”அமுதனின் பக்கங்கள்” வலைப்பூவை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வலைப்பூவைப் பற்றிய அறிமுகக் குறிப்பும் “உதிரும் பூவின் மலரும் ஞாபகம்” கவிதையையும் மே மாதம் மல்லிகையில் வெளிவந்துள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். (அதற்கு முன் blogspot-ல் இருந்தேன்.)
இப்பத்தியானது 2009 ஆம் ஆண்டு மே மாத “மல்லிகை” யில் “மின்வெளிதனிலே” எனும் பக்கத்தில் கவிஞர் மேமன் கவியினால் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேமன் கவி அவர்கள் தனது இனிய தமிழால் இளம் படைப்பாளிகளை அரவணைத்துக் கொள்பவர் என்பதுடன், காலத்தோடு பயணிக்கும் கவிஞர். இன்றைய கணணியுகத்தின் தொழிற்பாடுகளைச் சிறப்பாக கையாளக் கூடியவர். அவரைப் பற்றி இலக்கிய உலகிற்கு நான் சொல்லி பலர் அறிய வேண்டும் என்பது அவசியமல்ல. நான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த சிறுசெடி.
விதையுடைத்து, நிலம் கிழித்து வெளிவரும் இச்சிறு செடியின் மேல் வானம் மழை ஆசி நீரைத் தூவியதைப் போலவே “மல்லிகையில்” வெளிவந்துள்ள இப்பத்தியைக் கருதுகிறேன். மேமன் கவிக்கும், மல்லிகைக்கும் நன்றி.
ஜனரஞ்சக அச்சு ஊடகங்களில், என் ஆக்கங்களை வெளிக்கொணரப் பலமுறை முயன்று, பலரது கால்களைப் பிடித்தால் தான் நோக்கம் நிறைவேறும் என்றறிந்ததும் அதைக் கைவிட்டேன். இலங்கையிலிருந்து வெளிவரும் பல இலக்கிய சஞ்சிகைகள் கூட பல எழுத்தாளர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலையில், ஏட்டில் அடைந்து கிடக்கும் என் கவிதைகள் காற்றில் வலம் வரவேண்டும் என்பதற்காய், கவிதைகளுக்கென்று நான் திறந்த கதவு தான் “அமுதனின் பக்கங்கள்”. இன்று 100க்கும் மேற்பட்ட ஆக்கங்களுடன், 130க்கும் மேற்பட்ட தரமான பின்னூட்டங்களுடன் ஆறு சிறந்த திரட்டிகளால் திரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் எனது ஆக்கங்கள் இவ்வலைப்பதிவில் மட்டுமின்றி, இளமைவிகடன், அதிகாலை போன்ற மின்-ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டது எனது படைப்புகள் தரம் மிக்கவை தானா ? என்ற நீண்ட நாள் சுயபரிசோதனையிலும் என்னை வெற்றி பெறச் செய்தது. இனிவரும் காலங்களில் மேலும் பல இந்திய மின்னூடகங்களில் என் படைப்புகள் வெளிவரும் என்று நம்புகிறேன்.
சக வலைப்பதிவாளர்களும் நண்பர்களும் கொடுத்த பின்னூட்டத்தினால் மேலும் மேலும் வளர்ந்து இன்று “ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிடும்” ( வெளியிட பதிப்பகம் ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்) முயற்சியில் கடைசிக் கட்டத்தில் உள்ளேன். உங்கள் நல் ஆசிகளுடன் ஓகஸ்ட் மாதம் கவிதைத் தொகுப்பு வெளிவரும்
பணிவன்புடன்
அமுதன்
பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..
By: பூச்சரம் on ஜூன்22, 2009
at 5:58 பிப
//மே மாதம் மல்லிகையில் வெளிவந்துள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.//
வாழ்த்துக்கள் நண்பனே
//“ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிடும்” //
சிறப்பாக வெளிவர மனம்நிறைந்த வாழ்த்துக்கள்
——————————————————
அமுதன் நவின்றது:
நன்றி.. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
By: ஜீவராஜ் on ஜூன்24, 2009
at 10:04 பிப