மன்னார் அமுதன் எழுதியவை | மே18, 2009

தாயின்-அன்பு


amuthanதாய் இல்லாமல் நாம் இல்லை; தாய் இன்றி உலகில் எவரும் பிறப்பதில்லை. என்பது உலகறிந்த உண்மை. தாய் எனும் சொல் நாடு, மண் ஆறு, கடல், இயற்கை…… மேலும் பலவற்றிற்கு உவமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் தாய் மீது அன்பு செய்வது போல் நாட்டின் மேலும், மனிதர்கள், இயற்கை மற்றும் இதர உயிரினங்கள் மீதும் அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே. இவ்வலைப் பூ தாய் மடியின் இதத்தையும், தாய் நாட்டின் மடியை பங்கிடுவதில் சகோதர இனங்களுக்கிடையே வலுப்பெற்ற ஆயுதக் கலாச்சாரத்தையும், இதனால் தாய் நாட்டிற்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளையும், கடல் தாயின் கோர தாண்டவம், கலாச்சார சீரழிவுகள், பெண்ணுரிமை மற்றும்; சிறுவர் உரிமைகளையும் எடுத்துரைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

அ.. ன்.. பு.. எனும் இந்த மூன்று எழுத்துக்கள் இரத்தத்தில் கலந்து, நரம்புகளை மீட்டி, ஊணர்சிகளை மெருகூட்டி வார்தையாக வரும் பொழுது இந்த உலகையே கட்டி வைக்கும் வல்லமையைப் பெறுகிறது. இத்தகைய அன்பிற்காக ஏங்குவோர் எத்தனை பேர், கிடைக்காமல் இறந்தவர் எத்தனை பேர், கிடைத்ததை இழந்தவர் எத்தனை பேர் அனுபவித்தவர் எத்தனை பேர், ஆசை காட்டி மோசம் செய்வதை போல் அன்பை காட்டி துவம்சம் செய்பவர்கள் எத்தனை பேர் உண்மையான அன்புடன் ஒருவர் பழகினாலும், அதைனை உரசிப் பார்த்து உண்மை, பொய் அறிய வேண்டிய சூழல்.

நம் கண்ணாடி மனதில் கல் வீசி விளையாடும் சமூகத்திலிருந்து நம்மை பாதுகாப்பவள் தாய். சோற்றோடு அன்பையும் சேர்த்தே ஊட்டியவள். வைரத்தைப் போலவே தாயும் பன்முகம் கொண்டவள். கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும், குழந்தைக்காகவும், தன் தேவைகளை தியாகம் செய்தவள். இப்படித்தாங்க chemistry பாடத்தில் fail- ஆகி டீச்சரிடம் செமத்தியா, அழாம (ஏனெண்டா நான் படிச்சது coeducation School) அடி வாங்கிட்டு அப்படியே நேரா வீட்டுக்கு வந்து அப்பாட்ட நாலு குட்டு வாங்கிட்டு ஆள விட்டா போதும் சாமியோவ் எண்டு ஓடிப்போய் அம்மா மடியில தலைய வச்சு ஓன்னு அழுதா இருக்கிற சுகம் இருக்கே.

நான் அழ, அம்மா ஆறுதல் சொல்ல, அப்பாவுக்கு வீடே போர்க்களமாயிரும். திரும்பி வந்து என்னை தவணை முறையில் அடிச்சுப் போட்டு என்ட சத்தம் தாங்கமுடியாம புறமுதுகிடுவார் அப்பா. இப்படி அடிக்கடி அப்பாவை புறமுதுகிட வைத்துள்ளேன். அப்பொழுதெல்லாம் என்னை தலைகோதி, தன்னோடு அணைத்து, கண்ணீரைத் துடைத்து சிறந்த தளபதியாக இருந்தவர் தாய். அப்பாவின் அடிக்கு பயந்து எத்தனையோ குழந்தைகள் வீட்டை விட்டே ஓடுகிறார்கள். அவர்களை ஓடாமல் கட்டிப்போடும் அன்புச் சங்கிலி தாயிடமே உள்ளது.


Responses

  1. SUPER SUPER SUPER……………. NO WORDINDS FOR UR MOTHER SENTIMENTS


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: