மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்17, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதனின் மறைவையொட்டி – நானும் கதையும்


புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் நேற்று (16.09.2009) மாரடைப்பால் காலமானார்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்இவர் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சியை 15 ஆண்டுகளாக நாள்தோறும் படைத்தளித்து வந்தவர் என்பதே இவரின் சிறப்பாகும்

கதை சொல்லும் கலை அரிதாகி வரும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இருந்தாலும் நான் கதை கேட்காமல் உறங்கிய நாட்கள் குறைவு. இன்றும் சில விடுமுறை நாட்களின் பின்மாலைப் பொழுதுகளில் அம்மாவின் மடியில் தலைவைத்துக் கதை கேட்பது மாற்ற முடியாத பழக்கங்களில் ஒன்றாகி விட்டது.

இந்தக் கதை கேட்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் தான் தென்கச்சி கோ.சுவாமிநாதன் ஐயா அவர்களின் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சிக்கும் நான் அடிமையாகியிருந்தேன். தமிழகத்தில் நான் இருந்த காலத்தில் வானொலியில் காலை 7.15 அல்லது 7.25 மணிக்கிடையில் தென்கச்சியின் குரலை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் நானும் ஒருவன்.

“ஆளுமை என்பது வெளிப்புற அழகில் இல்லை” என்பதை எனக்கு கதைகளின் மூலம் உணர்த்தியவர். அன்னாரின் அனைத்துக் கதைகளும் கருத்துக்களும் எனக்குப் பிடித்திருந்தாலும், இன்றும் என்னால் மறக்கமுடியாமல் நெஞ்சில் பசுமையாக பதிந்த ஒரு கதையை இன்றைய நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது உசிதமாகும்.

அது ஒரு மிருகங்கள் மற்றும் பறவைகளை விற்பனை செய்யுமிடம்( petshop). அந்தக் கடைக்கு விதம் விதமான வண்ண வண்ண ஆடம்பரக் கார்களில் மக்கள் வந்து தமக்குப் பிடித்த பிராணிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அந்த கடை கண்ணாடியால் அழகு படுத்தப் பட்டிருந்ததால் பிராணிகளின் அழகும் போவோர் வருவோரைக் கவர்ந்தது. பலர் அங்கு நின்று வேடிக்கை பார்த்துச் செல்வார்கள்.

வேடிக்கை பார்ப்பவர்களோடு பத்தோடு பதினொன்றாக ஒரு ஏழைச்சிறுவனும் நின்று தினமும் வேடிக்கை பார்ப்பான். அவனுக்கும் அங்குள்ள அழகான நாய்க்குட்டிகளில் ஒன்றை வாங்கி விட வெகு நாள் ஆசை.

சிறிது சிறிதாக சேமித்து 10 ரூபாய் சேர்த்தான். பின் கடைக்குச் சென்று கடைக்காரரிடம் நாய்க்குட்டி வாங்க வேண்டுமென்றான். அவரும் நாய்க்குட்டிகளை பார்க்க அனுமதித்தார். அவன் எல்லா குட்டிகளையும் பார்த்து விட்டு ஒதுக்குப் புறமாக படுத்திருந்த அழகான கருப்பு நிற நாய்க்குட்டியொன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடைக்காரரிடம் பத்து ரூபாயைக் கொடுத்தான்.

கடைக்காரர் அவனைப் பார்த்து “ஏனடா தம்பி 10 ரூபாய்க்கு யாராவது நாய்க்குட்டி தருவாங்களா?” என்றவாறே குட்டியைப் பறித்துக் கொண்டார். பின்பு பத்து ரூபாயைச் சிறுவனை நோக்கி எறிந்து விட்டு குட்டியைக் கூண்டில் போட எடுத்துச் செல்கையில் தான் பார்க்கிறார், அந்த நாய்க்குட்டி ஒருகால் பலமின்றி மூன்று கால்களுடன் ஊனமானதாக தள்ளாடுவதை.

பின் சிறுவனிடம் வந்து சொன்னார், இந்தக் குட்டியை கொண்டு வரும் போது இதன் கால்கள் முறிந்து விட்டது. இதைக் யாரும் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.கருணைக் கொலைதான் செய்ய நினைத்தேன். நீ வேண்டுமென்றால் இலவசமாக எடுத்துச்செல் என்றார்.

நானும் நாயும், எனக்கு நீ, உனக்கு நான் சிறுவன் ஆவலோடு ஓடிச் சென்று நாய்க்குட்டியை வாங்கித் தழுவிக் கொண்டான். பின் தன் 10 ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, நாய்க் குட்டியை அணைத்து முத்தமிட்டவாறு ”உனக்கு நான் உள்ளேன் தோழா; யார் உன்னை ஊனம் என்றார்கள்” என்றவாறே விந்தி விந்தி நடந்து சென்றான்.

இன்றும் பல வானொலி, தொகா தொகுப்பாளர்கள் சொந்தத் தமிழை கொல்கிறார்கள். இவர்களுக்கிடையில் தன் வட்டார வழக்கு மொழியிலேயே கதைகளை சொல்லி உதட்டோரம் மிகச் சிறிய அளவில் புன்னகையை வெளிப்படுத்தி அருமையாகக் கதை சொல்லி பல இளைஞர்களின் உள்ளத்தில் பெரும் மாற்றத்தை விதைத்தவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

மக்கள் மனம் கவர மொழியில் மாற்றத்தைக் கொண்டு வரத் தேவையில்லை, உங்கள் அறிவை பரந்த அளவில் விருத்தி செய்தால் போதும் என்ற கருத்தை ஆழமாக என் மனதில் பத்தித்தவர்.

இன்றும் இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் பகுதியில் இவரின் கருத்துக்களும் கதைகளும் ஒளிபரப்பப்படுகிறது. இது காலை வேளையிலேயே மனதிற்குப் புத்துணர்ச்சி தருவதாக அமைகிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவருக்கும் பொதுவான வல்லமைமிக்க இறைவனைப் பிராத்திக்கிறோம்


Responses

 1. நானும் பிரார்த்திக்கிறேன்…
  அருமையான மனிதர்.
  முன்பு வானொலியில் அடிக்கடி கேட்பேன்…
  இவர் இறந்ததை உங்கள் மூலம் தான் அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.

  ***********************
  அமுதன் நவின்றது:

  நான் ஊடகங்கள் மூலம் தான் அறிந்தேன் கோபி. அவர் கதைகள் எத்தனை மனங்களைக் கவர்ந்துள்ளது. தென்கச்சி கோ.சுவாமிநாதன் இறந்தாலும் அவர் தாமாக புனைந்து கூறிய கதைகளும் கருத்துக்களும் இன்னும் பல்லாயிரத்தாண்டு காலம் வாழும். மனித மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை

 2. ஒரு காலத்தில் தென் கச்சியாரின் பேச்சை அவசர அவசரமாக கேட்டு விட்டு வேலைக்கு ஓடி போயிருக்கிறேன்.

  ——————————————
  அமுதன் நவின்றது:

  பழையதை இன்று மீட்டிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் தான் யோகா. காலையில் கல்லூரிக்கு செல்லும் போது சாப்பிட்டுக் கொண்டே இவரின் நிகழ்ச்சியைக் கேட்பேன். முதல் பேருந்து வரும் சத்தம் கேட்டு அம்மா சத்தம் போடுகையில் அரைவாசி சாப்பிட்டு முடித்திருப்பேன். சாப்பாட்டை புறக்கணித்துச் செல்லும் போது வலிக்காத மனம், இவரின் கதைகளை முழுதாகக் கேட்க முடியாமல் போன நாட்களில் வலித்திருக்கிறது.

  மீதிக் கதையை நானாக கற்பனை செய்வதும் உண்டு. இத்தனைக்கும் “இன்று ஒரு தகவல்” 10 நிமிடத்திற்கும் குறைவான காலத்தைக் கொண்ட நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

 3. எனது ஆழ்ந்த அனுதபாங்கள்

 4. அவர் மறைவு ஈடு செய்ய முடியாதது. இந்தத் தளத்தில் அவரது வாழ்க்கை வரலாறும், நேர்காணலும், சிறப்பு இன்று ஒரு தகவலும் உள்ளது.

  http://tamilonline.com/

  ——————————————-

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ரமணா. பயனுள்ள தகவல் நன்றி

 5. பதிவுக்கு நன்றி அமுதன்.தென்கச்சி அவர்களின் கதை சொல்லும் பாங்கு மிகவும் சுவாரசியமானது.அவர் சொல்லும் கதைகளைக் கேட்டு பின் பள்ளி சென்றவர்களுள் நானும் ஒருவன்.இனி வரும் காலங்களில் வானொலியில் இவரைப் போன்ற படைப்பாளிகளை காண்பது அரிதுதான்.நன்றி

  ————————

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி பத்மஹரி. இவர் போல் படைப்பாளிகளைக் காண்பது அரிது தான்

 6. let his soul rest in piece.

 7. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பேச்சாளர்..
  எவ்வித உணர்வுகளையும் தன் பேச்சில் காட்டாமல் அவர் கதை சொல்லும் முறையே ஒரு அழகு!
  அவர்தம் மறைவு வருத்தமளிப்பதாகவுள்ளது.
  தென்கச்சியார் வாழ்வு பயனுள்ள வாழ்வு!

  —————————-

  அமுதன் நவின்றது:

  சரியாகச் சொன்னீர்கள். அவர் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால் அவரது கதைகள் எம்மிடமிருந்த பல உணர்வுகளை வெளிக்கொணர்ந்துள்ளன. வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன் ஐயா.

 8. அவருக்கு எனது இரங்கலும்.

  //வானொலியில் காலை 7.15 அல்லது 7.25 மணிக்கிடையில் தென்கச்சியின் குரலை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் நானும் ஒருவன்.
  //

  இதிலிருந்து நீங்கள் கவனித்த விதம் புரிகிறது. மிக நன்று. நிகழ்ச்சி 7:25 க்கு ஆரம்பிக்கும், ஆனால் அதை முதலிலிருந்து கேட்பதற்காக 7:15 லிருந்தே காத்திருப்போம். 🙂

  ***************************

  5 வருடங்களுக்கு முன் நான் எப்படியிருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்க வைத்திருக்கிறது. அவர் கூறிய கதைகளின் தாக்கம், அதனைக் கேட்ட ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்கும்

  வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி., இன்னும் சுற்றுங்கள்,, உலகை வலம் வர முடியும்., என் வாழ்த்துக்கள்

 9. I,m one of the regular audiance of Thenkachi. In fact I have read most of his books and I used to present his books to the young school boys for their birthday. He is the one person who has changed me a lot by way of his simple stories.
  S Gopalakirshnan., Chennai

  —–
  —–

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், பகிர்விற்கும் நன்றி. புத்தகங்களை பரிசாகக் கொடுப்பது வாசிப்பை ஊக்குவிக்கும் என்பது நேரடிப் பலனாக இருந்தாலும், மறைமுகமாக இன்னும் பல நன்மைகளைக் கொடுக்கிறது. ஒரு புத்தகத்தை வாங்குவதன் மூலம் இலக்கிய வளர்ச்சியில் நாமும் மறைமுகமாம பங்கெடுக்கிறோம். நன்றி

 10. amma

 11. nala


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: