மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்6, 2009

உதிரும் பூவின், மலர்ந்த ஞாபகம்


ஒரு உதிரப் போகும் பூ, தான் மலர்ந்த போது,கற்காமல் அனுபவித்த இன்பத்தையும், பின் சோர்ந்து உதிரும் போது படும் துன்பத்தையும் கூறுவதாக இதை அமைத்துள்ளேன். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பெண் இருக்கவேண்டும். பெண்ணே வாழ்க்கையானால்..?

அஞ்சு வயசுல அமச்சிக் கரையில
அம்சவள்ளி கூட அரை நிஜாரோட
ஆத்தங்கரையில ஒரு கூத்து

பத்து வயசுல பாறையில
பள்ளந்தோண்டி, பக்கத்துவீட்டுப்
பத்மாவோட ஓர் ஆட்டம்
ஆமாம், பாண்டி ஆட்டம்

மணலைக் கயிறாக்கி,
வானத்தை வில்லாக்கும் பருவமது
பருவக்கிளர்ச்சியினால் – அவளின்
எழுர்ச்சியினால்
மூவைந்தில் முகத்தில்
ஒட்டிக்கொண்டவை… பருக்கள்

ஓடும் பாம்பைக் குறுக்கில் மிதிக்கும்
பயமறியா வயது; இருபது
புதியதாய் முளைத்தவள் முத்தம்மாள்

மூவைந்தே கொண்ட முத்தம்மாள் – என்னை
முத்தத்தால் நனைத்தாள்
இல்லாத என் மூளையைக் குலைத்தாள்

விவேகமற்ற வீரத்தில்
வாழ்க்கை கொடுத்தேன் – அன்றே
வாழ்வைத் தொலைத்தேன்
ஈருடல் ஓருயிர் ஆனது – புதியதாய்ச்
சில உயிர் கருவானது

ஐந்தாறு வருடத்தில் அவனைக் கண்டாள்
ஆசை கொண்டாள், அறிவை இழந்தாள்
அவளின் மோகத்தீயினில்
நான் விட்டிலாகினேன்
இல்லாத எதையோ தேடி
இருக்குமெனை அன்றே மறந்தாள்

ஆண்டுகள் பல ஆயின
அறுபதும் தேடி வந்தது
இளமையில் கல்வி இல்லாமையால்
முதுமையில் வறுமை என்றுணர்ந்து

கல்லுடைத்துப் படிக்க வைத்தேன்
என் செல்வங்களை
கண்ணிமைக்குள் பொத்தி வழர்த்தேன்
முத்துக்களை
அவர்களும் ஆளாயினர் – அறிவற்ற
என்னை ஆளவுமாயினர்

என் குடிசை மாளிகையானது
மாளிகையருகிலொரு குடிசை
உருவானது – என் செல்வங்கள்
எனக்களித்த மாளிகை; அவர்கள் வீட்டு
எருமைகள் மடம், எவருமில்லை என்னருகில்

ஒருக்களித்துப் படுத்துக்கொள்கிறேன்
கண்ணில் நீர் பெருக,
உதிரும் பூ அழுகிறது,
மலரும் பூக்கள் மீண்டும்… அமச்சிக்கரையில்
ஆடுவதைக் கண்டு…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: