மன்னார் அமுதன் எழுதியவை | மே27, 2009

நாமும் சாதிக்கலாம்..


சகோதரனே, சகோதரியே, தமிழ் பேசும் நல்லுலகமே,

உங்கள் அனவருக்கும் அமுதனின் வணக்கம்,

youngwomanநண்பர்களே, குடிப்பவர்கள் கூறும் காரணங்கள் ஆயிரம், ஆயிரம். இதைக் காது கொடுத்துக் கேட்பவர்களாக நாம் இருக்கிறோமா ? இல்லை குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்று உதாசீனப்படுத்துகிறோமா?

சகோதரர்களே, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்கையில் பலரைச் சார்ந்திருக்கிறான். 12 வயது வரை பெற்றோர் சொல்வதைக் கேட்பவன், 15-18 வரை தனக்கென ஒரு நண்பர்கள் உலகத்தை ஏற்படுத்திக் கொள்வான். 20 வயதில் தான் அறிந்தவற்றைச் செயல்முறைப்படுத்தத் துடிப்பான். இது வரை அவன் அறிந்துகொண்ட கல்வியறிவும், தெரிந்துகொண்ட நண்பர்களும் தான் வாழ்கைக் கட்டிடத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள்.

எனக்கும் உங்களுக்கும் உருவாக்கித் தரப்பட்ட உறுதியான அத்திவாரம் நம் நண்பர்களுக்குச் சிறிது கலப்படப் பொருட்கள் கலந்து அமைக்கப் பட்டிருக்கலாம். சமுதாயத்தில் நமக்கும் இப்படிச் சில பாதிக்கப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லது இருந்தார்கள் என்பதை எவரும் மறுதலிக்க முடியாத உண்மை. கலப்படத்தை நீக்க வேண்டிய பொறுப்பை நம் கைகளில் ஏற்றக்கொள்வோமே. நண்பர்களாக இருக்கும் நானும், நீங்களும் தான் இவர்களுடைய ஆதங்கத்தைக் கேட்க வேண்டும். பலரிடம் மறைக்கும் உண்மைகளை நண்பர்களாகிய உங்களிடம் மனம் திறப்பார்கள். ஒருவனுடைய இருண்ட வாழ்வில் உங்களால் சிறு ஒளிக்கீற்றை உண்டு பண்ண முடியுமானால், அதைச் செய்யத் தவறாதீர்கள்.

நட்புக்கு இலக்கணமான கோப்பெருஞ்சோழனும்,பிசிறாந்தையாரையும் போல் வாழ முடியா விட்டாலும், முயற்சி செய்வோம்;. நண்பனைப் பற்றிக் கூறு; உன்னைப்பற்றிச் சொல்கிறேன் எனும் அளவிற்கு நண்பர்கள் நம் வாழ்க்கையில் இடம் பிடிக்கிறார்கள். நம் வாழ்நாளின் மிகத் துடிப்பான காலத்தை பள்ளியில் கல்விக்காக முதலீடு செய்த நாம் வாழ்கைக் கல்வியை நண்பர்களிடமே பெறுகிறோம்.

“நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. உங்களின் மனதில் தான் இருக்கிறது”. நண்பன் என்பதற்கு நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச் சொல்லி இன்பம் தரும் கிளியாகவோ, உங்கள் சந்தோசத்தின் போது வாலையாட்டியும், துக்கத்தின் போது தானும் சாப்பிடாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு நம் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் நாயாகவோ கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட புத்தகங்களை உங்களது நண்பனாக்கிக் கொண்டால் சிறந்த மனிதனாவீர்கள். உங்கள் உள்ளங்கள் பரந்த வெளியாக இருக்கும் போது உங்களைச் சுற்றி நண்பர்கள் மட்டுமே இருப்பர்கள்.

நண்பர்கள் செய்யும் காரியம் ஏற்புடையதென்றால் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்துங்கள். கைகளைத் தட்டுவதால் உங்கள் ரேகைகள் அழிந்து போய்விடாது. வெற்றியாளர்களே, கைகளைத் தட்ட சோம்பல்படும் நண்பர்களிடம் சொல்லுங்கள் ; அமைதியாக வேடிக்கை பாருங்கள் – என்று. வேடிக்கை பார்த்துக் கொண்டே உங்களுக்குப் பள்ளம் வெட்டுபவர்களிடம் சொல்லுங்கள், போராளிகளைப் போலவே வெற்றி பெறப் பிறந்த எங்களையும் புதைக்க முடியாது; விதைக்க மட்டுமே முடியும் என்று.

என் எண்ணங்களுக்கு நான் கொடுக்கும் வரி வடிவத்தைப் பலர் படித்து என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். இவ்விடத்தில் என் நண்பனுக்கும் எனக்குமிடையில் தொலைபேசியில் நடந்த உரையாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நண்பன்: மச்சி வலைத்தளம் (வெப்) வர வர குப்பையாயிட்டே போகுதுடா.

நான்: அது நமக்கு தெரிந்த விசயம் தானே மச்சி. நாம என்னடா செய்ய முடியும். நீ வேணுமெண்டால் ஒரு புரோகிராம் எழுதி எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணேன்.

நண்பன்: புரோகிராம் ஒண்டும் தேவலை. நீ நினைச்சால் முடியும்.

நான்: (சந்தோசத்தோடு) விசயத்தைச் சொல்லு மச்சி. புது டெக்னோலஜியா. நானும் முயற்சி பண்றேன்.

நண்பன்: டெக்னோலஜியா. அதெல்லாம் ஒண்டுமில்ல. உன்னோட வலைப்பூவ‌ டெலிட் பண்ணினா போதும், எல்லாம் சுத்தமாயிரும்.

ஆம் நண்பர்களே, என் வலைப்பூ குப்பையாகவே இருக்கட்டும். இந்தக் குப்பையில் தான் சில மாணிக்கங்களும் மறைந்து கிடக்கின்றன. அவற்றை மட்டும் கண்டுபிடியுங்கள். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இந்த நண்பனைப் பிரியும் போது நான் அவனிடம் கூறிய வார்த்தைகள்; பாசம் வைப்பது பாவம், உன்னைப் பழகிப் பிரிவதே துயரம்.

இவரைப் போன்ற பிற நண்பர்களுக்கு எனது பதில்:

“முட்களையும் நேசிக்கிறேன்.
நண்பனே, உன் சொற்கள்
ஒருபோதும் என்னைக் குத்துவதில்லை.”

ஒருவர் போற்றும் போதும், தூற்றும் போதும் அவ்வார்த்தைகளுக்கு அடிமையாகாமல் இருங்கள். சிதைவடைவதை எண்ணி அழுகின்ற விதைகள்; ஒருபோதும் மரமாவதில்லை. காலமெனும் உளி என்னையும், உங்களையும், மறக்குடிகளான தமிழினத்தையும் சிதைக்கவில்லை, வடிக்கிறது. எதையும் எண்ணி கலங்கத் தேவையில்லை. நிச்சயம் ஒரு நாள் நாமும் சாதிக்கலாம்.


Responses

 1. இனி இழப்பதற்கு ஏதுமில்லை; கண்ணீரைத் தவிர. அனைத்து வளங்களும் எமது இலங்கைத் தமிழர் மீண்டும் பெறுவர். அருமையான பதிவு அமுதன்.

  ஸ்ரீ….

  *******************

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், பதிவிற்கும் நன்றி ஸ்ரீ

 2. நட்பு பற்றி அழகாகச் சொன்னீர்கள்.

  ———
  அமுதன் நவின்றது:

  மிக்க நன்றி ஐயா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: