எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் வெளியீடாக வெளிவரும் மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” கவிதைப் புத்தக வெளியீட்டு விழா 16.08.2009 அன்று மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழா அருட்பணியாளர் தமிழ்நேசன் (மன்னார்) அவர்களின் தலைமையில் நடைபெறுவதுடன், மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் கௌரவ ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.இமாம் கௌரவ அதிதியாகவும், திருமறைக்கலாமன்றத்தின் கொழும்பு இணைப்பாளர் திரு. அம்புறோஸ் பீற்றர் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் இந்னூல் தொடர்பான ஆய்வுரையை மேமன் கவியும் , நூல் நயம் பற்றி கவிஞர் கனிவுமதியும், வெளியீட்டுரையை ஓ.கே.குணநாதனும், விசேட உரையை கலைவாதி கலீலும் ஆற்றவுள்ளனர்.
முதல் பிரதியைப் பிரதம அதிதியிடமிருந்து நூலாசிரியரின் தாயார் பெற்றுக்கொள்வார்.
இவ்விழாவில் நிகழவிருக்கும் நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பரீன் அப்துல் காதர் நெறிப்படுத்தவுள்ளார்.
புத்தகத்தின் பெயர்: “விட்டு விடுதலை காண்”
ஆசிரியர்: மன்னார் அமுதன்
புத்தக வெளியீடு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
அழைப்பிதழின் முன் பக்கத் தோற்றத்தை இங்கே காணலாம்: http://www.tamilauthors.com/7.html
வெற்றி கரமாய் வெளியீட்டு விழா அமைய வாழ்த்துக்கள்…
உங்கள் கவிப் பயணம் தொடரனும், ஏனெனில் உங்கள் கவிதைகளில் நான் அடிக்கடி மெய் மறக்கிறேன்….
வாழ்த்துக்கள்…..
By: சப்ராஸ் அபூ பக்கர் on ஓகஸ்ட்10, 2009
at 9:33 பிப
நூல் வெளியீடு சிறப்புற நிகழ வாழ்த்துக்கள்.
சாந்தி
By: சாந்தி on ஓகஸ்ட்10, 2009
at 10:48 பிப
தங்களின் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக மலர எனது நெஞ்சங்கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே!
அன்புடன்..
ஓசை செல்லா , கோவை
By: Osai Chella on ஓகஸ்ட்11, 2009
at 11:13 பிப
“விட்டு விடுதலை காண்” என கவிதை இலக்கிய பயணம் செய்யும் தங்களுக்கு வாழ்த்துக்கள்
By: எம்.கே.முருகானந்தன் on ஓகஸ்ட்12, 2009
at 5:06 முப