மன்னார் அமுதன் எழுதியவை | ஓகஸ்ட்20, 2009

விட்டு விடுதலை காண் நூல் வெளியீடு


இலங்கை வலைப்பதிவர் மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” கவிதை நூல் வெளியீட்டு விழா 16.08.2008 ஞாயிற்றுக் கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றெது.

frontpageநாட்டில் இடம்பெயந்திருக்கும் மற்றும் போரில் இறந்துபோன பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்குமாக ஒரு நிமிட மெளன பிராத்தனையுடன் இவ்விழா ஆரம்பித்தது. கெளரவ அதிதியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். இமாமும், சிறப்பு அதிதியாக கொழும்பு

மாவட்ட திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிரதம அதிதியாக அழைக்கப்பெற்றிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் கெளரவ. ரிஷாத் பதியுதீன், தன்னால் சமூகமளிக்க முடியாமைக்காக வருத்தத்தையும், வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியிருந்தார்.

கவிதை நூலினை எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய மேலாளரும் வெளியீட்டாளருமான ஓ.கே.குணநாதன் வெளியீட்டு உரையுடன் வெளீயீட்டு வைத்தார்.

நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் தாயார் கெளரவ அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

நூலின் ஆய்வுரையை மேமன்கவியும் நூல் நயம் பற்றிக் குறிஞ்சி இளந்தென்றல் கவிஞர் கனிவுமதியும், வெளியீட்டுரையை ஓ.கே.குணநாதனும், விசேட உரையை கலைவாதி கலீலும் ஆற்றினர்.

வெளியீட்டு விழாவிற்கு இலங்கை தேசியப்பத்திரிக்கைகளான வீரகேசரி வாரவெளியீடு, தினக்குரல், தினகரன் ஆகியனவற்றின் ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர். மேலும் சுடரொளி,மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி போன்ற பத்திரிக்கைகள் விழாதொடர்பான நிகழ்வுகளை செய்தியாகப் பிரசுரித்து

இலங்கைத் தீவு முழுவதும் இவ்விழா பற்றிய செய்தியை அறியத்தந்திருந்தனர். அதே தினம் (ரேடியோ சிலோன் )இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவை 9.45 முதல் 10.00 மணிவரை இந்நூல் வெளியீடு தொடர்பாக ஒரு நேரடி நேர்காணலையும் ஒலிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களும், பல சிறந்த வாசகர்களும், இலங்கையின் இலக்கியவாதிகளும் கலந்து கொண்டு உரைகளை ரசித்தமை உரையாற்றியவர்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தருவதாக அமைந்தது.

நட்பின் அழைப்பையேற்று இலங்கையின் முதல்நிலைத்திரட்டியான யாழ்தேவியின் நிர்வாகக் குழுவிலிருந்து சேரன் கிருஸ்ணணும், வீரகேசரியின் சித்தன் பதில்கள் சித்தனும் கலந்து கொண்டு சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக நடாத்த உதவிய நண்பர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும், பின்னூட்டம் தந்து உற்சாகப்படுத்தியவலைப்பதிவர்களுக்கும் நன்றியுரையில் நினைவுகூறப்பட்டனர்.

விழாநிகழ்வுகளின் ஒளிப்படங்களுக்கான சுட்டி

வண்ணத்திரையில் இங்கு:

குறிப்பு:

விழா நிகழ்வு தொடர்பாக ஆர்வமுடன் மின்னஞ்சல் மூலம் விசாரித்தவர்களுக்கும், வாழ்த்துக்கள் கூறிக்கொண்டவர்களுக்கும் நன்றி. மேலும் பல பதிவர்கள் விழா தொடர்பான பதிவை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அன்புக்கட்டளை விடுத்திருந்தனர். உங்கள் அன்புக்கு நன்றி. பணிப்பளு காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பு 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது. வலைப்பதிவர்களை சந்திக்கும் மகிழ்ச்சியில் நானும். வலைப்பதிவர் ஒன்றுகூடலைப் பற்றிய பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்


Responses

 1. அமுதன்……

  தங்களின் ‘விட்டு விடுதலை காண்’ கவிதைத் தொகுப்பினை நேற்று இரவு வாசிக்க கிடைத்தது. நண்பர் சேரன்கிரிஷ் கவிதை நூலை என்னிடம் தந்திருந்தார்.

  தங்களின் கவிதைகளில் ‘என் தோழி’ மற்றும் ‘எமது கிராமம்’ ஆகிய தலைப்பிலான கவிதைகள் என்னை கவர்ந்துள்ளன. மற்றைய கவிதைகளிலும் தங்களின் தேடல் தெரிகிறது வாழ்த்துக்கள்.

  உயர்பாதுகாப்பு வலயத்துக்குள்ளும் பாதுகாப்பின்றி எமது கிராமம்….. என்ற வரிகள் அருமை.

  தங்களின் கவிதை தொகுப்பில் மொழி, இனம் மீதான பற்றுறுதிகளே அனேக இடங்களில் காண முடிந்தது. அத்துடன், எதிர்கால வாழ்க்கை துணை குறித்து தாங்கள் காண்கின்ற கனவுகளும் பலிக்க வாழ்த்துகிறேன்.

  *************************************
  நன்றி மருதமூரான்,

  பின்னூட்டங்கள் தான் என்னை எழுத உற்சாகப்படுத்துகின்றன. உங்களை நேரடியாகச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

 2. வாழ்த்துக்கள் நண்பரே!! உங்ககள் சேவை தொடரட்டும்

  ******************************

  நன்றி யோ.

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

 3. hello Daniel,

  It’s glad to hear that your program was held successfully , I really missed it, Congratulations on your Success & may God bless you for all your future endeavors regarding this

  Regards,
  Jeni

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜெனி

 4. Hi dj,

  your dream became true. It was very nice programme. all the best further and further you continue your writing regarding this.

  With regards,
  Rin

  ****************************************

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ரினோ


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: