மன்னார் அமுதன் எழுதியவை | ஓகஸ்ட்23, 2009

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் – ஓகஸ்ட் 2009


இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதரன் மண்டபத்தில் 23.08.2009 அன்று நடைபெற்றது. ஆதிரை, புல்லட், வந்தியத்தேவன், ஏஆர்வி.லோசன் ஆகியோரின் நன்முயற்சியால் இவ்வொன்றுகூடல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், ஒன்றுகூடலுக்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சிறப்பாக நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

புல்லட்டின் வரவேற்புரையுடன் ஒன்றுகூடல் காலை 9.15மணியளவில் தொடங்கியது. 10முதல் 15 பெண் பதிவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை வெற்றி எப்.எம் ஒலிபரப்பாளர் சதீஸ் நெறிப்படுத்தினார். சந்திப்பின் சிறப்பு அதிதி சிரேஷ்ட ஒளி, ஒலிபரப்பாளர் எஸ்.எழில்வேந்தன் சிறப்புரை ஆற்றினார். அதன் பின்னர் ‘வலைப்பதிவும் சட்டமும்’ என்ற தலைப்பில் நண்பர் சுபானு கருத்து பகிர்ந்தார். பதிவர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து “திரட்டிகள்” என்ற தலைப்பில் மருதமூரானும், பதிவுலகும் அனுபவமும்’ என்ற தலைப்பில் பதிவர் லோஷனும் “வலைப்பதிவும் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் பல பயனுள்ள தகவல்களை சேரன் கிரிஸும் அளித்தனர். மேலதிகமாக அவர் யாழ்தேவி, மாயாலங்கா, யாழ்தேவி சஞ்சிகை அறிமுகத்தையும் வழங்கியிருந்தார்.

யாழ்தேவி திரட்டி பற்றிய சர்ச்சையும், பெயர்மாற்றம் பற்றிய கருத்துப் பகிர்வும் பல பதிவர்களின் மனவுளைச்சலை வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஒருங்குறி தொடர்பான தட்டச்சுப் பலகை தொடர்பான கருத்துக்கள் பயனுள்ளதாக அமைந்தது.

முழுநிகழ்வுகளும் http://www.livestream.com உதவியுடன் நேரடியாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டதுடன் 50க்கும் மேற்பட்ட பதிவர்களும், வலையுலக நண்பர்களும் இதனைக் கண்டுகளித்தனர்.

இலங்கை வலைப்பதிவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கக் கிடைத்தது அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி தரும் விடயமாக அமைந்தது. வயதுக்கேயுரியே ஆரவாரத்துடனும், குதூகலிப்புடனும் பதிவர்கள் பங்கேற்றதுடன், சிரிக்க சிரிக்கக் கதைத்து ஒன்றுகூடலை மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டனர்.

இலங்கையின் இளம் பதிவராக 6ஆம் வகுப்பு படிக்கும் யசீர் நிசாருதீன் கலந்து கொண்டமை வலைப்பதிவர் ஒன்றுகூடலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது.

மேலும் வலைப்பதிவுகளைப்பற்றி தேசிய பத்திரிக்கைகளில் எழுதுவது தொடர்பாகவும் கருத்து முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாக பேசுகையில் நண்பர் விஜயரூபன் “மேமன் கவி” அவர்கள் இலக்கிய மாசிகை மல்லிகையில் “மின்வெளிதனிலே” எனும் பகுதியில் இலங்கைப் பதிவர்களை அறிமுகப்படுத்தி வருவதற்கு தன் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சிறுவர் செய்த வெள்ளாமையாக இல்லாமல், இந்நிகழ்வு எவ்வித பிரச்சினைகளும் இன்றி இலக்கியக்கூட்டங்களைப் போல நடந்துமுடிந்தது.

குறிப்பு:
ஒன்றுகூடலில் கலந்து கொண்ட அனைவரின் பெயர்ப் பட்டியலும் இல்லாத காரணத்தினால் உரையாற்றியவர்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

வண்ணத்திரையில் பதிவர்களைக் காண சுட்டி இங்கே:


Responses

 1. பதிவர் சந்திப்புக்கு உரமூட்டிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

  *********************************************

  பின்னூட்டம் தந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி. பதிவர்கள் அனைவரும் குழந்தை மனம் படைத்தவர்கள். அதனால் இளம் பதிவர், வயதான பதிவர் என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.

 2. //வயதுக்கேயுரியே ஆரவாரத்துடனும், குதூகலிப்புடனும் பதிவர்கள் பங்கேற்றதுடன், சிரிக்க சிரிக்கக் கதைத்து ஒன்றுகூடலை மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டனர்.//
  சில மூத்த அறிஞர்களும் கலந்து கொண்டார்களே… அவர்கள் இதை வாசித்தால் தங்களை இளைஞர்கள் ஏன நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். 😉

 3. வாழ்த்துக்கள் எனககு ஒரு சிறு வருத்தம், உங்களது புத்தகத்தை வாங்கி வருவோம் என எண்ணியிருந்தேன் சந்திப்பு முடிந்ததும் அது மறந்து விட்டது, அதை கண்டியில் வாங்க முடியுமா? அவ்வாறாயின் எங்கே?

  தாங்கள் கொழும்பு வரும் போதோ அல்லது கொழும்பில் உள்ள உங்கள் நண்பர்கள் மூலமோ புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தங்கள் ஆர்வத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

 4. இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் – ஓகஸ்ட் 2009 சிறப்பாக நடைபெற்றதை அறிந்து மகிழ்ச்சி. அதில் கலந்து கொள்ள முடியாத ஏக்கம் மனதை வருத்துகிறது.

 5. ஆரம்பமே இப்படி என்றால் இனி என்ன பதிவுலகில் புரட்சிகள் படைப்பது நிட்சயமே.

 6. கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 🙂

 7. உங்கள் பதிவும் எங்கள் நினைவலைகளை மீட்டன..

  உங்கள் நூல் அருமை.. வாசித்தேன்.. வாழ்த்துக்கள்

  ******************************************

  புத்தகம் பற்றிய கருத்திற்கும், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: