மன்னார் அமுதன் எழுதியவை | ஜூன்11, 2009

மரணிக்க முன் ஒரு நிமிடம்


மரணிக்க முன் ஒரு நிமிடம் stop genocide
எழுதிவிடுகிறேன்
உங்கள் தீராத
மனப் பக்கங்களில்

ஒவ்வொரு முறை
இதயம் துடித்து
அடங்கும் போதும்
ஓராயிரம் எண்ணக் குமுறல்கள்
இதயத்தின் ஓரத்தில்
உடைப்பெடுத்து
ஆங்காங்கே அடைத்துப்
பின் பெருவலியோடு
மூளையில் மையம் கொள்ளும்

பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைந்துக் கொண்டவை தான்
எனக்கோ விரல்களின் வழியே
வீழ்கின்றன

இவைகளை
எழுதாத இரவுகள்
இனப் படுகொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன

ஒருபுறம்
இனங்களுக்கிடையே போராட்டம்
மறுபுறம்
ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம்
எதைத் தொட
எதை விட… தெரியவில்லை

இரவின் நிசப்தத்தைக்
கிழித்துச் செல்லும்
பல்குழல் எறிகணை போல்
ஓங்காரமாய் ஓலமிடும்
இனவெறிகள்

கறைகளோடே
சுத்தம் பற்றிப் போதிக்கும்
நம் சாதீயச்
சவர்க்காரங்கள்
எத்தனைமுறை வெளுத்தாலும்
கரைவதேயில்லையே ஏன்?

அவ்வப்போது
ஜனநாயக நீரோடையில்

செய்தி : சிறுமி வருஷாவைக் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலைசெய்த நபர் போலீஸாரால் சுட்டுக் கொலை

செய்தி : சிறுமி வருஷாவைக் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலைசெய்த நபர் போலீஸாரால் சுட்டுக் கொலை


ஞானஸ்நானம் பெற்று
சிறுவர்களைக் கடத்திக்
கைகளைக் கட்டிக்
கழுத்தை அறுக்கும்
பிரிவின் வலியறியா
அரசியல் பெருச்சாலிகளின்
கைக்கூலிகள்

கையிற்கு கையாலும்
வாயிற்கு வாயாலும்
விடை தருவோர்க்கு

ஏனொ
எழுத்திற்கு மட்டும்
எழுத்தால் பதில் சொல்வதில்லை

இவைகளை
எழுதாத இரவுகள்
இனப் படுகொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன


Responses

 1. சுத்தம் பற்றிப் போதிக்கும்
  நம் சாதீயச்
  சவர்க்காரங்கள்
  எத்தனைமுறை வெளுத்தாலும்
  கரைவதேயில்லையே

  //seems different.nice

  *********************
  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சேரன்.

  பணிவன்புடன்
  அமுதன்

 2. உயிருள்ள,
  உணர்வுள்ள ,
  உரமுள்ள ,
  உங்கள் பேனைக்கு எனது வாழ்த்துக்கள் .

  ====

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ஐயா.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: