மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்18, 2009

வாழ்க்கை = “காதல்+அழகு+கடவுள்+பணம்”


எங்கோ இழுக்கத் தொடங்கிய தேர், எல்லா இடமும் ஓடி, இன்று என் வீட்டு முற்றத்தில் நிற்கிறது. வடம் பிடிக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம்.

காதல் – அழகு – கடவுள் – பணம் பற்றிப் பதிவிட எனையழைத்த சந்ருக்கு நன்றிகள்.

இதை “கடவுள்-அழகு-காதல்-பணம்” என்று வரிசைப்படுத்திக் கொள்கிறேன். எனெனில் இந்த வரிசையில் தான் எனக்கு இச்சொற்கள் அறிமுகமாயின. (இவையனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே.)

கடவுள்:

உன்னை நோக்கும் கடவுளின் கண்ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் உள்ளதாம். அது தான் அறியாமை. என் தலையில் இருந்து ஒரு முடி உதிர்வதற்கும் கடவுளின் விருப்பம் வேண்டும் என்பதில் உறுதியான எண்ணமுடையவன் நான். (ஒருகட்டத்தில் இதை நம்பவும் செய்தேன். ஏனென்றால் 5ஆம் வகுப்பை முடிக்கும் வரை அம்மா தான் எனக்கு முடி வெட்டி விட்டார். (எலிப்பொந்துக்கு பக்கத்துல தூங்கக்கூடாது என்று நண்பர்கள் நக்கலடித்ததை இன்னொரு பதிவில் விரிவாகக் கிறுக்குகிறேன்.) அதனால அந்தக் கருத்து உண்மையும் ஆயிடுச்சு. ) உன்னைப் போல் சக மனிதனையும் நேசித்தால் நீ தான் கடவுள். கோவிலை விட்டு வெளியே வரும்போது அங்கு நிற்கும் பிச்சைக்காரனின் கண்களின் வழியே கடவுள் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“சித்தனுக்கும், பித்தனுக்கும்
கருப்புச்சட்டை காரனுக்கும்
காலத்தை அளப்பவன்டா- கடவுள்
காலனைத் தின்றவன்டா”
–அமுதச்சித்தன்

அழகு:

கழுதையும் அழகு தான்குட்டில கழுதையும் அழகும்பாங்களே, அது என்னைய பொறுத்தவரை சரி. நான் சின்னன்லயே ரொம்ப அழகுன்னு (முறைக்காதீங்க… சத்தியமா என்னைய சொல்லல)

உணர்ந்து ரசிச்சது கழுதைக் குட்டியைத் தான் (எவ்ளோ மட்டமான இரசனை பாருங்க). அழகு பொருள்ளயோ, உயிர்லயோ இல்ல, பாக்குறவங்க கண்ணுல தான்

இருக்குங்குறத நம்புறவன். ஒரு டொக்டரோட கதைச்சிட்டு இருக்கிறப்போ இப்டித் தான் சொன்னேன். அவர் சொன்னேர் “இதாண்டாப்பா, நான் அண்டக்கே சொன்னேன். ஒரே

கொம்பியூட்டர்ல இருக்காதன்டு, இப்ப பாரு சின்ன வயசுலேயே கண்ணுல நோய் வந்துட்டு, இனி ஒப்பிரேசன் தான் செய்யனும்”. அன்றிலிருந்து அவர் இருக்கிற பக்கமே போறதில்ல.

“அகத்தினில் விளையா அன்பை
முகத்தினில் காட்டிச் சிரிப்போர்
நகத்தினை ஒப்பர் – மாக்களை
முதலிலே வெட்டியெறி”
–அமுதச்சித்தன்

காதல்:

காதல் நோய்சம்சாரத்தோடு சமர் தொடுக்கும் அழகான சமாச்சாரம் “காதல்”. “காதல் உள்ளங்கைக்குள்ள பொத்தி வச்சிருக்கிற ஒரு அழகான பட்டாம் பூச்சி போல, அழுத்தி புடிச்சா செத்துரும். கொஞ்சம் கவனக்குறைவா இருந்தா பறந்துரும்” அப்டிம்பாங்க. காதல் இரண்டு பேரோட உணர்வு. ஒருவருக்காய் ஒருவர் எனும் காதல் ஒரு உண்மையான உறவு. கழுதைக்குட்டி மாதிரி காதலும் அழகானது தான். தப்பு பண்ணா உதைக்கும். ஒழுங்கா இருந்தா நம்மையும் காதல் காதலிக்கும்.

“காதலை ஒப்பக்
காக்கை எச்ச – மனிதத்
தலை வீழ்ந்த விதைபோல் ஆகுமாம்
தடம்மாறி முளைத்த காதல்”
— அமுதச்சித்தன்

பணம்:

பணம்வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது பணம் என்கிறத உணர்றப்போ முதல் காதல் கையை விட்டு போயிடும். அதுவே கடைசிக் காதலாயும் ஆயிடும்.பொருளாதார நெருக்கடியில சொந்தங்களும் தொலைஞ்சுரும். இந்தப் பணத்தைத் தேடி சேர்த்த பிறகு சுத்தும் முத்தும் பாத்தா கண்ணக்கட்டி தனிக்காட்டுல விட்ட மாதிரி இருக்கும்.ஏன்னா பணம் வந்தப்புறம் நாம தொலைஞ்சிடுறோம். பணத்தைத் தேடுறப்போ ஏற்படுற தேய்மானத்துல நம்மட நல்ல குணங்களும் தேஞ்சிடுது.

பணங்காசு சேரையிலே…
பந்தபாசம் அறுந்துபோகும்…
பாவ ஜென்மமடி – பிறப்பு…
தீராப் பாவமடி”
— அமுதச்சித்தன்

“காய்த்திருக்கும் தருவை
கானகத்துப் புல்கள்
கூடித் தின்னுமடி -வறட்சியில்
வேறிடம் தாவுமடி”
– அமுதச்சித்தன்

“கடவுள்-அழகு-காதல்-பணம்” இவங்க நாலு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா, மனிதனின் வாழ்க்கைச் சக்கரம் இந்த நான்கையும் நோக்கியே சுழல்கின்றது. கடவுள் அழகான மனிதனையும், காதலையும் படைத்தான். மனிதன் பணத்தைப் படைத்தான். இன்று பணம் இருந்தால் காதல்-அழகு-கடவுள் என்று எல்லாத்தையும் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் இளமை தேய உழைக்கிறான் மனிதன். காதலுள்ள மனைவி கடவுளுக்கு ஒப்பானவள். அவள் கிடைத்தால் மீதியனைத்தையும் நாம் தேடி விடலாம். வாழ்க்கை எனும் பதார்த்தம் இனிக்க கடவுள்-அழகு-காதல்-பணம் எனுநான்குமே இன்றியமையாததாகிறது.

நன்றி

தேரின் வடம் பிடிக்க, இத்தொடர் விளையாட்டைத் தொடர, “காதல்+அழகு+கடவுள்+பணம்” பற்றிப் பதிவிட நான் அழைப்பது


1.சிந்தனைச் சிறகினிலே

2.சற்குணா

3.சேரன்

வாங்க, எழுதுங்க, நாங்க வாசிக்க ஆவலா இருக்கோம்……


Responses

 1. வாழ்க்கை = “காதல்+அழகு+கடவுள்+பணம்”

  வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட இந்நான்கு விடயங்களையும் மிக அழகாக குறிப்பிட்டிருக்கின்றீர் என்பது பாராட்டத்தக்க விடயமே என்ற போதும் என்னையும் நன்றாக மாட்டிவிட்டுள்ளீரே……?????

  ம்ம்………. வெகு சீக்கிரமாக உங்கள் அளவிற்கில்லையாயினும் என் அறிவுக்கு எட்டிய விதத்தில் பதிவிடுகின்றேன்.

  அருமையான கட்டுரை அமுதன் வாழ்த்துக்கள்

  —————————

  அமுதன் நவின்றது:

  நன்றி சிந்தனா. நீங்கள் கட்டுரை வரைவதில் சிறப்புத் தேர்ச்சி பெர்றவர் என்பது பதிவர்களுக்குத் தெரியும். எனக்கும் தெரியும். அதான் உங்களையும் அழைத்தேன்.. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

 2. நான் வடம் பிடித்த தேர் இன்று உங்களருகிலும் வந்து விட்டது. அழகாக உங்கள் கருத்துகளை கூறியிருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்..

  —————————————–

  சந்ரு தான் இங்கு தள்ளிக் கொண்டு வந்தார். எனக்கும் சாமி தரிசனம் கிடைச்சதில் மகிழ்ச்சி.

 3. காதல் .அழகு இரு விடயத்திலும் உங்கள் கருத்து தான் எனதும்.

  நன்றி

  —————————

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், வெளிப்படையான கருத்திற்கும் நன்றி ஜெனி. மாற்றுக்கருத்தையும் கூறினால் நன்றாக இருக்குமே..

 4. விளக்கங்கள் அருமை

  ———————-

  அமுதன் நவின்றது:

  நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு தானே… நன்றி

 5. கடவுள் ,பணம் ஆகியவை பற்றி குறிப்பிடாததால் மாற்றுக்கருத்து இருக்கும் போல என்று கருதிவிட்டீர்கள் என நினைக்கிறேன் .
  அப்படியல்ல ! எனினும் முழுவதாக ஏற்றுக்கொண்டதும் ஆகாது .

  ‘நான் வெளிப்படையாக இருப்பேன் ,என்னிடம் பழகுபவர்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பேன்’
  நன்றி .

  ——————–

  அமுதன் நவின்றது:

  நானும் வெளிப்படையானவன் தான். தங்கள் கருத்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

 6. //எங்கோ இழுக்கத் தொடங்கிய தேர், எல்லா இடமும் ஓடி, இன்று என் வீட்டு முற்றத்தில் நிற்கிறது. வடம் பிடிக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம்.//

  நீங்கள் கவிஞர் என நிரூபிக்கும் வரிகள்.

  ஒவ்வொரு விடயத்தையும் கவிதைகளினூடும் விளக்கியிருக்கின்றீர்கள். நன்றாக இருக்கின்றது.

  ———————-

  அமுதன் நவின்றது:

  நீங்கள் வந்து சென்றமைக்கான தடத்தைப் பதித்தமைக்கு நன்றிகள்…. கட்டுரையில் கவிவரியைக் கண்டறிந்து என்னைக் கவிஞன் என்றமைக்கு நன்றிகள். நான் கவிஞனா என்பதைக் காலமே முடிவு செய்யும்… என்பதே என் பணிவான கருத்து…

 7. //நான் கவிஞனா என்பதைக் காலமே முடிவு செய்யும்… //

  என்னுடைய தாத்தா அடிக்கடி ஒரு விடயம் சொல்கின்றவர். ஒருவன் மனிதன் தன் பெயரை நிலைநாட்டச் செய்யவேண்டியவை.

  1. ஒரு வீடுகட்டவேண்டும்.
  2. அவருக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் (காரணம் அவரது பெயர் அப்போதான் நிலைக்கும்)
  3. ஒரு புத்தகம் வெளியிடவேண்டும்.

  நீங்கள் 3வது விடயத்தைச் சின்னவயதில் செய்துவிட்டீர்கள். ஆகவே உங்கள் பெயர் என்றைக்கும் நிலைத்து நிற்க்கும். உங்கள் கவிதைகள் வாசித்தேன் நன்றாகவே இருக்கிறது. சில மனதை நொருக்குகின்றது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

  ———————————————-
  அமுதன் நவின்றது:

  நன்றிகள். மற்ற இரண்டு விடயங்களையும் செய்யத்தான் முயற்சிக்கிறேன். (நினைச்சாலே கண்ணக் கட்டுதே)

  என்னுடைய புத்தகத்தைப் படித்தமைக்கும், கருத்தை வெளிப்படையாக கூறியமைக்கும் நன்றி அண்ணா.

  உண்மையைச் சொன்னால், காலத்தின் மணற்பரப்பில் என் சிறுகாலடித்தடத்தையும் பதித்து வைப்பதற்கான முயற்சிகளே என் படைப்புகள். மீண்டும் நன்றிகள்

 8. கடவுள் அழகு காதல் பணம் எல்லாமே உங்கள் பார்வையில் ஒருவித்தியாசமான பார்வை
  நன்று

  இங்கு குணத்தையும் அலசியிருக்கலாமே
  பதிவு பகிர்வு சிறப்பு

  ————————-

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. அந்தத் தொடர் கடவுள்,அழகு, காதல், பணம் பற்றியதாக அமைந்திருந்தது. அதில் குணத்தைச் சேர்த்து தொடர்வைத் துண்டிக்கக் கூடாதல்லவா, அதான். குணம் பற்றி வேறொரு பதிவை இடுகிறேன். நன்றிகள்

 9. உங்கள் அழகான கண்ணோட்டம் மிகவும் கவர்ந்தது . வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நட்புடன் நிலாமதி

  ****************

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள்

 10. //தப்பு பண்ணா உதைக்கும். ஒழுங்கா இருந்தா நம்மையும் காதல் காதலிக்கும்.//

  அருமை…. நல்ல வார்த்தைகள்.

  ******************************

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள்

 11. அருமை தோழரே

  you too visit my blog
  http:://kavithaikaalam.wordpress.com

  உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

  ******************************
  அமுதன் நவின்றது:

  கட்டாயம் உங்கள் தளத்தைப் பார்வையிடுகிறேன். கருத்தையும் பதிவேன். நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: