மன்னார் அமுதன் எழுதியவை | ஜூலை12, 2009

வல்லமை தாராயோ?


இலங்கைத் தாயே – எம்மை
ஈன்றவள் நீயே – எம்கை
விலங்கை யுடைத்துக் – காலில்
சலங்கை சினுங்க விட மாட்டாயோ ?

கலங்கரை விளக்கே தாயே
கரையறியா தோர்க்கே நீயே
மடைக்குள் அடைபட்ட மக்கள் வெள்ளத்தை
மரணத்தி னின்று நீ காப்பாயோ?

உரலினுள் விழுந்த பரல்களின் மேலே
உலக்கை விழுந்திடித்த கதையாக – உன்
கரங்களின் முன் நீளும் விரல்களின்
சிரக் கண்களைச் சீவி நீ எறிவாயோ?

ஈன்றவளே நீ, அறிவாய் அம்மா
இதயச்சுத்தி யெல்லாம் சும்மா

செய்தி:  'சேவ் தமிழ் குரூப்' என்ற அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த இந்த கருத்தரங்கில் பேசிய அருட்தந்தை ஜெகத் கஸ்பார் பேசியது,' இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் உள்ள அனைத்திலும் இன அழிப்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

செய்தி: 'சேவ் தமிழ் குரூப்' என்ற அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த இந்த கருத்தரங்கில் பேசிய அருட்தந்தை ஜெகத் கஸ்பார் பேசியது,' இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் உள்ள அனைத்திலும் இன அழிப்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.


மடியைப் பங்கிட மாக்கள் கூட்டம் – உன்
மைந்தரை வதைப்பதை உணராயோ?

கோடி மக்கள் சுகமாக – மறு
கோடியில் மக்கள் சவமாக – அதைப்
பாடி உறைகிறேன் மரமாக – நீ
கேட்டு உருகிட வாராயோ?

மூத்தவன் கலைஞன், இளையவன் இராவணண்
கூட்டிலே இடையில், பொது வுடமையும் இணைந்தே
நலிந்தோர் முதுகில் விதைத்த தம் வலிமையை
மாற்றிட வல்லமை தாராயோ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: