மன்னார் அமுதன் எழுதியவை | ஓகஸ்ட்5, 2009

“இலங்கைத் திரட்டிகளின் பாரட்டத்தக்க இலக்கிய சேவைகள்”—- ஒரு பார்வை


யாழ்தேவி“யாழ்தேவி” என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது புகைவண்டி மற்று தொடருந்து எனக்கூறப்படும் இரயிலைத் தான். யாழ்தேவி தொடர்பாக ஒரு மிகப் பிரபலமான பாடலுமுண்டு. “யாழ்தேவியில் நாம் காதல் செய்தால், யாழ்மீட்டுமே இரயில் தண்டவாளம்” என்று நீண்டு செல்லும் அப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஓர் உற்சாக உணர்வு பீறிடும். ஆனால் இப்பதிவு அத்தொடருந்து பற்றியதல்ல.

இலங்கை வலைப்பதிவர் திரட்டிஇப்பதிவானது இலங்கை வலைப்பதிவாளர்களின் பதிவுகளை உடனுக்குடன் திரட்டி வரும் “யாழ்தேவி”, “இலங்கை வலைப்பதிவர் திரட்டி” , மற்றும் “பூச்சரம்” போன்ற திரட்டிகளின் அளப்பரிய பணி பற்றியது. இலங்கை வலைப்பதிவாளர்களிடம் தமக்கென ஒரு திரட்டி இல்லையே என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்து வந்த நிலையில் உருவாக்கப்பட்ட “இலங்கை வலைப்பதிவாளர் திரட்டி” அந்த மனக்குறையைத் தீர்த்துவைத்தது. எனினும் தனித்தியங்காமல் பேஜ் பிளேக் (pageflake) எனும் வலைப்யினூடாக இயங்கிவருவதைத் தவிர வேறொரு குறையையும் நாம் கூறமுடியாது. இது தொடர்பாக நான் மின்னச்சல் மூலமாகவும், உடனடிக் கணணி தகவல் பரிமாற்றம் (instant chat) மூலமும் சில கருத்துக்களை “இலங்கை வலைப்பதிவாளர் திரட்டி” நிர்வாகியுடன் பகிர்ந்திருந்தேன்.

இந்நிலையில் தான் “யாழ்தேவி” மற்றும் “பூச்சரம்” போன்ற திரட்டிகளின் வருகை உற்சாகத்தைத் தந்தது. இவ்விரண்டு திரட்டிகளும், திரட்டிகளுக்கே உரித்தான தனிச்சிறப்பான முறையில் பதிவுகளைத் திரட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. “யாழ்தேவி” திரட்டியானது தமிழ் மணத்திற்கு இணையான பண்புகளைக் கொண்டுள்ளதுடன் வலைத்தள முகவரியைக் கொடுத்துப், பதிவுகளைப் புதுப்பித்துக் கொள்ள கூடிய நிலையில் இயங்குகிறது. மேலும் அலைபேசியூடாக செய்திப்பரிமாற்றத்தையும் (mobile reporter) யாழ்தேவியுடன் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது மேலதிகப் பயன்பாடாகவும் உள்ளது. இதன் மூலம் பிரதேசச் செய்திகளை உடனுக்குடன் தரவேற்றிக் கொள்ள முடிகிறது.

பூச்சரம்அதேநேரம், “பூச்சரம்” திரட்டியானது தமிழ்வெளி மற்றும் திரட்டி.கொம் போன்று வலைப்பூவில் மேற்கொள்ளும் பதிவுகளை தன்னிச்சையாகவே புதுப்பித்துக்கொள்ளும் அமைப்புடன் இயங்கிவருகிறது. இதையொத்த முறையிலேயே இலங்கை வலைப்பதிவர் திரட்டியும் இயங்கி வருகிறது. இருப்பினும் பூச்சரம் இன்றுவரை தனியான டொமைன் (domain) பெயர் இன்றி blogspot-ல் இயங்கிவரும் ஓர் திரட்டியாகவே சிறப்பாக இயங்கி வருகிறது. பூச்சரம் திரட்டியானது “மாதமிருமுறை” முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் பதிவர்களிடையே திறந்த போட்டியை நடாத்துவதுடன் சிறந்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து “வெள்ளிமலர்” விருது கொடுத்து ஊக்குவித்து வருவதும் பாராட்டத்தக்க விடயமாகும்.

“யாழ்தேவி” சிறந்த பதிவர்களைச் சுழற்சி முறையில் தேர்ந்தெடுத்து“ நட்சத்திரப் பதிவர்” என்று அறிமுகப்படுத்துகிறார்கள். இதன் மூலம் நம் தளத்திற்கு அதிக வாசகர்களையும், பயனர்களையும் பெற்றுக் கொள்ள முடிவதுடன், ஒரு புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. 23-06-2009 ல் இருந்து ஒரு வார காலத்திற்கு என்னையும் “நட்சத்திரப் பதிவர்” -ஆகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதற்கு இவ்விடத்தில் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்.

இதைவிட சற்றுவித்தியாசமான முறையில் “யாழ்தேவி” திரட்டியின் நிர்வாகக் குழுவினர் ஒரு சஞ்சிகையையும் வெளியிட உள்ளது மிகமிக மனமகிழ்ச்சி தரும் விடயமாக உள்ளதுடன், இது காலத்தின் தேவையாகவும் உள்ளது.

சுருக்கமாகச் சொல்வதென்றால் யாழ்தேவி திரட்டியானது ஒரு திரட்டிக்குரிய பணிகளுடன் நின்றுவிடாமல், அச்சு ஊடகமாக இலக்கிய வளர்ச்சிப் பணியிலும் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ளுதல் பதிவாளர்கள் மத்தியிலும், இலக்கிய வட்டங்களிலும், இணையதள இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு பங்காளியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவையெல்லாம் இவ்வாறிருக்க, மனக்கஷ்டத்துடன் சொல்ல வேண்டிய விடயமொன்றும் உள்ளது. அது என்னவென்றால் நமது திரட்டிகளுக்கு விஜயம் செய்யும் இணைய பயனாளிகளின், வாசகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது தான். இதற்குக் காரணம் நம் நாட்டுத் திரட்டிகள் இன்னும் பரவலாக பதிவுலகைச் சென்றடையவில்லையோ என்றொரு கருத்தும் தொக்கி நிற்கின்றது. நம் பதிவர்கள் இத்திரட்டிகள் பற்றிய பதிவுகளைப் பரவலாக எல்லாத் திரட்டிகளிலும் இடுவதன் மூலம் இதனைச் சரி செய்யமுடியும் என்பது என் கருத்தாக முன்வைக்கிறேன்.

திரட்டிகளின் நிர்வாகக் குழுவினருக்கான ஒரு கோரிக்கை:

வலைத்தளங்களையும், வலைப்பூக்களையும் இணைத்து ஒன்று படுத்தும் நீங்கள் மேலும் சிறிது முயற்சி மேற்கொண்டு இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்தக் கூடாதா? இக்கேள்விக்கான விடையினை அறியும் ஆவலுடன்….. அமுதன்


Responses

 1. உண்மைதான்.பதிவர் சந்திப்புக்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்படவேண்டும்.இலங்கை தமிழ்ச்சங்கமும் இதில் ஆர்வம்கொண்டுள்ளது போல் தெரிகிறது.
  பார்ப்போம்

  ————————————————-

  உடனடி பின்னூட்டத்திற்கு நன்றி சேரன்

 2. வணக்கம் நண்பரே

  இலங்கையிலிருந்து வலைப் பதிவு செய்யும் தங்களை கொழும்பு வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாத இறுதியில் நடாத்த திட்டமிட்டுள்ளோம், தங்களின் வருகை மற்றும் ஏனைய விமர்சனங்கள் கருத்துக்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ(vanthidevan@gmail.com) அல்லது புல்லட்டின் மின்னஞ்சலுக்கோ (bullettheblogger@gmail.com) தெரிவிக்கவும்.
  நன்றி
  அன்புடன்
  வந்தியத்தேவன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: