மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்23, 2009

கொஞ்சம் கூதலும்…. நிறைய காதலும்


கூதல் என்னைக்
கொல்கையில்

உன் நினைவுகள்உன் நினைவு
கொளுத்திக்
குளிர் காய்கிறேன்

தலையணை அணைத்து
மெத்தையைக் கிழித்து
உன்பெயர் புலம்பையில் -எனைப்
பரிதாபமாய்ப் பார்க்கின்றன
பஞ்சுகள்

அலைபேசியில் உளறிக்கொண்டே
நான் வரைந்த உன் பெயர்
வெள்ளைப் படுக்கையுறையெங்கும்
ஓவியமாய்ச் சிரிக்கிறது

நீ விட்டுச் சென்ற
ஒற்றைத் தலைமுடி..lovers
இரட்டைக் காதணி..
கண்ணாடிப் பொட்டு..
உடைந்த வளையல்..
கொலுசுச் சத்தம்…
ஈர முத்தம்..

என எல்லாவற்றையும்
சொல்லிவிடவா…?

பூக்கிறாய்,
வேண்டாமென வேர்க்கிறாய்
விட்டு விடுவென வெட்கப்படுகிறாய்…

இத்தனைக்கும் காரணம்தம்பதி
இந்த வெட்கம் தானே

ஒவ்வொருமுறை தவம்
கலைந் தெழுகையிலும்
நான் வியர்த்துவடிவேன்
நீ வெட்கப்படுவாய்

பிறகென்ன
மீண்டுமொரு தவம்…

கட்டியணைக்கையில்
வெட்டிச் சுழிப்பாய்…
விடிந்து பார்க்கையில் (என்மேல்)கண்ணயரு
மடிந்து கிடப்பாய்

ஓட்டைச் சிரட்டையில்
ஊற்றிய தண்ணீராய்…
உனைநோக்கி ஒழுகி
உருகி ஓடுகிறது மனம்

இன்றோடு ஒன்பதுமாதம்தாயானாய்
கழியுமொரு யுகமாய்
இன்னும் பத்து நாட்கள்

தலைச்சனைப் பெற்றெடுக்க
தாய்வீடு சென்ற நீ
சேயோடு வருவாய்

மார்பு அவனுக்கு
மடி உனக்கு

மீண்டும் கூதலில்
பஞ்சணைகள் பத்திக்கொள்ளும்pregnant-woman-with-son

தங்கச்சி வேண்டாமா
தலைச்சன் விளையாட…

Advertisements

Responses

 1. மனைவிமேல் உள்ள காதலை நாயகன் வெளிப்படுத்தும் விதம் அழகாக இருக்கிறது.

  வாழ்த்துக்கள் அமுதன்

  ———————————————–

  அமுதன் நவின்றது:

  நன்றி யோகா. பின்னூட்டமிடுவதில் வல்லவராக இருக்கிறீர்கள். நீங்கள் பின்னூட்டமிடும் வேகம் வியக்க வைக்கிறது. பின்னூட்டத்திற்கு நன்றி

 2. அலைபேசியில் உளறிக்கொண்டே
  நான் வரைந்த உன் பெயர்
  வெள்ளைப் படுக்கையுறையெங்கும்
  ஓவியமாய்ச் சிரிக்கிறது

  ..Liked it very much 🙂

  ——————————–

  அமுதன் நவின்றது:

  நன்றி சேரன்.. வருகைக்கும் பகிர்விற்கும்… இது மாதிரி நீங்களும் பண்ணி இருக்கீங்க போல … 🙂

 3. நன்றாக வடித்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..

  *******************************
  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி சுபானு.,

  //நன்றாக வடித்துள்ளீர்கள்.. //

  இது எதோ வஞ்சப்புகழ்ச்சி அணியில் போற்றுவது போலவே தோணுது. அப்டியா…

  நன்றாக ஜொள்ளு வடித்துள்ளீர்கள்.. அப்டியா சொல்ல வர்றீங்க… இல்லத் தானே

 4. அழகான நகர்வில்
  அருமையான கற்பனையில்
  ஆழமான உணர்வில் செதுக்கப்பட்ட
  அரிதான சிற்பம்..

  வாழ்த்துக்கள் தோழா…

  ******************************

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி சிவா

 5. உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டிவிட்டுள்ளேன், பிடித்ததை எழுதுங்கள்

  பிடிக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்கும்
  http://yovoice.blogspot.com/2009/09/blog-post_6510.html

  ————————————-

  அமுதன் நவின்றது:

  திரும்பவுமா….. உங்கட அன்புக்கு அளவே இல்லையா யோ… இப்பவே கண்ணக் கட்டுதே

 6. அருமையான கவிதை

  வாழ்த்துக்கள் தோழா…

  *****************************

  நன்றி வீரன். தொடர்ந்து வாருங்கள்… தொடர்ந்து படியுங்கள்…உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்

  அன்புடன்
  அமுதன்

 7. கவிதை அருமை

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

  ********************
  அமுதன் நவின்றது:

  நன்றி

 8. வாழ்த்துக்கள் தோழா…

  ************************

  அமுதன் நவின்றது:

  நன்றி நண்பா

 9. //அலைபேசியில் உளறிக்கொண்டே
  நான் வரைந்த உன் பெயர்
  வெள்ளைப் படுக்கையுறையெங்கும்
  ஓவியமாய்ச் சிரிக்கிறது//

  நல்லாயிருக்கு அமுதன்.
  எழுத்து தொடரட்டும்

  ——————————–

  அமுதன் நவின்றது:

  நன்றி நிர்சன்

 10. என் திருமணத்திற்கு பின் இப்படித் தான் வாழப்போகிறேன்..மிகவும் அருமை

  ***************************

  அமுதன் நவின்றது:

  அப்படியா மகிழ்ச்சி., எனக்கும் அப்படிதான் ஆசை… ஆனா முடியலயே…. இப்பவே கண்ணக்கட்டுதே


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: