மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்15, 2009

ஊரறியும்…உறவறியும்…நீயறியாய்…பெண்மனமே…


நமக்குள்
ஒன்றுமில்லையெனவேist2_5175047-cute-kiss-on-forehead
நாம் முன்மொழிகிறோம்

வலியின்
மொழிகளையே
மனமோ வழிமொழிகிறது

என் விழிகள்
திருடுபோயின
இரவுகளுமென்னை
ஒதுக்கியே விட்டன

மெத்தை தணலாக
தூக்கமும் நானும்
தூரமாகிப் போனோம்

உண்ணா நோன்பனை
உறவாக்கிக் கொண்டது

யுக்தா!
என்னுயிர்க் காற்றேboy_kissing_girl
எங்கேயடி சென்றாய்
என்னைத் திணறவிட்டு

மூச்சுத் திணறலோடே
நகருகின்றன
நீயில்லாத நாட்கள்

கண்ணீர் குடித்து வளரும்
பொழுதுகளின் விழுதுகளில்
சிக்கிச் சிக்கியே
சிதிலமடைகிறேன்

உன் நினைவுகள்
தின்று தின்றே
நாள்தோறும் தேய்பிறையாய்
உருக்குலைகின்றன
என்னுயிரின் ஓரங்கள்

இந்த வானம் … பூமி…
அந்த மரம்…
அதன் கீற்றுகளைக்
கொஞ்சும் காற்று…

சாலை நடுவில்
ஏதோ நினைவில்
நான் மோதப் போன
முச்சக்கரச் சாரதி…

என எல்லோரும்
அறிந்திருக்கிறார்கள்
உன்னைத் தவிர

தோள்களில் நீ
சாய்ந்திருந்த பொழுதுகளைக் கேட்பாயா..img-thing
நான் வாழ்ந்த நிமிடங்களைச்
சொல்லும்

விரல்கள் இணைத்து
நடைபயின்ற வீதியைக் கேளேன்
சொல்லுமது காதலா? காமமாவென்று?

உன் கண்ணீரைத் துடைத்த
கைக்குட்டை கூட
இன்னும் ஈரமாய்
என் நினைவுகளில்

என்றோ எவனோ
அணைத்த தீயிற்காய்
நீயேன் இன்னும் எரிகிறாய்

மாமிசம் சுவைத்தும்
எலும்பைக் காக்கும் பிராணியாய்
இன்னும் ஏனடி
கசப்பைக் காவித் திரிகிறாய்

தொடுகைகள் பிழையோ?
உரைப்பாய் – உன்
தொடுகையில் பனியாய்
உறைந்தேன், பிழையோ?

உணர்வினைச் சிலுவையில்
அறைகிறாய் சரியோ?- சிலுவையைச்
சுகமாய்ச் சுமத்தலும் முறையோ?

மலரைச் சூழ்ந்து070
அதரம் கடித்தேன்
தேனைச் சுவைத்தேன்
தேடிப் புசித்தேன்

தேனை ருசிக்கவோ
பூவை அழகென்றேன்?
பூவை! நீ சொல்..

நமக்குள்
ஒன்றுமில்லையெனவே
நாம் முன்மொழிகிறோம்

வலியின்
மொழிகளையே
மனமோ வழிமொழிகிறது


Responses

 1. தேனை ருசிக்கவோ
  பூவை அழகென்றேன்?
  பூவை! நீ சொல்..
  கவிதை அருமை

  —————————————

  அமுதன் நவின்றது:

  நன்றி விஜய். உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி

 2. வலியின்
  மொழிகளையே
  மனமோ வழிமொழிகிறது….!

  வாழ்வின் தேடல்கள்…
  தேடித்தேடித்
  திருப்பித் திருப்பிப்
  பார்த்தும் திருப்பப்படாமல்
  களைத்துப் போய்
  மூடப்பட்டுவிட்ட
  வாழ்வின் பக்கங்கள்
  நாட்களின் நீட்சிகள்
  காதலின் ஆட்சிகள்
  எல்லாம் ஒன்றாய் சேர்ந்தும்
  இது தான் வாழ்க்கை என
  முற்றுப்புள்ளி வைத்தும்
  இனியோர் வாழ்வில் புயலாய்
  மாறிப் போனதால்

  வலியின்
  மொழிகளையே
  மனமோ வழிமொழிகிறது….!

  வாழ்த்துக்கள்! அருமையான வரிகள் உன் கவி வரிகள் தொடரட்டும் வலி சுமந்தல்ல பலர் வலி மறக்க ..

  எதிர்ப்பார்க்கின்றேன்

  —————————–
  அமுதன் நவின்றது:

  நன்றி உங்கள் கவிகளும் அருமை சிந்தனா

 3. அழகான கவிதை அமுதன். வாழ்த்துக்கள்

  ****************

  அமுதன் நவின்றது

  நன்றி யோகா. நீங்கள் தொடர்ந்து தளராமல் ஊக்குவிப்பது மனமகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பதிவுகளும், தொடர் பதிவுகளும் அருமை

 4. சந்ரு said…
  உங்களை “காதல்-அழகு-கடவுள்-பணம்” தொடர் பதிவிற்கு இங்கே அழைத்திருக்கின்றேன் தொடருங்கள்

  ************************

  அமுதன் நவின்றது:

  அழைத்தமைக்கு நன்றி சந்ரு. தொடர்கிறேன்

 5. அத்தனை வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.

  ———————-
  அமுதன் நவின்றது:

  நன்றி சந்ரு

 6. kavithai Super

  ——————–
  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: