ந்து கருத்துக் கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது

 5. Romba beautifulla erukkudu. ungada books wanga nan try panninen. but angada placekku ennum warala. ungada areavil mattuma vitpanai agudu? ungada kavithai anakku romba pidikkum. ennum niraya kavithaigal aluda annudaya manamarnda valththukkal.

  —————————

  அமுதன் நவின்றது:

  நன்றி சுகன்யா. புத்தகம் “கொழும்பில் பூபாலசிங்கம், பிட்ரபேன், மற்றும் ஜெயா புத்தகசாலை ( Peoples Park) ஆகிய புத்தகசாலைகளில் கிடைக்கிறது. நன்றி

 6. Supernka unka kavitai
  super
  super
  very nice
  Valthukkal.

  =================
  அமுதன் நவின்றது:

  நன்றிங்க… நன்றிங்க … நன்றிங்க

 7. Unkalukku periya life erukkuthu
  very very supera erukkuthu ovvoru variyum

  =================================
  அமுதன் நவின்றது:

  மனம் திறந்த கருத்திற்கு நன்றி உஷா.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: