மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்2, 2009

இது தான் காதலோ?


உனக்கும் எனக்கும் காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
இடைப்பட்ட பொழுதுகள்
எப்போதும் அழகாய்
விடிகின்றன
கவிதையாய்

கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை – இன்றோ
மெளனம் காக்கிறாய்
வலிக்கிறதே

ஒத்த கருத்தோடும்
சிந்தனையோடும்
மாற்றுக் கருத்தில்லா
மாணிக்கங்களாய் மிளிர
நாமென்ன
கொள்கைக்காய் கை கோர்த்தவரா?

குடும்பச் சமையலில்
குழப்பங்கள் தானே குழம்பு
ஊடல்கள் தானே உப்பு

உன்னை நான் அனுசரிக்க
என்னை நீ தினம் சகிக்க
முரண்பட்ட கருத்துகள்
முதிர்வடையும் வரை
நிலாவொளியில் கதை பேசி
முடிவெடுக்காமலேயே
தூங்கிப்போவோமே
இது தான் காதலோ?


Responses

  1. அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை. அப்படியே அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    *****************************************

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா

  2. அருமையான கவிதை கவிஞரே வாழ்த்துக்கள்

    “குடும்பச் சமையலில்
    குழப்பங்கள் தானே குழம்பு
    ஊடல்கள் தானே உப்பு”

    குழப்பங்களை கண்டு குழம்பி திரிவதும், ஊடல்களை கண்டு உதறித் தள்ளுவதும் நியாயமா?

    எந்த காதலுக்குள் குழப்பங்கள் இல்லை, ஊடல்கள் இல்லை? இவற்றுக்காக உதாசீனம் செய்யலாமா?

    *****************************

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சிந்தனா. காதலில் ஊடல் சுகம். ஊடல் மட்டுமே காதலாகாது. திருமணச் சோற்றில் காதல் ரசம் கலக்கப்படவேண்டும். கருவேப்பிலை போல் ஆகிவிடக் கூடாது

  3. ////குடும்பச் சமையலில்
    குழப்பங்கள் தானே குழம்பு
    ஊடல்கள் தானே உப்பு///

    ரசித்த வரிகள்….

    கவிதை அருமையாக இருந்தது – வாழ்த்துக்கள்……..

    ————————————————

    மனம் திறந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சப்ராஸ். இடைவிடாமல் நீங்கள் பின்னுட்டம் அளிக்கிறீர்கள். நன்றி

  4. arumayana kavithi

    ==============

    அமுதன் நவின்றது:

    நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: