வெட்ட வெளி தனிலே – மனம்
வெதும்பி அழுது நின்றேன்
தொட்டணைத்து என்னைத் – தோழன்
தேற்றி அணைத்துக் கொண்டான்
பட்ட மரத்தில் இடி
பாய்ந்து விழுந்தது போல்
சுட்ட சொல் கொண்டு – எனைச்
சுற்றம் துhற்றுகையில் (வெட்டவெளி)
நீச உறவுகளில் – நான்
பாசம் வைக்கவில்லை – மாறு
வேசம் கட்டிக் கொண்டு – அவர்போல்
வாழத் தொpயாததால் (பட்ட மரத்தில்)
அட்டை மனிதர்கள் என்
இரத்தம் குடிக்கையிலே – உடல்
வெட்டைப் படுவதைப் போல்
வலி கொன்று தின்னுவதால் (நீச உறவுகளில்)
very..nice..
by
sowmi
***************
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
பணிவன்புடன்
அமுதன்
By: uumm on மே14, 2009
at 1:40 பிப
தோழமை பற்றிய பதிவு அருமையாகவுள்ளது.
முனைவர்.இரா.குணசீலன்
***********************
நன்றி ஐயா,
தங்களைப் போன்ற முனைவர்களின், பாராட்டுப் பெறுமளவிற்கு என் பதிவுகள் தரமாகவுள்ளது என்று நினைக்கையில் மனம் மகிழ்கிறது
நன்றி
பணிவன்புடன்
அமுதன்
By: முனைவர்.இரா.குணசீலன் on மே15, 2009
at 8:58 முப